ஒடுக்கப்படுபவன் வெகுண்டு எழுந்தால் ஒடுக்குபவன் நிலைகுலைவான், புரட்சி வெடிக்கும், புது காலம் பிறக்கும். இதுக்கு இந்த ஜுன் மாதத்தை விட. ஒரு சிறந்த எடுத்துக்காட்டைச் சொல்ல முடியாது. ஆம், ஜுன் மாதம் PRIDE MONTH
இந்த pride month பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள நாம் 1969க்கு பின்னோக்கி பயணிக்க வேண்டும். அதுவும் அமெரிக்காவிற்கு.. சட்டங்கள் க(கொ)டுமையாக இருந்த காலம். ஆண்கள், பெண்கள் போல உடையணிந்தாலோ பெண்கள் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பெண்களுக்கான உடை என்று சொல்லப்படுகிற உடையின் அளவை விட குறைவான உடை அணிந்தாலோ கைது செய்யப்பட்டார்கள். இந்த “harrassment” பல வருடங்களாகத் தொடர்ந்தது. அந்த ஒரு நாள் வரை. JUNE 28, 1969. பெரும் புரட்சி வெடித்தது, பலர் ஒன்று திரண்டனர், கற்கள் வீசப்பட்டன, எழுச்சி முழக்கங்கள் எல்லா இடமும் எதிரொலித்தன, புது சரித்திரம் உண்டானது. New York Greenwich Village இல் இருக்கும் stonewall inn gay bar இல் தொடங்கிய riot நாடு முழுவதும் பரவியது. இவ்வளவும் நடந்த இந்த ஜுன் மாதம் தான் உலகம் முழுவதும் பிரைட் மாதமாகக் கொண்டாடப்படுகிறது.
Pride month என்றதும் சொன்னதும் சட்டென நினைவுக்கு வருவது வானவில் கொடி. அந்த வானவில் கொடிக்கு கூட ஒரு குட்டி வரலாறு உண்டு. 1978 வரை வானவில் கொடி gay pride முன்னிறுத்தி உபயோகிக்கப்படவில்லை. அதுவரை pink triangle தான் LGBT சமூகத்தின் அடையாளமாக புழக்கத்தில் இருந்தது. ஆனால் ஜெர்மன் நாஜிக்கள், அதே pink triangle சின்னத்தை பயன்படுத்திருக்கிறார்கள் என்ற வரலாறு இருந்ததால் அதை மாற்ற முடிவு செய்த artist Gilbert Baker என்பவர் தான் முதன்முதலில் இந்த வானவில் கொடியை, Harvey Milk அவர்கள் ( இவரை பத்தி தெரிஞ்சுக்க MILK படத்த பாருங்க. LGBTQ மக்கள் எழுச்சில ஒரு முக்கிய பங்கு இவருக்கு உண்டு) தலைமையில் நடந்த San Francisco March இல் அறிமுகப்படுத்தினார். ஆனால், Baker அவர்கள் உருவாக்கிய கொடியில் எட்டு வண்ணங்கள் இருந்தன அது பிறகு ஆறாக மாற்றப்பட்டது. வானவில் கொடியின் ஒவ்வோரு வண்ணத்திற்கும் ஒரு காரணம் உள்ளது.
HOT PINK for sex
RED for life
ORANGE for healing
YELLOW for sunlight
GREEN for nature
TURQUOISE for art
INDIGO for harmony
VIOLOT for spirit
இப்படி ஒவ்வொரு வண்ணத்திற்குமான காரணத்தோடு தான் வானவில் கொடி உருவாக்கப்பட்டது.
அமெரிக்காவில் தொடங்கினாலும் இந்த Pride parade கொஞ்சம் கொஞ்சமாக பிற நாடுகளிலும் பரவத் தொடங்கி, இந்தியாவிற்கு வர கொஞ்சம் இல்லை நிறையவே தாமதமானது. ஆகஸ்ட் 16, 2008 சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் மும்பையைச் சேர்ந்த LGBTQ மக்கள் ஒரு பேரணி நடத்தினர். அதற்கு முன்னரும் நடந்திருந்தாலும், முறையாக ஒருங்கமைத்து நடத்தப்பட்ட இந்தப் பேரணி தான் இந்தியாவின் முதல் Pride parade. இது நடந்த அடுத்த வருடம் 2009 இல் சென்னையில் QUEER PARADE என்ற பெயரில் பேரணி நடத்தப்பட்டது.
2009 முதல் 2011 வரை மெரினா கடற்கரையிலும், 2012 எலியட்ஸ் கடற்கரையிலும் நடந்த இந்தப் பேரணி 2013 முதல் தான் எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியமில் நடந்து வருகிறது. இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்தியாவிலேயே சென்னை Pride parade மட்டும் தான் ப்ரைட் மாதமான ஜூன் மாதத்திலேயே நடத்தப்படுகிறது.
இதுவரைக்கும் கடந்த பத்து வருடமாகக் கொண்டாடப்பட்டு வந்தாலும் இந்த வருடப் பேரணி இன்னும் ஸ்பெஷல் காரணம், 377 சட்டம் நீக்கப்பட்ட பிறகு கொண்டாடப் போகும் முதல் pride March இது.
ஆனால் இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்படிப் பல போராட்டங்களையும், வரலாறுகளையும் தாங்கிய Pride parade இன்று பெரும்பாலானோரால் ஒரு Trend ஆகப் பார்க்கப்படுவது தான். Pride parade விடுதலை சம்பந்தப்பட்டது. சம உரிமை சம்பந்தப்பட்டது. காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுப் பின்புலம் வாய்ந்தது.
பல உயிர்கள் இன்றும் நம் கண்களுக்குத் தெரியாமல் சொந்த குடும்பத்தாலயே வீட்டில் அடைக்கப்படுகின்றனர். வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கௌரவக் கொலை செய்யப்படுகின்றனர். இத்தகைய கொடுமைகள் இனியும் தொடராமல் இருக்க இதைப் பற்றிய புரிதலை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகிறது. வானவில் பேரணி LGBTQ சமூகத்தினருக்கானது மட்டுமல்ல. அனைவரும் அதில் கலந்து கொள்ள வேண்டும். ஆதரவாக அவர்கள் கை கோர்க்க வேண்டும். அவர்களின் காதலை, கதைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்காக அவர்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். வாங்க எல்லோரும். சம உரிமைக்காக ஒரு நாள். சென்னை வானவில் பேரணி உங்களை அன்புடன் வரவேற்கிறது.
காதல் பொதுவுடைமை. HAPPY PRIDE ?