இணைய இதழ்இணைய இதழ் 67கவிதைகள்

சத்யா சொக்கலிங்கம் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

மௌனத்தின் சத்தம்

என்னை எப்போதாவது
நிசப்தத்தின் வழியே
கேட்டதுண்டா?
நான் எப்போதுமே
கேட்டுக் கொண்டிருக்கிறேன்
உன் ஒலியை…

***

உனக்கெனக் கூறுவதற்கென்றே
ஓரிரு வார்த்தைகளை வைத்துள்ளேன்
கூறாமலே நெடுநாள் கழிகிறது
அவ்வார்த்தைகளின் கணம்
கூடிக்கொண்டே போகிறது
நிறைகொள்கலனை
தாண்டிப் பெருகும்போது
என்றாவது ஒருநாள்
நீ உணரக்கூடும்
நான் கூறாது போன
வார்த்தையின் சத்தத்தை.

***

என் ஒவ்வொரு
மௌனத்திலும்
ஓராயிரம்
சத்தங்கள்
பிறக்கின்றன.

***

எனக்கு மௌனம் மட்டுமே தெரியும்
அதன் மூலமே
என்னைக் கடத்துகிறேன்
விழி ஓரங்களைக் கடக்கும்
அன்பை
தயவுசெய்து துடைக்காதே
வழியவிடு
என் காதலையும்.

***

மௌனித்திருக்கும்
உன்னைப் பேசவைப்பதில்
சளைப்பதேயில்லை
என்
முயற்சிகள்.

********

sathyajo1210@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button