
காலையில் நான் விழிக்கும் போது வெய்யில் வந்திருந்தது. வெளியில் வருகிறேன். அந்த பங்களாவின் முன்புறமெங்கும் மழை நீர் ஓடிய தடங்கள். பெருமழை நிகழ்ந்த மறுநாளின் நீராவி எழும் காலை வெயிலில் அவ்விடம் அத்தனை அழகாயிருக்கிறது. பெயர் தெரியாத செடிகளும் கொடிகளும் நனைந்த இலைகளுடன் அடர்ந்து பல வண்ண மலர்களுடன் படர்ந்திருக்கின்றன. நிறைய பூச்சிகளும் வண்டுகளும் பறக்கின்றன. அதைத் தாண்டி பசுமையாய் சரியும் பள்ளத்தாக்கும் தூரத்தில் பாதி மறைந்து தெரியும் மலைச்சிகரங்களும் பசுமையில் ஒளிர்கின்றன. இந்த ஜவ்வாது மலையைப்பற்றி இவான் சொல்லியதெல்லாம் குறைவுதான் என நினைத்துக்கொள்கிறேன். சற்று தள்ளி கையில் கேமராவுடன் இவான் நின்று கொண்டிருக்கிறான். அவனருகில் செல்கிறேன். ஒரு ஊதா வண்ண மலரை படம் எடுத்துக் கொண்டிருக்கிறான் .
“இந்த இடத்தை பார்த்தியா சந்துரு ஹவ் ப்யூடிஃபுள்”
“ஆமாம் நைட் இருட்டுல ஒண்ணுந்தெரியல”
நாங்க ரெண்டு பேரும் நேற்றிரவு கடும் மழையில இந்த காட்டு பங்களாவுக்கு வந்து சேர்ந்தோம். வழியெல்லாம் எனக்கு பயமாகவே இருந்துச்சு. மழை இருட்டுல எந்த லைட்டும் இல்லாத காட்டுப் பாதையில வண்டியில வந்தது இது தான் முதல் முறை.
ஒரு ஸ்ப்லெண்டர் வண்டியில் வனத்துறை யூனிபார்மில் இரண்டு பேர் வருகிறார்கள் .
சார் நீங்கதான் கன்சர்வேட்டர் ஐயா சொன்னவங்களா? நான் தான் சிவலிங்கம் இங்க பாரஸ்டர்”
“இவர் இவான் பிரெடரிக். பட்டர்பிளை ரிசர்ச் பண்றாரு.நான் இவரோட அசிஸ்டன்ட் சந்துரு. நாங்க ரெண்டுபேரும் அசாம் திருவனந்தபுரம் எல்லா இடத்திலேயும் தங்கி வண்ணத்துப்பூச்சி பத்தி தகவல் சேகரிக்கிறோம்”
“அப்படியா சார். உங்களுக்கு வேற என்ன வேணும் சொல்லுங்க ஐயா எங்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறாரு”
“இவரோட தாத்தா இந்த இடத்தில எண்பது வருஷத்துக்கு முன்னாடி வந்து இதே மாதிரி ரிசர்ச் பண்ணி இருக்காரு”
“அப்பிடியா சார்”
அவர்களுக்கு அந்த பேச்சை விட ஐரோப்பிய தோற்றம் கொண்ட இவானைப் பார்ப்பது தான் சுவாரசியமாக இருந்தது போல. இப்படிப்பட்ட பார்வைகள் எனக்கும் இவானுக்கும் பழக்கமானது தான்.
மறுநாள் நாங்கள் இருவரும் வாச்சர்களின் ஏறினோம். மழை முடிந்த காலம் என்பதால் காடு இன்னும் சுறுசுறுப்பாக இருந்தது. வழியெங்கும் லண்டானா புதர்கள் அவற்றில் இளஞ்சிவப்பு மஞ்சள் வெள்ளை என பல வண்ண பூங்கொத்துக்கள். அடர்ந்த மரங்களின் நடுவே ஒத்தையடி பாதையில் சென்று கொண்டிருந்தோம். அவற்றின் மீது ஊதா வண்ண மலர்களுடன் ஓணான் கொடிகளும் இதய வடிவ இலைகளுடன் சீந்தில் கொடிகளும் சிகப்புபூக்களுடன் பல கொடிகளும் படர்ந்திருந்தன. நிறைய எங்கள் முன்னே செல்லும் வாச்சர் சென்றிருப்பார் கையில் ஒரு தடியை வைத்து தட்டிக் கொண்டே போனார்.
இன்னும் கொஞ்சம் மலைமீது ஏறவும் மரங்கள் குறைந்து நிறைய செடிகள் தெரிந்தன. தேனீக்களும்த தும்பிகளும் வந்து எங்கள் முகத்திலும் கைகளிலும் மோதின.
செங்குத்தான மலைப்பாதை முடிந்து சற்றே சமதளமாக பாதை செல்கிறது. ஒரு சிறிய கரும்பாறையைத் தாண்டி சென்றதும் எங்கள் கண்முன்னே தெரிந்த காட்சியில். ஒரு கணம் நானும் இவானும் திகைத்துப் போனோம். குட்டை செடிகளும் புதர்களுமான அந்த பெரிய பள்ளத்தாக்கிலும் ஊதா மஞ்சள் இளஞ்சிவப்பு சிவப்பு வெள்ளை நீலம் என்று பல மலர்கள். அவற்றின் நிறங்களை தோற்கடிப்பது போல பலநூறு வண்ணத்துப்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன தும்பிகள் தேனீக்கள் பல பூச்சிகள் எல்லாம் சேர்ந்து அந்த இடத்தின் வளமை இன்னும் பெருகுகிறது. பூச்சிகளின் ரீங்காரங்களும் பறவைகளின் ஓசைகளும் பள்ளத்தாக்கில் சுழலும் காற்றின் ஒலியும் தவிர வேறு சப்தங்களின்றி அவ்விடம் அத்தனை ஏகாந்தமாய் இருந்தது. முற்பகல் வெயிலில் அந்த மலை உச்சியில் குளிர் வீசியது. இவான் ஒரு பாறையின் மீது அமர்ந்து அந்த பள்ளத்தாக்கையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகம் சிவந்து நெற்றி சுருங்கி தன் நீலக்கண்களில் வெறெதையோ பார்ப்பதைத் போலிருந்தது. அவன் மோனத்தைக் கலைக்க மனமின்றி நான் மறுபக்கம் சென்று வண்ணத்துப்பூச்சிகளை கேமராவில் படம் எடுக்கத். தொடங்கினேன் .
வாச்சர்கள் ரெண்டு பேரும் ஒரு சிறு மர நிழலில் உட்கார்ந்து கொண்டனர் . கொஞ்ச நேரம் கழித்து இவான். எழுந்து வந்தான்.
“சந்துரு இந்த இடத்தில நான் தேடுறத விட அதிகமா ஸ்பீசஸ் இருக்கு இங்க இருக்கற பூச்சடடிங்க கூட ரொம்ப ரேர்”
இவான் ஒரு ஐரோப்பியனாக இருந்தாலும் அவன் பிறந்து வளர்ந்தது எல்லாமே. பம்பாயில் தான்.இந்தியா முழுக்க. சுற்றியுள்ளதால் அவனுக்கு இந்தியுடன் பெங்காலி தெலுகு தமிழ் எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.
எங்களுடன் வந்த வாச்சர்களில் சென்னியப்பன் அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் உள்ள கற்களை விலக்கி எதையோ எடுக்கிறான்.
“டேய் ரச்சுமா. கெல்லு வைடா” என்கிறான். நெளிந்த அலுமினியக் குண்டானை கொண்டு வருகிறான்.
இதற்குள் ரச்சுமன் மூனு உருண்டைக் கற்களை வைத்து, பக்கத்து புதர்களில் மேல்புறமாக சற்று காய்ந்த குச்சிகளை உடைத்து எடுத்து வருகிறான்.
“ஐயா இம்மாம் ஒசரம் ஏறி வந்தோமில்லயா. டீத்தண்ணி வைக்கறோம். உங்கள. மாறி நெறய பேரு இந்த எடத்துக்கு. வருவாகங்க. அப்ப இங்கேயே. டீ பபோடுவோங்க”
வெரி குட் ஐடியா இவான் அவனைப் பார்த்து சிரிக்கிறான்.சிறு சுள்ளிகளை உடைத்து தீ உண்டாக்குகிறார்கள். தண்ணீர் கொதிப்பதையும். டீத்தூளை அவர்கள் போடுவதையும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறோம். இந்த மலை உச்சியில் அமர்ந்து பாலில்லா தேனீரைக் குடிப்பது அத்தனை இனிமையாய் இருக்கிறது.
“தேங்க் யூ ஃபார் திஸ் வொண்டர்புல் டீ”, இவான் ரச்சுமனிடம் சொல்கிறான்.
“யூ நோ மை கிரான்ட் பாதர் எர்னஸ்ட் இவான் நைன்ட்டீன் பார்ட்டியில இந்த மலை மேல் வந்து இதே மாதிரி உக்கார்ந்து இருந்திருக்கார்”. அவன் குரல் கரகரத்துக் கலங்குகிறது.
சென்னியப்பனும் ரச்சுமனும் என்னைப் பார்க்கிறார்கள்.நான் அவர்களிடம் தமிழில் சொல்கிறேன்.
“ஐயா இந்தப் பட்டாம்பூச்சிங்கள்ப போயி இன்னாத்த ஆராச்சி பண்றீங்க”
“இயற்கையோட சுழற்சியில பூச்சிகளோட பங்கு அதிகம்.இந்த ஜவ்வாது மலை போன்ற இடங்களில் இவை காடு முழுக்க பறந்து தாவரங்களை இணைக்கும்.பூச்சிகள் இல்லைன்னா நாட்டோட ரீசைகிளிங் எதுவுமே நடக்காது.இந்தியாவுல ஜோகன் ஜெரார்ட் அப்டிங்கற டாக்டர் ஒருத்தர் தான் எய்ட்டீன்த் சென்ச்சுவரில பட்டர்பிளை ரிசர்ச் மொத மொத பண்ணாரு.அப்ப ஆற்காடு நவாப் அவருக்கு அத்தனை துணையா இருந்தாரு.அவரோட மாணவர்கள் அதன்பிறகு நிறைய பேர் ஆராய்ச்சிய தொடர்தாங்க. அப்படி ஒருத்தர் மூலமாக த் தான் என்னோட தாத்தா எர்னஸ்ட் இதப் பத்தியெல்லாம் தெரிஞ்சிகிட்டாரு.அவர் பிரிட்டிஷ் இந்தியாவுல பொறந்து வளர்ந்தவரு.இந்த ஜவ்வாது மலையில ஒரு வருஷம் இருந்திருக்காரு.அப்பவெல்லாம் ட்ரான்ஸ் போர்ட் வசதிகள் எதுவுமில்ல.குதிரையில தான் இங்க வந்திருக்காரு. சாப்பிடவோ பாலிம்ஸ்டர் வகையில இறக்கையில் கண் போல உள்ள ஒரு கிங் பட்டாம்பூச்சியத் தேடி அலைஞ்சிருக்காரு.இதையெல்லாம் அவரோட டைரியில படிச்சேன். அப்பெல்லாம் ஐரோப்பாவுல பூச்சிகள் எல்லாம் சபிக்கப்பட்ட வை, சாத்தானின் எச்சங்கள் அப்பிடின்னு நிறைய நம்பிக்கைகள் இருந்திச்சி.என் தாத்தாவை அவரோட அம்மாவே தடுத்திருக்காங்க.பட்டாம்பூச்சிகளை பத்தி படிச்சா உனக்கு சாபம் வரும்னு நிறைய பேர் அவற்றை பயமுறுத்தி இருக்காங்க” இவான் சொல்கிறான்.
ரச்சுமன் தலையாட்டிக்கிட்டே “ஆமாங்கய்யா இங்க எங்க மலநாட்டுல கூட அப்டித்தான் சொல்வாங்க. பட்டாம்பூச்சி, தும்பி அல்லாமே கன்னிமாரு கூநகூந்தலு ந்து போடற காஞ்சிப்போனபூவுங்க.அத தொட்டா காடு வுடாது. இங்கயே திரும்பத் திரும்ப இட்னு மூடும்னு எங்க ஆசாளுங்க சின்ன புள்ளியா இருக்கறப்ப சொல்லுவாருங்க.”
“யெஸ் யூ ஆர் ரைட். எல்லா இடத்திலயும் அது போல பல நம்பிக்கைகள் உண்டு.எங்க தாத்தா இந்த மேல்பட்டுல வந்து ரிசர்ச் பண்ணப்ப இந்த மலையில உள்ள ஒரு ட்ரைப் கேர்ள் ஒருத்தி மேல அவருக்கு லவ் வந்திருக்கு.”
நாங்கள் எல்லாரும் இப்பத்தான் ஆர்வமா இவானைப் பாக்கறோம்.
அவன் கொஞ்ச நேரம் எதுவுமே பேசல. இந்த மலநாட்டுல வெளியூர் ஆளுங்களையே கல்யாணம் பண்ண வுடமாட்டாங்களாம்.வெளிநாட்டுக்காரனுக்கு எப்பிடி பொண்ண குடுப்பாங்க?
சென்னியப்பனும் ரச்சுமனும் ஆமாமென தலையசைக்கின்றனர்.
“ஒன் டே தே எலோப்டு பிரம்ம ஹியர்.
குதிரையில் ஏறி இந்த மலைய வுட்டே ஓடிப்போய்ட்டாங்க.திருவண்ணாமலை வழியா சேலத்துக்கு போகறப்போ அந்த பொண்ணுக்கு வெஷக் காய்ச்சல் வந்திருக்கு.புது எடம் , வேற தண்ணி குதிரையில வந்தது எல்லாம் சேர்ந்து யூ நோ அவ ரெண்டு நாள் ஜுரத்துல செத்துப் போயிட்டா.ஹர் நேம் வாஸ் சீட்ட. புவர் கேர்ள்”. பெருமூச்சு விடுகிறான்.
“ஆமாங்கய்யா இங்கவெல்லாம் அபுடித்தான். அந்த நாளுல்ல எல்லாம் மலைய உட்டு எறங்கனாலே செத்துடுவாங்கன்னு சொல்வாங்க”. ரச்சுமன் சொல்றான்.
எனக்கு அந்த அமைதி தாளவில்லை. “அது ஏன்யா அப்பிடி பேரு வைச்சிருக்காங்க?” கேட்கிறேன்.
“ஐயா அது சாமிங்க.ராமரு பொஞ்சாதி.என் பேரு கூட ராமரு தம்பி பேருங்க. எங்க பாஷையியில அப்பிடித்தாங்க”
எனக்கு சட்டென்று உரைக்கிறது.ஆமா சீதையைத்தான் சீட்டைன்னு சொல்றாங்க.லட்சுமணன் தான் ரச்சுமன்.தலையசைக்கிறேன்.
அதுக்கப்புறம் எர்ணஸ்ட் ஒடைஞ்சு போயிட்டார். வண்த்துப் பூச்சிகளோட சாபம் தான் சீட்டைய பிரிச்சிட்டதா நெனைச்சார். ஆராய்ச்சியெல்லாம் விட்டுட்டு கேரளத்துல ஒரு மலைப்பகுதியில் தனியாவே வாழ்ந்தாரு. எங்க குடும்பத்துக்கு சொத்துக்கள் நிறைய உண்டு. அவரு கல்யாணமே பண்ணிக்கலை. நான் அவரோட தங்கச்சி பேரன். அவருக்கப்புறம அவர் வீடு பணம் எல்லாம் எனக்குத்தான் வந்துச்சி. அவரோட டைரிகள் முழுக்க அந்த பொண்ணும் வண்ணாத்திப்பூச்சிகளும் தான் இருக்கு. அந்ந நாளுல இந்த மேல்பட்டு மலை முழுக்க ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகளும் தேனீக்களும்தான் இருந்திருக்கு. அவரோட டைரில ஒரு எடத்துல எழுதராரு “ஒருநாள் நானும் சீட்டையும் அந்த மலை உச்சிக்கு காலை நேரத்தில போனோம். அப்ப அந்த சமவெளி முழுவதும் பலவர்ண பட்டாம்பூச்சிகள் ஆயிரக்கணக்குல புற்களின் மேலே சிறகடித்துக் கொண்டிருந்தன. பசுமையான புல்வெளி பல வண்ண மலர்கள் தூரத்துல பாதி மேகங்களால் மூடப்பட்ட மலைச் சிகரங்கள்…. எங்களால அந்தக் காட்சியை பார்க்கவே முடியல. மூச்சு முட்டுது. இத்தனை அழகா, இத்தனை உயிர்களா, யாருமே பார்க்காத இந்த மலை மேல ஏன் இதை இறைவன் ஒளிச்சி வச்சிருக்கான்? சாதாரணமாக மனித மனத்தால். இந்த பேரழகை ஆச்சர்யத்தை தாங்க இயலுமா? நானும் சீட்டையும் அங்க நிக்க முடியாம எறங்கி வந்துட்டோம்” அப்டின்னு. இந்த எடத்தோட பழய பேரு பட்டு தரைக்காடு.
*******