கவிதைகள்
-
Sep- 2020 -9 September
கவிதைகள் – ச.ப்ரியா
அவனது கருப்பு, வெள்ளைக் குறுந்தாடியின் முடிமுட்கள் நிகழ்திய கன்னத்தின் இளஞ்சிவப்பு நிற சிராய்புகளையும் முத்தம் என்றே சொல்கிறாள் அவள்! *** *** *** *** உனது விழிகள் இரண்டும். இரவுப் பறவையின் கூர்அலகைப் போன்றது. அதில் விழுந்து துடிக்கும். எனது சிறு…
மேலும் வாசிக்க -
9 September
கவிதைகள் – ஏ.நஸ்புள்ளாஹ்
நாட்கள் மேசையில் பரப்பிக் கிடக்கின்றன எனது எதிர்கால நாட்கள் அவைகளில் எனதுக்குப் பிடித்தமான நாட்களை மாத்திரம் தெரிவு செய்தேன் மீதியாய் இன்னும் சில நாட்கள் இருந்தன அந்த நாட்களில் ஒன்றைத் தெரிவு செய்தேன் சிறியதும் பெரியதுமாக மழை பொழிந்து கொண்டிருந்தது. வீடுகளோ…
மேலும் வாசிக்க -
9 September
கவிதைகள் – குமாரநந்தன்
பிஞ்சுக் கண்ணீர் துளிகள் தனிமையின் இருண்ட அடர் வனத்தில் நினைவுகளின் கல் இடுக்குகளில் ஓயாமல் சலசலக்கிறது என் கண்ணீர்த் துளிகள் ஒளிர்வும் குளிர்மையும் கொண்ட அத்துளிகள் திரண்டு மேலெழுகின்றன ஒரு நிலவாய் அதில் இன்னும் ஒளியேற்ற வேண்டும் அது சூரியனாய் தகிக்க…
மேலும் வாசிக்க -
9 September
கவிதைகள் – செளவி
மழலை வெளிச்சம் குழப்பங்கள் வலிகள் தோல்விகள் கவலைகள் ஏமாற்றங்கள் போராட்டங்கள் என வாழ்வின் அவ்வளவு இருட்டுக்கிடையிலும் பேருந்தில் அம்மாவோடு பயணிக்கும் மழலையொன்று ஏற்றி வைக்கிறது சில நிமிட வெளிச்சத்தை சில நிமிட மகிழ்ச்சியை சில நிமிடங்களுக்கான சூரியனை… *** *** *** *** *** *** *** *** *** *** *** ***…
மேலும் வாசிக்க -
Aug- 2020 -24 August
கவிதைகள் -அன்றிலன்
கேள்வி அடையும் ஞானம் ஒரு கேள்வியோடு அது தேடும் பதில் ஊருக்குப் பயணப்படுகிறேன். அப்பதில் ஊரின் பாதை அவ்வளவு எளிதாய்க் கிடைக்கவில்லை. எதிர்ப்படும் யாவர் தரும் வழிகளின் வரைபடத்திலும் சமாதானம் அடையவில்லை. அனுமானத்தோடு ஆறேழு ஊர்களின் வழியே கடந்தாயிற்று பின்னொரு நாளில்…
மேலும் வாசிக்க -
23 August
கவிதைகள்- அருணா சுப்ரமணியன்
வரம் துளையாகத் தான் வாய்ப்பதெனில் நீ ஏந்தியிருக்கும் மூங்கிலில் எனை துளைத்திடு…. உன்விரல் தொடும் துளைகளை விடவும் இதழ் குவியும் அத்துளையாகும் வரம் கொடு.. பிழையான பிறப்பில் பிழைப்பதை விட உன் சுவாசத்தின் ஸ்பரிசத்தில் இசையாகி பிழைத்திருக்கிறேன்.. ********** ஆதாரங்கள் ஓட்டப்…
மேலும் வாசிக்க -
23 August
கவிதைகள்- அனாமிகா
பரிசுத்தம் நான் கைகளை கழுவிக்கொண்டேயிருக்கிறேன் அதிகபட்சம் இரண்டுமணி நேரமாக கைகளை கழுவிக்கொண்டிருக்கிறேன் நாளுக்கு பத்துப்பதினைந்து முறை கழுவுகிறேன் இதுவொரு நோய் சுத்தப்படுத்துதலில் இருக்கும் அதீதம் எனை அந்தரங்கமாய் ஆசுவாசப்படுத்துகிறது முகத்தில் தொடங்கி என் மர்ம உறுப்புவரை இப்படி தண்ணீரில் நனைப்பது விசேஷமாய்…
மேலும் வாசிக்க -
22 August
கவிதைகள்- க.ரகுநாதன்
ஆறு இலக்க எண் உன் முகநூல் கணக்கு எதுவென்று தேடியதில்லை. இன்ஸ்டாவில் உன் ஐடி என்ன? மொபைல் எண்ணே இல்லை என்றான பின் வாட்ஸ் அப்புக்கு வாய்ப்பே இல்லை. ட்விட்டரிலோ எனக்கு கணக்கில்லை. டெலிகிராமில் இருப்பாயோ? ஆடி மகிழ்ந்து விடியோ போடும்…
மேலும் வாசிக்க -
22 August
கவிதைகள்- ப.மதியழகன்
எதிரொலி கனவுலக கடவுளுக்கு நன்றி பூமியில் நான் இளைப்பாற முடிவதில்லை நினைவுச் சங்கிலி இல்லையென்றால் புவிவாழ்க்கையும் கனவு போலத்தான் விழித்ததும் கனவென்று தெரிந்தவுடன் இன்னும் கொஞ்ச நேரம் வாழ்ந்திருக்கலாமே என்று தோன்றுகிறது கனவுக்கடலிருந்து அன்றாடம் ரதிகள் எழுந்து வருகிறார்கள் கனவுக்கும் நனவுக்கும்…
மேலும் வாசிக்க -
22 August
கவிதைகள்- கா. சிவா
வேண்டாம் எதிர்வரும்போது வெட்டிச்செல்லும் மின்பார்வை இல்லை, மணிக்கொருமுறை முகம்நோக்கி பதறுவதும் இல்லை, அவ்வப்போது திடுக்கிட வைக்கும் வெடுக்நடையும் இல்லை… அவள் அருகில்லா இப்பொழுதில்.. வெளியெங்கும் விரவியுள்ளது அவள் விழியின் ஒளி.. மனதெங்கும் நிறைந்துள்ளது அவளின் இதமான வாசம்.. முகிலென மிதக்க வைக்கிறது…
மேலும் வாசிக்க