கவிதைகள்
-
Mar- 2022 -10 March
செளவி கவிதைகள்
1. இரவுச் சாலை இரவை மிதித்துக்கொண்டு நடப்பவனின் பாதங்களில் மிச்சமிருக்கும் பகலின் அடையாளமென சூரியன் ஒளிந்திருக்கிறது அஸ்தமனமான பிறகும் ஒரு மாடு கழுத்தை மடித்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறது இன்னொரு மாடு நின்றபடி தூங்கிக்கொண்டிருக்கிறது இவ்விரண்டு மாடுகளின் தூக்கத்தைக் கலைக்கிறது நின்று கொண்டு சிறுநீர்…
மேலும் வாசிக்க -
10 March
மித்ரா அழகுவேல் கவிதை
பெருநேசந் தகுவி சகா நான் அனுப்பும் பிரிவுக்கான சமிக்கைகளையெல்லாம் நீ கூசாமல் கழுவிலேற்றிக் கொல்கிறாய் குருதியொழுகும் அக்கழு கொண்டே என் குறி புணரப் பார்க்கிறாய் ஒவ்வொரு கூடலிலும் நீ அழித்துக் கொண்டிருப்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் முன்னோர் என் அணுவில் ஏற்றி வந்த…
மேலும் வாசிக்க -
10 March
தீபிகா நடராஜன் கவிதைகள்
1. வெகுதூரமில்லை என் வீடு பேருந்தோ தொடரியோ ஐந்தாறு மணிநேரம்தான் ஆனாலும் அவ்வளவு தனித்திருக்கிறேன். எப்போதோ நான் போட்ட விதை இன்று பூத்திருக்கிறது எப்போதோ அப்பா வைத்த கொய்யா இப்பொது காய்க்கிறது என் ஊஞ்சல் இடம் மாறியிருக்கிறது என் அறையின் வண்ணம்…
மேலும் வாசிக்க -
10 March
பா. முரளி கிருஷ்ணன் கவிதைகள்
1. விரும்பத்தக்க பொந்தொன்று கடற்கரை கோயில்சுவர் பொந்தொன்றில் ஓம் எனும் மந்திரம் கேட்பதால் ஊர் மாந்தர் பரப்பினர் அம்மருட்கையின் திருப்புகழை எப்படியென மீசையை வருடி வருடி மயிர்வேரின் வலியில் ஒரு வேலின் கூர்மை. விடுயென ஓம் மந்திரத்தைக் கேட்க பொந்தில் காதைக்…
மேலும் வாசிக்க -
Oct- 2021 -18 October
விஷ்வக்சேனன் கவிதைகள்
1,முன்மதியப் பொழுதுகள் ****** இந்த முன்மதியப் பொழுதுகளின் வெயில் அவ்வளவு உவப்பானதாக இல்லை.. முன்மதியப் பொழுதுகளின் வெயில் பதட்டத்தையும் சோர்வையும் ஒருங்கே தருகிறது. பணி செல்லும் வாகன கூட்டம் வடிந்து நெரிசலற்று போயிருக்கும் இந்த நகரத்தின் வீதியில் ஒரு வேண்டப்படாத வெம்மையாக…
மேலும் வாசிக்க -
16 October
க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்
1.வேடிக்கை அருகாமைச் சுவர்கள் திறந்துகொள்கிறபோது நின்று வேடிக்கை பார்க்க கடைவீதியின் பழக்கடையொன்று கிடைத்துவிடுகிறது உடன்வந்தவராய் கைகாட்டிவிட்டு கடை மூலையில் சிக்னலாகிப் போகிறேன் வெங்காயங்களைப் புடைக்கும் கிழவி சட்டென்று கண்காட்ட அவள் கண்களில் உரிந்த சிறு வெங்காயங்கள் ஒரு பொம்மையாவது வாங்க வேண்டும்…
மேலும் வாசிக்க -
16 October
ஜீவன் பென்னி கவிதைகள்
ராணுவ பூட்ஸ்கள்- 1 * போர்களில் களைப்படைந்திருந்த ராணுவ பூட்ஸ்கள், தாங்கள் மிதித்து விட்டு வந்திருந்த நிலங்களை, பூக்களை, தானியங்களை, மக்களை நினைவிலிருந்து எடுத்துப் பார்க்கத் துவங்குகின்றன. கடந்து வந்திருந்த வழி முழுவதிலும் அவைகளின் பரிதாபமான உடைந்த குரல்கள் தனியாகக் கிடக்கின்றன.…
மேலும் வாசிக்க -
Aug- 2021 -27 August
இனியவன் காளிதாஸ் கவிதைகள்
பிரியங்களின் வாய்ப்பாடுகள் ஓரொண்ணு ஒண்ணு, ஈரொண்ணு ரெண்டு எனத் தொடங்குவதில்லை பிரியங்களின் வாய்ப்பாடுகள் சிலநேரம் அவை ஆயிரத்தில் தொடங்கி மில்லியனைக் கடக்கின்றன சிலநேரம் இலட்சத்தில் தொடங்கி கோடிகளில் புரள்கின்றன ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும் இதயங்களின் சென்செக்ஸ் புள்ளிகளின் உச்சம் தொட இரவல்…
மேலும் வாசிக்க -
27 August
சிவக்குமார் கணேசன் கவிதைகள்
1 மாலை மழையைச் சொல்லும் வெயிலில் தகிக்கிறது சமணர் மலை. உதடுகளை நனைத்திறங்கும் குளிர்ச்சியை தலையசைத்துப் பார்க்கிறது ஓணான் குஞ்சு. பாறை விளிம்பில் அமர்ந்து வெயிலில் நனைகிறது ஒற்றை வல்லூறு. யாருமற்ற படிகளில் ஏறுகையில் திரும்பி சுயமிகளில் பதிகிறார்கள் இளைய ஆதாமும்,ஏவாளும்.…
மேலும் வாசிக்க -
23 August
செல்வசங்கரன் கவிதைகள்
கடைசி வாழ்வு அவர் இறந்துவிட்டாரென்ற செய்தியை அந்தக் குழந்தைதான் முதலில் சொன்னது அவரது இறப்பை யாரிடமும் சொல்லாவிட்டால் அவர் இறக்கவில்லையென்றுதானே அர்த்தம் என இரண்டு நாட்களாக எல்லாரும் அவரவர் வேலையில் மும்மரம் காட்டியவாறிருந்தனர் அவர் இறந்து கிடக்கிறார் பாருங்கள் என்று எல்லாரையும்…
மேலும் வாசிக்க