சு.நாராயணி
-
தொடர்கள்
கடலும் மனிதனும்:5-கடுஞ் சுறா எறிந்த கொடுந்திமிற் பரதவர்- சு.நாராயணி
“அந்தக் காலத்துல வெறும் கெட்டுமரம், மோட்டார் போட்டு கிடையாது. அந்த சாதா கெட்டுமரத்துல நாங்கள் போயி ஸ்ராவு பிடிக்கும்…. எத்தனை கிலோ ஸ்ராவு கிட்டும் தெரியுமா?” என்று தூத்தூரைச் சேர்ந்த முதிய மீனவர் ஒருவர் கண்களில் பெருமிதம் பளபளக்க என்னிடம் சொன்னது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- சு.நாராயணி
1. உவர்நீர்க் காதை பேறுகாலத்தில் வஞ்சிரமீன் சினையை வறுத்து உண்கிற பெண்கள் திரண்ட முத்துக்களென குழந்தைகளைப் பிரசவிக்கிறார்கள். பால்சுறா புட்டு அவியும் வீடுகளில் சிசுக்களின் கடைவாயில் மீன்கவிச்சியோடு பால் வழிகிறது. சிக்கெடுக்கும் சீப்பில் சுருண்ட முடிக்கற்றைகளென மணலில் உருள்கின்றன கடல்பரட்டைகள். பரட்டைமுள்ளைக்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும் 3 – உலகை மாற்றிய ஒற்றை மீன்
1992ம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி. கனடாவின் தேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறார். பத்திரிக்கையாளர்கள் கூடிய அந்த அறைக்கு வெளியில் கூச்சல், குழப்பம், அடிதடி. பூட்டியிருக்கிற அறையின் கதவை கோபத்துடன் உடைத்துத் திறக்க முயற்சி செய்கிறார்கள்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும் 2 – கடல் அரக்கன் : கட்டுக்கதைகளும் உண்மையும்
ஆழ்கடலின் இடிமுழக்கங்களுக்கும் கீழே…. பாதாளத்தையொத்த கடலுக்கும் அடியில் தொன்மம் மிக்க, கனவுகளற்ற, யாரும் குறுக்கிடாத ஒரு உறக்கத்தில் இருக்கிறது க்ராக்கென் என்று தனது க்ராக்கென் பற்றிய கவிதையைத் தொடங்குகிறார் ஆங்கிலக் கவிஞர் டென்னிசன். “தேவதைகளும் மனிதர்களும் பார்க்க, அது உறுமியபடி…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கடலும் மனிதனும்- 1
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையின் கடற்கரையை நினைத்துப் பாருங்களேன். கடலை சாட்சியாக வைத்து வாழ்க்கைக்கான திட்டங்களை விவாதிப்பவர்கள், மணல் வீடுகட்டி விளையாடும் குழந்தைகள், அலைகளை வெறித்தபடி கவிதை சமைத்துக்கொண்டிருப்பவர்கள்,கடல் பார்க்க வந்தவர்களிடம் சுண்டலுக்கோ ஜோசியத்துக்கோ பேரம் பேசிக்கொண்டிருப்பவர்கள், கொஞ்ச தூரத்தில் ஒரு படகைக்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- சு.நாராயணி
எலும்புத்துண்டுகளின் இறைச்சித்துணுக்குகள் கால் தேக்கரண்டி கருணை கூடக் கிடைப்பதில்லை ஆனாலும் கைகள் விண்ணோக்கி இறைஞ்சியபடியே… மறுக்கப்பட்ட உயிர்கள் எண் பூஜ்யத்தை அழுத்தவும் பூஜ்யம் ஒரு எண்ணே இல்லையென்கிறார்களே? இருக்கட்டும்…இவர்கள்கூட உதிரிகள்தானே. 0 0 0….. காத்திருக்கும் நேரத்தில் கென்னிஜியின் பியானோ உங்களுக்காக……
மேலும் வாசிக்க