இணைய இதழ் 75

 • இணைய இதழ்

  லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்

  கழிவறை கவிதைகள்  கழிவறையில் மலர்ந்த மலர்  கழிவறை பீங்கானின் விளிம்பில் கிளிமூக்கென வளைந்த வாயுடை புட்டியிலிருந்து கோலம் இடுவது போல கரண்டியிலிருந்து தோசை மாவைச் சுழற்றி ஊற்றுவது போல லாகவமாய் சுத்திகரிப்பு திரவத்தைப் பரத்தி சுழற்றினேன் தொடர்பற்ற துளிகள் விழ விழ புள்ளியிலிருந்து கோடாகி வரிவரியாய் அடர்ந்த நீலம் மேலிருந்து கீழாய் இறங்கியது நீல வரிகளுக்கு இடைப்பட்ட வெண்மை வெறும் வெள்ளை இல்லை அங்கே சிறுபிள்ளை கிறுக்கிய சித்திரப்பூ ஆயிரம் மலர்ந்திருந்தன நீலம் இணைந்த புள்ளிகள் மடலாகிக் கீழ்நோக்கி மலர்ந்தன அந்த மலரை நீங்கள் எந்தச் செடியிலும் பார்க்க முடியாது அது ஆண்டவன் என் கை கொண்டு பூக்கச் செய்த அழகு மலர். ***** நிறங்களின் அரசி கழிவறையில் நீல திரவம் பீங்கான் வெண்மையில் இறங்கும் திரையென அப்போது அத்திரை சூடும் வெளிர் நீலம் நீலம் பார்த்த மனம் இத்தனை இளகுவதாலோ நீலம் அத்தனை நீலமாய் இருப்பதாலோ நீலம் என்பது நிறம் மட்டும் இல்லாததாலோ நீலம் என்பது நிறங்களின் அரசி அங்கே நீலமா விட்டுக் கொடுக்கிறது இல்லையில்லை…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  ”எழுத்தே எனக்கான வலி நிவாரணி” – எழுத்தாளர் கா. சிவா

  நேர்கண்டவர்: கமலதேவி இதுவரை எழுத்தாளர் கா. சிவா அவர்களின் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. விரிசல்,மீச்சிறுதுளி மற்றும் கரவுப்பழி. இவரின்  சிறுகதைகளை அன்றாட இயல்பு வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து எழுந்த  புனைவுகள் என்று சொல்லலாம். சிவாவின் இந்த மூன்று சிறுகதைத்…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  தூய்மையெனப்படுவது – கோ.புண்ணியவான்

  கல்யாணிக்கு  கதவைச் சாத்தியதும்தான் புதிய காற்று நுழைந்ததுபோல இருந்தது . நிம்மதி பெருமூச்சு விடுவதற்காக அவளுக்கென பிரத்தியேகமாக  நுழைந்த காற்று அது. விருந்தினர் அறைக்குள் புதிய வெளிச்சம் பிரவாகித்திருந்தது. சன்னலுக்கு வெளியே கதிரொலி பாய்ந்து பச்சை வெளி பளீச்சென்று ஜொலித்தது.  இதெல்லாம்…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  அதே கண்கள் – தயாஜி

  துர்க்கனவு போல வந்து போகிறது அவள் முகம். அவளின் கண்கள். அது சுமந்திருக்கும் செய்தி. இதுவொன்றும் புதிதல்ல. அவளை மறந்துவிடுவேனோ என்ற அச்சம் அம்முகத்தின் வருகைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால்………… எஸ்.பி.எம் தேர்வு முடிந்த நிலையில் சிலமாத விடுமுறை கிடைத்தது. நல்ல…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  குறுங்கதைகள் – யுவன் சந்திரசேகர்

  விலை       நாங்கள் முதன்முதலில் குடிபோனது நாடார் காம்ப்பவுண்டு.  வரிசையாக, புத்தம்புதிய, ஒன்றோடொன்று ஒட்டிய, ஆறு சிறு வீடுகள். எங்களுடையது ஆறாவது. நாடார்  பெரும் பணக்காரர்.        என்னோட வசதிக்கு சும்மாவே குடியமத்தலாம் சார். ஒங்குளுக்குப்…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  கார்த்திக் நேத்தா கவிதைகள்

  அணிகலன் அசையும் அச்சுடர் அழகிய ஓர் அணிகலன் பேரிருட் கழுத்தில் சிறுநல் ஒளிஅசைவு அகம் சூடிக்கொள்ள ஓர் ஒப்பற்ற நகை வடிவிலா விசும்பில் முடிவிலாச் செவ்வணி குளிக்கும் குறத்தியின் குன்றனைய மார்பிடையில் செருத்துச் சிவந்த செங்காந்தள் மாலை. **** வெறும் வாழ்க்கை…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  இபோலாச்சி; 11 – நவீனா அமரன்

  உலகம் முழுமைக்கும் இதுவரை நிகழ்ந்த பெண்ணிய செயல்பாடுகளை வரலாற்று ஆய்வாளர்கள் நான்கு அலைகளாகப் பிரிக்கின்றனர். பண்டைய தமிழ், கிரேக்க, ரோமானிய மற்றும் ஜெர்மானியப் பெண் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துகளில் சமகாலப் பெண்ணியக் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தாலும், பெண்ணியம் என்பது கருத்துருவாக்கம் பெற்று…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  அம்மாவின் மூன்று நாட்கள் – தேவசீமா

  இன்று ஜனவரி மூன்றாம் தேதி, மருத்துவமனைக்கு வந்து இன்றோடு இருபத்து  மூன்று நாட்கள் ஆகி இருந்தன.  இவ்விடத்தில் ஒன்றும் 2012 ல் கடந்த அந்த இருபத்தி மூன்று நாட்களையும் குறித்து முழுமையாகப் பேசப் போவதில்லை.  பேசுவது போல் பேசிப் பேசி அந்நாட்கள்…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  திரையில் மேடை – கலாப்ரியா

  கூத்து, தமிழ்நிலத்தின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்திலிருந்து நாடகங்கள் பிறந்தன. கூத்து பெரும்பாலும் புராணங்களையும் அதன் விழுமியங்களான பக்தியையும் பரப்ப உதவியது. புராணங்கள் நிஜத்தில் நிகழ்ந்ததாக நான் நம்பத் தயாரில்லை. அவை உன்னதமான புனைவுகள் என்பதையும் மறுக்கத் தயாரில்லை. சில…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  கதை – ஆத்மார்த்தி

  “நான் சொல்லப் போறது கதை மாதிரி தோணும். நம்பக் கஷ்டமாக் கூட இருக்கும். பட், அதான் என்னோட பின்புல உண்மை” என்றார் திலகன். ரவியும் செல்வினும் புன்னகைத்துக் கொண்டார்கள். திலகன் தன் கையிலிருந்த நிறங்கெட்ட திரவத்தை மேலும் ஒரு மடக்கு உறிஞ்சியபடியே,…

  மேலும் வாசிக்க
Back to top button