கட்டுரைகள்
-
Oct- 2024 -6 October
சுக்ருதம்: உறவுகளின் பொய் முகங்கள் – ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வி. வாசுதேவன் நாயரின் எழுத்தில், இயக்குநர் ஹரிகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த ‘சுக்ருதம்’(தமிழில் ‘நற்செயல்கள்’ என்று பொருள்) என்ற மலையாளத் திரைப்படம் குறித்து கட்டுரை எழுதுவதற்காக, மீண்டும் ‘சுக்ருதம்’ திரைப்படத்தை யூட்யூபில் பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். உடனே எனது…
மேலும் வாசிக்க -
6 October
பேராசிரியர் வ.அய்.சு.: பெயரிலியாக மறைய விரும்பிய பெருந்தகை – தஞ்சாவூர் கவிராயர்
எண்பதுகளில் டாக்டர் வ.அய்.சு தமிழ்ப் பல்கலைக்கழத்தின் முதல் துணைவேந்தராகப் பணி ஏற்றார். நான் அவரது தனிச்செயலராகப் பணிபுரிந்தேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு துறவியிடம் பணிபுரிந்தாகவே கருதுகிறேன். அலுவலகத்திலும் குடும்பத்திலும் அவர் பற்றற்ற செயல்பாட்டையே பின்பற்றினார். அவருடைய மூத்த மகன் காலமான…
மேலும் வாசிக்க -
6 October
எழுத்தாளர் பெருமாள்முருகனின் கூளமாதாரி நாவல் வாசிப்பனுபவம் – உதயபாலா
ஆடு ஓட்டியைப் பின் தொடர்ந்து நானும் ஒரு ஆடு ஓட்டியைப் போலவே மாறிவிட்டேன் என்று சொல்லும் அளவிற்கு இந்த நாவல் என் மனதிற்குள் லயித்துவிட்டது. கூளையன் எனும் சிறுவன் ஒரு தோட்டத்தில் பண்ணையத்திற்கு இருக்கிறான். அவனுடைய முதன்மையான வேலையே பட்டியாடுகளை ஓட்டிக்கொண்டு…
மேலும் வாசிக்க -
6 October
மெஷின் யுகத்து மனிதர்கள் – சுனில் கிருஷ்ணன்
மலேசியா வாசுதேவனின் குரலை ‘மனசிலாயோ’ பாடலில் கேட்கும்போது சட்டென துணுக்குற்றேன். கேட்க துள்ளலாக இருந்தது. இதில் துணுக்கற என்ன இருக்கிறது என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. மலேசியா வாசுதேவன் யாரெனத் தெரியாத எவரோ ஒருவர் இந்த பாடலைக் கேட்டால் அவர் எப்படி…
மேலும் வாசிக்க -
6 October
வெற்றிச் சக்கரவர்த்தி நெப்போலியனின் வீரமும் வீழ்ச்சியும்…! – றின்னோஸா
ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஒரு சாம்ராஜ்யத்துக்கே பேரரசன் ஆவது எல்லாமே திரைப்படங்களில் மட்டும்தான் சாத்தியமாகும். ஆனால், சினிமாவில் வருவது போல நிஜ வாழ்க்கையிலும் ஒரு உண்மையான மாவீரன் இருந்தார். அவர்தான் பிரான்ஸின் சக்கரவர்த்தி நெப்போலியன் பொனபார்ட் (Napoleon Bonaparte). உலகாண்ட பேரரசனாக,…
மேலும் வாசிக்க -
6 October
நெகிழியை உண்ணும் நுண்பூஞ்சைகள் – பூமி தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்கிறதா? – நாராயணி சுப்ரமணியன்
சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு படம் பரவலாகப் பகிரப்பட்டது. அதன் சாராம்சம் இதுதான்: “ப்ளாஸ்டிக்கை உண்ணக்கூடிய ஒரு வகை நுண் பூஞ்சையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள், பூமி தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்கிறது”. இந்தத் தகவலின் பின்னால் இருக்கும் அறிவியலை முதலில் விரிவாகப்…
மேலும் வாசிக்க -
6 October
எழுத்தாளன் : முதல் வாசகன் – முதல் விமர்சகன்; நாகரத்தினம் கிருஷ்ணா
எந்தப் படைப்பிற்கும் முதல் வாசகன் அப்படைப்பினை எழுதியவன் எனக்கூற சாட்சிகளோ நீதிமன்றமோ தேவையில்லை. முதல் வாசகனாக இருக்கும் நாவலாசிரியன், தனது படைப்பின் முதல் விமர்சகனாகவும் இருக்க முடிந்தால், நாவலுக்கும் நல்லது, அதன் படைப்பாளிக்கும் நல்லது. வாசகனாக இருப்பது வேறு; சொந்த நூலை…
மேலும் வாசிக்க -
6 October
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் ‘தீவுகள்’ நாவல் – இன்றைய வாழ்கையின் ஒரு முன்னோடி சித்திரம் – முஜ்ஜம்மில்
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி ஐயா அவர்களின் ‘தீவுகள்’ என்ற நாவலை சமீபத்தில் வாசித்தேன். இந்த நாவல் சற்று மேல் வர்க்க குடும்பத்தை பற்றிய ஒரு கதை. ஒரே குடும்பத்திற்குள் நடக்கின்ற கதைதான் இந்த மொத்த நாவலும். வழக்கமாக மத்திய தர குடும்பம்…
மேலும் வாசிக்க -
6 October
உழைப்பின் கண்ணியமும் (Dignity of Labour) வேலை பகிர்வும் (Division of Labour) – லதா
உழைப்பின் கண்ணியம் என்பது அனைத்து வகையான வேலைகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.. எந்தத் தொழிலும் உயர்ந்ததாகவோ, தாழ்ந்ததாகவோ கருதப்படக்கூடாது.. எந்த ஒரு மனிதரையும் அவர் தொழிலையோ/அவர் புரியும் வேலையயோ வைத்து பாகுபாடு காட்டப்படக்கூடாது என்ற ஒரு நிலை. இதுதான் நியாயமாக இருக்க…
மேலும் வாசிக்க -
6 October
மறதியில் உழலும் சொற்கள் – கிருஷ்ணமூர்த்தி
ஒரு வானொலி நிகழ்ச்சி. மக்களிடம் சமூகத்தில் நிகழும் ஏதேனும் ஒரு மாற்றத்தை மையப்படுத்தி கேள்வியை தொகுப்பாளினி முன்வைப்பார். மக்கள் தங்களின் கருத்துகளை அதையொட்டி முன்மொழிவர். அன்று முன்வைக்கப்பட்ட கேள்வி, பரந்துபட்டு வியாபிக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்தது. வானொலி நிகழ்ச்சிகளை பேசி ஒருங்கிணைப்பதற்கும்…
மேலும் வாசிக்க