கவிதைகள்
Trending

லூயி க்ளக் கவிதை; தமிழில் – பானுமதி.ந

மொழிபெயர்ப்பு கவிதை | வாசகசாலை

அப்பாவித்தனத்தின் மாயை

வழக்கம் போல் கோடையில் வயலுக்குச் சென்றாள்
தன் மாற்றம் ஏதேனும் தெரிகிறதா எனப் பார்ப்பதற்கு
நிழலாடும் குட்டையில் சிறிது நின்றாள்.

அதே பெண்; பெண்ணெனும் விலகா பயங்கரக் கவசம் ஒட்டியிருக்கக் கண்டாள்.
ஆதவன் தண்ணீரில் அருகில் தெரிகிறான், என் மாமன் என்னை உளவு பார்ப்பது போல் தோன்றுவதாக
இயற்கையின் அனைத்தும் ஏதோ வகையில் அவளுக்கு உறவு.
நான் தனியாக இல்லை என நினைக்கிறாள்.
அந்த எண்ணத்தை பிரார்த்தனையாக மாற்றுகிறாள்.
இறப்பு வருகிறது அந்த வேண்டுதலின் பலனென
அவன் எத்தனை அழகானவன் என்று யாரும் அறிவதில்லை
ஆனால், *பெர்செப்ஷனிக்கு நினைவிருக்கிறது.
அவள் மாமன் பார்த்திருக்கையிலேயே
அவளைத் தழுவினான் அங்கேயே
அவனது வெற்றுத் தோள்களிலே சூரியன் வெளிச்சமிட்டான்.
இந்தக் கடைசித் தருணம் அவளுக்குத் தெளிவாக நினைவிருக்கிறது.
பின் கருமைக் கடவுள் அவளை அணைத்துக் கொண்டான்.
கூச்செறியும் உள்ளுணர்வோடு  இந்த நொடியிலிருந்து
அவனின்றி அவளால் இருக்க முடியாது என்று
குறைந்த தெளிவின் நினைவு நிற்கிறது.
அந்தக் குட்டையில் மறைந்த பெண் மீண்டும் வர மட்டாள்;
ஒரு மாது வருவாள் தான் பெண்ணென இருந்ததைத் தேடி
குளத்தின் அருகே நின்று எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்
என்னைக் கடத்தி விட்டார்கள்.
ஆனால், அது தவறாக அவளுக்கு ஒலிக்கிறது.
அவள் உணர்ந்தது போல் அது தொனிக்கவில்லை.
பிறகு சொல்கிறாள் என்னைக் கடத்தவில்லையென்று
அப்புறம் சொல்கிறாள் என்னை நான் நிவேதனம் செய்தேன் என்று
என் உடலிலிருந்து தப்பிக்க நினைத்தேன் என்று
சில நேரங்களில் இதை நான் விரும்பினேன் என்று.
ஆனால், அறியாமை அறிவை விரும்புமா?
அறியாமை கற்பனையை விரும்புகிறது
அது இருக்கும் என நம்புகிறது
எல்லாப் பெயர்ச் சொற்களையும்
சுழற்சியாக அவள் சொல்கிறாள்
இறப்பு, கணவன், தெய்வம், அன்னியன்.
எல்லாம் எளிமையாக ஒலிக்கிறது
எல்லாம் மரபுடன் இருக்கிறது
நான் ஒரு எளிய பெண்ணாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறாள் அந்தப் பெண்ணை  நினைவில் கொணர அவளால் முடியவில்லை
ஆனால், குளம் நினைவில் வைத்திருக்கும் என நினைக்கிறாள்.
தன் பிரார்த்தனையின் பொருளை அவளுக்கு அது விளக்கும்
அதனால், அவளுக்குப் புரியும் அதற்கான பதில்
அளிக்கப்பட்டதா  அல்லவா என.

*Sweet daughter of the goddess Demeter. She was abducted by Hades and kept underworld to become its queen.

லூயி க்ளக்;

லூயி க்ளக் 1943ம் ஆண்டில் நியூ யார்க்கில் பிறந்தவர். எழுத்துப் பணி போக யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். 1968ஆம் ஆண்டில் இவர் ஏழுதிய முதல் தொகுப்பான ஃபர்ஸ்ட்பார்ன் நல்ல வரவேற்பை பெற்று அமெரிக்க இலக்கியத் துறையில் லூயிஸிற்கு முக்கிய இடத்தை பெற்று தந்தது.இவர் எழுதி 1992ஆம் ஆண்டில் வெளியான வைல்ட் ஐரிஸ் தொகுப்பிற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. இதுபோக அவரது அவெர்னோ (2006), ஃபைத்ஃபுல் அண்ட் விர்ச்சுவஸ் நைட் (2014) ஆகிய தொகுப்புகளுக்கு நோபல் தேர்வுக் குழு புகழாரம் சூட்டியுள்ளது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button