இணைய இதழ்இணைய இதழ் 71தொடர்கள்

பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 7 – கிருபாநந்தினி

தொடர் | வாசகசாலை

பட்டைவால் மூக்கன்

ஆங்கிலப் பெயர் – Bar-Tailed godwit இதன் அறிவியல் பெயர் Limosa lapponica baueri

limosus – muddy 

Lapponia = Lapland – Artic circle

Limosa lapponica baueri – Ferdinand Lucas Bauer (1760–1826) Austrian natural history artist who accompanied the Flinders expedition to Australia 1801–1805.

இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஓவியர். புகழ்பெற்ற தாவரவியலாளர் Norbert Boccius (1729 1806) ஆய்வகத்திதல் வேலை பார்த்தார். இயற்கையை கவனித்ததின் விளைவாக 15ஆவது வயதிலேயே சிறிய (miniature) ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். பிறகு மற்றுமொரு புகழ்பெற்ற ராயல் தாவரவியல் பூங்காவில் தாவரவியல் வல்லுநரான Nikolaus von Jacquin, 1780 ஆம் ஆண்டு லினேயசின் வகைப்பாடு, நுண்ணொக்கி, நிலப்பரப்பு வரைதல் போன்றவற்றை பியுரிக்கு அறிமுகப்படுத்துகிறார். 

ஆக்சுஃபோர்டு பேராசிரியர் ஜான் அவர்களுடன் 1786 ஆம் ஆண்டு கிரீசு மற்றும் ஆசியாவிற்கு பயணம் செய்தார். ஒரு வருடம் கழித்து 1787 டிசம்பர் மாதம் இங்லாந்துக்கு திரும்பினார். அப்பொழுது அவரிடம் தாவரங்கள், விலங்குகள், பறவைகள், நிலப்பரப்புகள் என கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இருந்தன. 

பிறகு ஆஸ்திரேலியா முழுவதும் பயணம் செய்து 350 தாவரங்கள் மற்றும் 100 விலங்குகளின் ஓவியங்களை வரைந்து கொண்டுவந்தார். இதில் பலவற்றிற்கு சரியான வண்ணங்கள் கிடைக்கவில்லை. தலால் இவரே வண்ணக்கலவைகளின் மூலம் புதிய வண்ணங்களை உருவாக்குதலை அட்டவனையாக தயாரித்தார். சனவரி மாதம் 1806 ஆம் ஆண்டு அட்டவணைகளைப் புத்தகமாக வெளியிட்டார். முதன் முதலாக innovative colour-coding technique புத்தகம் வெளியிட்டவர் புயூரே. 

நாஃபோக் தீவுக்கு 8 மாதங்கள் பயணம் செய்ததில் கிட்டத்தட்ட 180 வகையான தாவரங்கள், 300க்கும் மேற்பட்ட விலங்குகளை வரைந்து 1805 ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி இங்லாந்து திரும்பினார். 1806 முதல் 1813 வரை படங்களை மட்டுமே 3 பாகங்களா வெளியிட்டார். 

இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தாவரவியல் பெயரை மேற்கோள் காட்டும்போது இந்த தாவரவியலாளர் பெயரும் (F.L.Bauer) குறிப்பிடப்படுகிறது.

பட்டைவால் மூக்கன் பறவையின் வாழுமிடமும் உணவும் 

பட்டைவால் மூக்கன் உலகில் உள்ள பறவைகளிலேயே நீண்ட தூரத்திற்கு எங்கும் ஓய்வெடுக்காமல் பறக்கும் தன்மை கொண்டது. இப்பறவை ஆர்டிக் பகுதிக்கு சென்று முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. பூச்சிகள் கணுக்காலிகள் மற்றும் மெல்லுடலிகளை உண்டு வாழுகிறது பட்டைவால் மூக்கன்.  இப்பறவை ஈரமான தரை விரிப்பிலும் தாவரங்களுக்கு அருகிலும் முட்டையிடுகிறது. 

வலசை

இலையுதிர் காலத்தில் வடக்கு அலாஸ்காவிலிருந்து புறப்பட்டு கடலோரப் பாதையைப் பின்பற்றி தெற்கு நோக்கி ஆஸ்திரேலியா & நியூசிலாந்து வரை வலசை வருகிறது. இந்தப் பாதை இவற்றின் உணவுக்காவும், ஓய்வெடுக்கவும் பயன்படுத்துகிறது.  சில பறவைகள் இந்தியக் கடலோரங்களிலும் பயணிக்கின்றன. தமிழ்நாட்டில் கோடியக்கரை, இராமேசுவரம், புலிக்காட்டு எரி போன்ற பகுதிகளிலும் காணலாம். 

அழிவிற்கான காரணங்கள்

பட்டைவால் மூக்கன் 1976-77 ல் 11149 ஆக இருந்தது, ஆனால் 1984-85ல் வெறும் 25 பறவைகளே இருந்தன. கிட்டதட்ட 99% குறைந்துள்ளது. இந்த 25 பறவைகளும் தங்கும் இடத்தை டீ என்ற சதுப்புநிலப் பகுதியிலிருந்து ஆல்ட் என்ற சதுப்பு நிலப் பகுதிக்கு மாற்றிக் கொண்டன. பிறகு 79 ஆக அதிகரித்தது. இதே நிலை இப்பறவைகள் வாழும் அனைத்து பகுதிகளிலும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

அழிவிற்கான காரணங்களை ஆராயும்பொழுது 67வகையான தொல்லைகளைக் கண்டறிந்தனர். நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் (31%), நாய்கள் (30%), இராணுவப் பயிற்சி (13%), படகு (7%) மற்றும் விமானங்கள் (7%) இவை அனைத்தும் அவ்வப்போது நடந்தது. ஆனால் குறைவான நேரங்களில் அதிக அளவு (78%) பிரச்சனைகள் டீ சதுப்புநிலத்தில் இருந்தது. வேட்டையாடிப் பறவைகள் (26%), நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் (22%), நாய்கள் (18%), புகைப்படக் கலைஞர்கள் (8%) மற்றும் குதிரை சவாரி (6%) இவை அனைத்தும் தொடர்ந்ததால் பட்டைவால் மூக்கன் வாழ்விடம் வாழத் தகுதியற்றதாக மாறியதால் அதன் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இப்பிரச்சனைகளை தவிர்த்தால் இப்பறவை முற்றிலும் அழிவதிலிருந்து காப்பற்றலாம். 

(தொடரும்…)

kirubhanandhini@yahoo.in

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button