கவிதைகள்

  • கவிதைகள்
    Mithra Alaguvel

    கவிதைகள் – மித்ரா அழகுவேல்

    பாஸ்வேர்ட் திடீரென அனைத்துக் கடவுச்சொற்களையும் மறந்து போகிறான் துர்பாக்கியவாதி ஒருவன் முகநூல் இன்ஸ்டாக்ராம் ட்விட்டர் டின்டர் ஓலா ஊபர் ஸ்விகி ஜொமேட்டோ ஃபோன்பே ஜிபே அனைத்தும் ஒற்றைக் கடவுச் சொல்லுக்காக இறைஞ்சுகின்றன அலுவலக மடிகணினியும் சொந்த மடிகணினியும் ஆளுக்கொரு புறம் திருப்பிக்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    jeevan benny

    கவிதைகள் – ஜீவன் பென்னி

    தேவகுமாரனுக்குள்ளிறங்கிக் கொண்டிருக்கும் ஆணிகள் பரிசுத்தமான ஆன்மா தன் அப்பத்தைப் பிரித்துக்கொடுப்பதற்கு முன்பு ஜெபிக்கிறது. காட்டிக்கொடுக்கும் மனது அந்த இடைவெளியில் தான் வளர்ந்து நிற்கிறது. ***** தேவகுமாரன் தனக்குள்ளிறங்கிக் கொண்டிருந்த ஆணிகளை ஒரு முறை நன்றாகப் பார்த்து சிரித்துக் கொண்டார், அவை ஏற்படுத்தப்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    varavara_rao

    வரவர ராவ் கவிதைகள் : தமிழில் – சௌம்யா ராமன்

    தெலுங்கு : வரவர ராவ்  தமிழில் : சௌம்யா ராமன் பிரதிபலிப்பு நான் வெடிமருந்து வாங்கிக் கொடுக்கவில்லை வாங்கிக் கொடுக்கும் யோசனையும் எனக்கில்லை எறும்ப்புற்றை உதைத்தழித்தது உங்கள் வலுத்த கால்கள்தான் மிதித்த புற்றினில் விதைக்கப்பட்ட வேட்கைக்கும் நீங்களே காரணம் உங்கள் தடித்த…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Kamaladevi

    கவிதைகள் – கமலதேவி

    அகம் சாரல் தூரல் பெருமழை அடைமழை.. மேகங்களை முப்பொழுதும் சூடி நிற்கின்றன சிகரங்கள்… எழும் இடியோசைகள் எதிரொலித்து முடிகின்றன. மின்னல் ஔியில் மழைநில்லா குறுஞ்சியின் பேரழகைக் கண்டு நிற்கிறது வெளி. ***** ஏழு கடல்களுக்கு அப்பால் காணக்கிடைக்காவிட்டால் என்னசெய்வது தேடிக் கண்டடையும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    chandhira Thangaraj

    கவிதைகள் – சந்திரா தங்கராஜ்

    மரையா! பவளமல்லி கமழும் யாமத்தில் ஒவ்வொரு கூடலின் பின்னும் சிறுகச்சிறுக உதடுகளில் நீயிட்ட பனிநீர் முத்தங்களை ஏந்தினேன். அவ்வமைதியில் மனம் நிறைந்து சுந்தர ஒளி மேகத்தைத் தழுவி வெண்ணிலவை மறைக்கும் போது, எங்கிருந்தோ பனிக்கத்தியொன்று பாய்ந்துவந்து என் நெஞ்சினில் இறங்குகிறது. தலை…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Na.Periyasami

    கவிதைகள் – ந.பெரியசாமி

    இருளடைந்த வெளி உண்பதற்கும் உறங்குவதற்குமே வீடு. சீக்குண்ட கோழியாக சுருண்டு கிடக்காதேயென சுற்றித் திரிபவர் வீடே உலகமென முடங்கிப்போனார். வலப்பக்கச் சுவர் ஆயிரத்தி எட்டுச் செங்கல் இடப்பக்கச் சுவர் எட்டுநூத்தி எட்டு மேல்பக்கக் கலவையின் கணம் ஒரு டன் இருக்கக் கூடுமென…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Mounan Yathrika

    கவிதைகள் – மௌனன் யாத்ரிகா

    முதலைகளின் கொடூரப் பாடல்கள்   குருவிகள் ஏமாற்றப்படும் நிலத்தில் இந்தப் பருவத்தின் மகசூல் பரவாயில்லை ஆயிரம் மூட்டை மக்காச்சோளம் அறுவடை முடிந்து தோகைகள் காற்றில் அலைகின்றன தட்டைகளைக் கொளுத்திவிட வேண்டும் நுண் பூச்சிகளின் சத்தம் வணிகத்துக்கு தூர்க்குறியாக இருக்கிறது. ***** பனி பெய்து…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    devaseema

    கவிதைகள் – தேவசீமா

    அனாமதேய சூட்டப்பட்ட ஒருவனின் செயல்களுக்காக நித்தமும் வதைபடும் பெயர் ஒன்றுண்டு ஒரே அலைபேசியில் பல காலங்களில் ‘அன்பன்’ ‘அழகன்’ ‘புற அழகன்’ ‘புறணி பேசுபவன்’ ‘பித்தன்’ ‘சனியன்’ இவ்விநாடியில் ‘அந்நியன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அவன் சிக்கினால் வகையாக வெளுத்தெடுப்பது எவ்விதம் எனச்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Pa.Mathiyazhagan

    கவிதைகள் – ப.மதியழகன்

    சபிக்கப்பட்டவனின் இரவு கடிகாரத்தின் நொடி முட்கள் தலையில் ஓடிக் கொண்டிருப்பதைப் போல் இருக்கிறது சுவர்க்கோழிகள் சத்தம் கபாலத்தைப் பிளக்கிறது குளியலறை குழாயிலிருந்து தண்ணீர் சொட்டுவது உச்சந்தலையில் கடப்பாரையால் தாக்குவது போலிருந்தது இரவு சர்ப்பம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தது நகரமே…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    gabriella mistrell

    மொழிபெயர்ப்புக் கவிதை – கு.அ.தமிழ்மொழி

    காணாமற்போன நாடு சிலி : கேப்ரியல்லா மிஸ்ட்ரல் ஆங்கிலம் : லேங்க்ஸ்டன் ஹியூக்ஸ் தமிழில் : கு.அ. தமிழ்மொழி காணாமற்போனது புதிரான நாடு தெளிவற்ற கடவுச்சொல்லைவிட தேவதையைவிட இலகுவானது இறந்த பாசியின் நிறம் மூடுபனியின் வண்ணமது முடிவிலா நேரம்குறைந்த பேரின்பம்போல் மாதுளை…

    மேலும் வாசிக்க
Back to top button