செந்தமிழ் மொழியே வா, வா, வா.
சிறுவர்க் கின்பம் தரவே வா.
எந்தன் உயிரே வா வா வா.
எழிலுடன் நீயும் வா வா வா.
உண்மை பற்பல சொல்ல வா .
உவமை பற்பல உரைக்க வா.
அன்பை எமக்கே ஊட்ட வா .
ஆவல் தீர்க்க வா வா வா.
வல்லமை நீயும் தரவே வா.
வாழும் வழியைக் கூற வா.
எல்லார் மனமும் மகிழ்ந்திடவே
ஏட்டில் பவனி வா! வா!! வா!!!