கவிதைகள்
-
இணைய இதழ்
நந்தாகுமாரன் கவிதைகள்
குடுகுடுப்பையை இசைக்கும் வார்த்தைகள் இசையின், ‘மைக்ரேன்’ இசையின், ‘மைக்ரேன்’ தன் தாண்டவத்தைத் துவங்கிவிட்டது இரைச்சலுக்கும் இன்னிசைக்கும் இடையே போர் காதுகளின் கால்வாயில் மௌனத்தின் திரவம் தடம் புரண்டுவிட்டது வாதையின் குமிழ் உடையும் பாதையில் தலை தனக்கான போதையில் உடல் நீங்கி முண்டத்தின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பாலைவன லாந்தர் கவிதைகள்
துற்சகுனத்து இரவில் மோதும் ஒளியின் முதற்சாயல் உடைந்து தெறித்த பொம்மையின் கை தரையில் மோதி சுக்குநூறாகச் சிதறியபோது கைவிடப்பட்ட பிள்ளைகளின் முகங்களென அறைமுழுக்கப் பரவியது கை அற்ற பொம்மையை நாடியது கைவிடப்பட்ட இன்னொரு கை. **** பைன் மரத்தின் தடித்தகிளையொன்றில் சணல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தாமரைபாரதி கவிதைகள்
வலியின் வண்ணங்கள் ஒளிரும் கோடி விழிகளால் நீர்மை பொங்கும் செந்திரவத்தைப் பொழிகிறது உடல் செம்மறிகள் ஒதுங்கும் மரத்தடி நிழல் போல நான் நனைந்துகொண்டிருக்க தோல் நனையா செம்மறியாக அது மட்டும் சந்தேகத்தின் கண்களைச் சுழல விடுகிறது எத்துனை சிறிய பொருளையும் விடுவதாயில்லை ஊதிப் பெருக்க ஒரு துளி போதுமே காயத்தின் அளவே கடும் வலியின் அளவுமென்கின்றன மருந்தின் தாதுக்கள் வலியின் குணமறியாத விரிசல்களில் வழிந்தோடுகிறது நாள் பட்ட காயத்தின் குருதி உணர்வை ஓர் ஓவியமாய்ப் பார்க்கும் ஐயத்தின் கண்களைத்தான் எவ்வளவு நேரம் பொறுப்பது அச்சத்தின் விழிகளுக்கு ஒரு துண்டு புலால் போதும் புலன்கள் மரிக்க தூர மலையின் வீழருவியில் நனைகிறேன் கசடைக் கழுவிச் …
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ச. சக்தி கவிதைகள்
பட்டாம்பூச்சிகளை பிடிப்பதே வேலையாகக் கொண்ட தன் மகளிடம் ஒரு செடி இருக்கின்றது அதில் நிறைய பூ இருக்கின்றது அவள் குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறாள் பூ பூத்துப் பூத்து குலுங்குகிறது படை சூழப் பறந்து வந்து அமர ஆரம்பிக்கின்றன பட்டாம்பூச்சிகள் அவள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேன்மொழி அசோக் கவிதைகள்
சாயல் நதியில் புகுந்த அந்திகாவலனைத் தன் உள்ளங்கையில் சிறை பிடிக்க எண்ணுகிறாள் என் சேட்டைக்காரச் சிறுமி ரெட்டைச் ஜடை நனையாமலும் முழுக்கால் பாவாடையை அரைக்காலுக்காக்கி மெல்ல மெல்ல இறங்கி ஜடையிலிருந்து நீர் சொட்டச் சொட்ட கை நிரம்ப நதி நீரை அள்ளுகிறாள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
லஷ்மி கவிதைகள்
குரல்கள் பெரும் சனங்களின் வதைகள் நடக்கும் பொழுதெல்லாம் உங்கள் குரல்கள் என்னை அலைகழித்துக்கொண்டேயிருக்கின்றன தலையீடுகளற்ற பெருவெளியில் என் குரல் உயர்த்த விரும்புகின்றேன் என்னால் இயலவில்லை குரலெழுப்ப முனையும் நேரங்களில் என் முதுகெலும்புகள் முறிந்துவிடும் சத்தம் கேட்கின்றது குரலை சில கரங்கள் அழுத்திப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திருமூ கவிதைகள்
தீ ‘உன் கொள்கையையும் கோட்பாட்டையும் புரட்சியையும் புளிசோத்தையும் தூக்கிக் குப்பையில் போடு’ என்றார்கள் போன இடங்களிலெல்லாம் தூக்கிப் போட்டேன் அது பற்றித் திபுதிபுவெனத் தீயாய் எரிகிறது. **** அரசியல் போலி எனக்கு எந்தக் கொள்கையும் கோட்பாடும் கிடையாது ஆனால், ஒன்றே ஒன்றுமட்டும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரையோகான் கவிதைகள் – ஆங்கிலத்திலிருந்து தமிழில்; சமயவேல்
முதிர்ந்த காலம் 1796–1816 (age 39–59) குஹாமி மலைமேல் ஐந்து குடைவறைகள் உள்ள குடிசையில் வசிக்கையில் ᄋᄋᄋ இங்கே இந்த கிராமத்திற்கு வந்ததும், பீச் பூக்கிறது முழுமையான பூத்தல். சிவந்த இதழ்கள் நதி மேல் பிரதிபலிக்கின்றன. **** தகுஹாட்ஸு எனப்படும் பிச்சைப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரமீஸ் பிலாலி கவிதைகள்
காற்றின் கண் பேய்க்காற்று வீசுகிறது என்கிறார்கள் பலரும் ஆண்டுதோறும் வரும் நல்ல பருவங்களில் இதுவும் ஒன்று கூட்டிப் பெருக்கிச் சுழற்றித் தூக்கி முகத்தில் கொண்டாந்து கொட்டுகிறது புழுதியை ஈருருளை வாகனங்களில் செல்வோருக்கெல்லாம் கண்ணிலும் வாயிலும் மண் வீட்டுக்குள் அமர்ந்து செய்வதொன்றுமற்று பார்த்துக்கொண்டே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சீ.பாஸ்கர் கவிதைகள்
அம்மா இல்லாத வீடு தினமும் சாமி படங்களின் முன் விளக்கேற்றியவள் இன்று விளக்கின் முன் சாமியாக அம்மா வேண்டுமென்று அழுது அடம்பிடிக்கும் சின்னவளிடம் சாமியைப் பார்க்கச் சென்றிருக்கும் அம்மா இன்று வந்துவிடுவாளென்று சொல்லியே தினமும் சமாளித்து வருகிறார் அப்பா அக்காவிடம் அவ்வப்போது…
மேலும் வாசிக்க