கவிதைகள்
-
இணைய இதழ்
சுபி கவிதைகள்
யாரோ செய்த வன்மங்கள் யாரோ செய்த புறக்கணிப்புகள் யாரோ தோண்டிய குழிகள் நினைவுச்சுரங்கத்தின் கோடாரி ஒலியாக நாளங்களில் வெட்ட வெட்ட காலொடிந்த புறா ஒன்றின் நெடுநேர முனகல் சத்தம் காதில் ஒலிக்க ஒலிக்க நான் அதைத் தாண்டுகிறேன் எந்தக் குற்றவுணர்வுமற்று அந்தப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
மிச்சமிருக்கிறது ஒரு நாழி மிச்சமிருக்கிறது ஒரு நாழி அசாதாரணமான நிகழ்வு ஒன்றுக்காக அல்லது ‘சும்மா’ யென எல்லோரும் எளிதில் கடந்து போகிற நிகழ்வு ஒன்றுக்காக மிச்சமிருக்கிறது ஒரு நாழி. *** அந்த ஓவியம் முற்றுப்பெற மேலும் சில கோடுகள் கிறுக்கப்பட வேண்டும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மணிமீ கவிதைகள்
கலைத்துவிடாதீர்கள் கயிற்றுக் கட்டிலை சுவற்றில் சாய்த்துவிட்டு தலைக்கு வைத்திருந்த துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வேப்பங்குச்சியைப் பல்லுக்குக் கொடுத்துவிட்டு வயல்வெளியில் நடந்து பம்புசெட்டில் நீராடித் திரும்பும் வழியில் தேநீர்க்கடையொன்றில் பசியாறிப் பழகியவர்களை நலம் விசாரிக்கும் கனவொன்றைக் கண்டுகொண்டிருக்கிறேன் காலிங் பெல் அழுத்திக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
லக்ஷ்மி கவிதைகள்
புதர்கள் மண்டிக் கிடக்குமிடத்தில் பூத்திருக்கும் பூக்களைப் பறிக்க முயற்சிக்கிறேன் உடலெங்கும் முட்கள் கிழித்து ரணமாகிவிட்டன பசித்த வயிறு ஒளியிழந்த கண்கள் என்னை ஏதும் செய்துவிடும் முன் அந்தப் பூக்கள் எனக்கு வேண்டும் அதோ அந்தக் குப்பைக்கருகே பசியால் மரித்துக் கிடக்கும் என்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மித்ரா அழகுவேல் கவிதைகள்
இரண்டு பாதைகள் என் முன்னே எப்போதும் கலைந்து கிடக்கின்றன இரண்டு தெரிவுகள் எளிதானதும் பொதுவானதும் வில்லங்கமற்றதுமான ஒன்றுடன் வசீகரத்துடன் ஒட்டியிருக்கிறது ஆபத்துடன் நிறைவும் தரக்கூடியதுமான இன்னொன்று பாதுகாப்பும் ஆன்மதிருப்தியும் சுலபத்தன்மையும் சுயமும் எக்காலத்திலும் தலைகீழி இந்தப் பாதையிலேயே நடந்திருக்கலாம்தானே நான் சொன்னதையே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
வாழ்வின் பச்சையத்தையும், சருகுகளையும் ஒருசேரக்கொண்ட பெரும் மலைக்காட்டில் தனியே சுற்றித்திரிகிறேன்… தூக்கம் கலைந்த ஒரு மாலையில் ஞாபகப் பெட்டகத்துள் உறங்கும் காலப்பறவை தன் சிறகுகளை மெதுவாய் அசைத்துப் பார்க்கிறது உயிர்த்தலின் பயனாய் உடன்வரும் முதல் முத்தம், காதல் , துக்கம்,துரோகம் என…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நலங்கிள்ளி கவிதைகள்
நில நிலவரம் ஏற்கனவேயிருந்த இடத்தை விற்று மெயின் ரோட்டில் இடம் வாங்கி வீடு கட்டலாம் என்பது திட்டம் தரகர் காட்டிய இடம் சதுர வடிவம் அவ்விடத்தை பொறியாளர் ப்ளூ பிரின்டில் முக்கோணமென உறுதியளித்தார் இரண்டாம் தரகரிடம் விசாரிக்கச் சொன்ன பொழுது அந்த இடம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குமரகுரு கவிதைகள்
கடினமான காலங்களில் இளைப்பாறுதல் தந்த மலர்களாய்ப் பூத்துக் குலுங்கிய செடி! நான் மகிழ்ச்சியில் ஆடிய அன்று வாடிப் போயிருந்தது. நான் எப்படி அதற்கு ஆறுதல் சொல்வேன்? என் துக்கத்தில் அதற்கு நீரூற்ற மறந்தவனல்லவா நான்? **** என்னிடம் ஒரு உவமை உள்ளது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்
கழிவறை கவிதைகள் கழிவறையில் மலர்ந்த மலர் கழிவறை பீங்கானின் விளிம்பில் கிளிமூக்கென வளைந்த வாயுடை புட்டியிலிருந்து கோலம் இடுவது போல கரண்டியிலிருந்து தோசை மாவைச் சுழற்றி ஊற்றுவது போல லாகவமாய் சுத்திகரிப்பு திரவத்தைப் பரத்தி சுழற்றினேன் தொடர்பற்ற துளிகள் விழ விழ புள்ளியிலிருந்து கோடாகி வரிவரியாய் அடர்ந்த நீலம் மேலிருந்து கீழாய் இறங்கியது நீல வரிகளுக்கு இடைப்பட்ட வெண்மை வெறும் வெள்ளை இல்லை அங்கே சிறுபிள்ளை கிறுக்கிய சித்திரப்பூ ஆயிரம் மலர்ந்திருந்தன நீலம் இணைந்த புள்ளிகள் மடலாகிக் கீழ்நோக்கி மலர்ந்தன அந்த மலரை நீங்கள் எந்தச் செடியிலும் பார்க்க முடியாது அது ஆண்டவன் என் கை கொண்டு பூக்கச் செய்த அழகு மலர். ***** நிறங்களின் அரசி கழிவறையில் நீல திரவம் பீங்கான் வெண்மையில் இறங்கும் திரையென அப்போது அத்திரை சூடும் வெளிர் நீலம் நீலம் பார்த்த மனம் இத்தனை இளகுவதாலோ நீலம் அத்தனை நீலமாய் இருப்பதாலோ நீலம் என்பது நிறம் மட்டும் இல்லாததாலோ நீலம் என்பது நிறங்களின் அரசி அங்கே நீலமா விட்டுக் கொடுக்கிறது இல்லையில்லை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேவதேவன் கவிதைகள்
கடற்கரை மணல்வெளி காற்று அவர் கண்களின் நீரைக் கொண்டுசென்று மேகங்களில் வைக்கிறது… அவர் இரத்தத்தை உறிஞ்சுகிறது வெயில் தன்னைக் கண்டுகொள்ளாது பாதையற்ற வானில் மிதந்துசெல்லும் மேகங்களைக்கண்டு சூரியனும் திகைக்கிறான். எப்போதும் மழைநோக்கித்தானே அண்ணாந்து கிடக்கின்றன அனைத்து உயிர்களும்? காலம் காலமாய் அவரைக்…
மேலும் வாசிக்க