கவிதைகள்

  • Aug- 2020 -
    5 August

    கவிதைகள்- மதுரா 

    வனமோகினி ஏழுகல் ஆட்டத்தில் கூழாங்கற்களை இணைத்தபடி இளைப்பாறுகிறாள்… நிறமில்லா மலர்வனம் ஒன்றை சிருஷ்டிக்க மறுபடியும் முயற்சிக்கும் கரங்களில் தாழம்பூ மணம்.. புதரோரம் முள்வேலிக்குள் பாம்புகளின் சட்டைகள் .. நீலம் பாரித்த வானத்தின் மின்னல் கீற்றுகளில் விழுங்கித் தொலைக்கிறாள் வண்ணமற்ற சூரிய குஞ்சை.…

    மேலும் வாசிக்க
  • 5 August

    கவிதைகள்- அ.ரோஸ்லின் 

    நனைந்த சுடர் வழி மாறிய குட்டி சிங்கம் ஆதரவற்ற தனது குரலால் காட்டின் நடுவே படபடக்கும் ஒரு சுடரை ஏற்றுகிறது தளர்ந்தாடும் திரியின் ஒளியை தாயின் கண்களாக அடையாளம் கொள்ளும் குட்டி விலங்கு சிற்றோடை அருகில் பூனைக்குட்டியென குளிர்ந்த நீரால் தன்னை…

    மேலும் வாசிக்க
  • 5 August

    கவிதைகள்- செல்வசங்கரன் 

    அத்துவானக் காடு அத்துவானக் காட்டில் தண்டவாளம் வானம் பார்த்துக் கிடந்தது சிறு செடியிலிருந்து சுற்றி எல்லாமே அப்படித்தான் கிடக்கிறது ஒரு ட்ரெயின் அந்த நேரம் பார்த்து தண்டவாளத்தில் ஓட ட்ரெயினை அந்தப் பக்கம் ஓரமாக ஒரு புரட்டு விட்ட தண்டவாளம் “எனக்கு…

    மேலும் வாசிக்க
  • 5 August

    கவிதைகள்- முத்துராசா குமார்

    ஆழியிலிருந்து பிரிக்கப்பட்ட நான் ரயில் மூஞ்சியில் மோதித்தெறித்த எருமைகளின் எலும்புகளில் அணிகலன்கள் செய்து பிழைக்கிறேன். வழிபாட்டுக்கு சுறாக் கொம்பு பாடலுக்கு அம்பா சொற்கள் வாசத்திற்கு சமுத்திரக் கவுல் நினைவுகளாக மட்டுமிருக்கின்றன. நினைவுகளையும் திருட வந்தால் காது குடையும் பஞ்சுமுனைக் குச்சியின் இரு…

    மேலும் வாசிக்க
  • Jul- 2020 -
    17 July
    Vibeeshanan

    கவிதைகள் – விபீஷணன்

    பிராட்டி வயிற்று செல்களைக் கொத்தித் தின்னும் பட்டாம்பூச்சிகளை மட்டும் மேய்க்கத் தெரிந்தவளாக இருக்கிறாய் சிலம்பணிந்து ஆதிகாலத்து ஆப்பிளைக் கவ்வியபடி ஒரு மாயமான் வரக்கூடும் தயவுசெய்து பிடித்துவரப் பணிக்காதே! அட்லஸ் ல் இல்லாததொரு தேசத்திற்கு காலம் கடத்திவிட்டால் கனவுகளிலும் துப்பாக்கியில் வெண்புறாக்களைக் குண்டுகளாக்கும்…

    மேலும் வாசிக்க
  • 17 July
    baranitharan

    கவிதைகள் – க.பரணிதரன்

    திக்கற்று திரிந்துகொண்டிருந்தேன் மூதாயின் மலர்த்தோட்டம் என்னை வரவேற்றது ஆயிரமாயிரம் மலர்களுக்கு மத்தியில் பவளமல்லிக் கன்றொன்றைக் கண்டடைந்தேன் என் மூன்று காலங்களும் மலரும்படி அஃது ஒருமுறை பூத்தது அதன் மணத்தில் சன்னதம் கொண்டு காலவெளி கடந்து கூத்தாடிய நான் குப்புற கவிழுமாறு ஏதோ…

    மேலும் வாசிக்க
  • 17 July
    anandhi

    கவிதைகள் – ஆனந்தி ராமகிருஷ்ணன்

    இப்பொழுதுகள்! இயற்கை பேருருக் கொண்டு வஞ்சித்த இப்பொழுதுகளில் உடல் முழுவதும் தீண்டும் பசியால் வெளிக்காட்டாத ஊற்றுக்கண்களாய் துயருரும் ஓடையில் மிதக்கின்றன விழிகள் நிதம் காற்றைத் தின்று, பசியாற மனதிற்குள் நடக்கும் யுத்தத்தை மதகடைத்தப்பின் வீசும் வாளாய் உயிர் ஆவியைக் கொண்டு நுகர்ந்திருக்கிறோம்…

    மேலும் வாசிக்க
  • 17 July
    sami krish

    கவிதைகள் – சாமி கிரிஷ்

    காரம் தூக்கலான நாட்குறிப்பு மிளகாய் நெடி பறக்கும் அந்தச் சந்தினை தும்மல் இல்லாமல் கடப்பதென்பது ஆபூர்வம். மிளகாய் அரைக்க வருபவர்கள் நாசி துளைக்கும் கலப்படமற்ற காரத்தை சமைக்கும் குழம்பின் சுவையெண்ணி ஊறும் நாவெச்சிலால் தணித்துக்கொள்கிறார்கள் ‘காரமே கண் கண்ட தெய்வமென்கிறார்’ கல்லாப்பெட்டியில் கம்பீரமாய்…

    மேலும் வாசிக்க
  • 17 July
    Mithra Alaguvel

    கவிதைகள் – மித்ரா அழகுவேல்

    பாஸ்வேர்ட் திடீரென அனைத்துக் கடவுச்சொற்களையும் மறந்து போகிறான் துர்பாக்கியவாதி ஒருவன் முகநூல் இன்ஸ்டாக்ராம் ட்விட்டர் டின்டர் ஓலா ஊபர் ஸ்விகி ஜொமேட்டோ ஃபோன்பே ஜிபே அனைத்தும் ஒற்றைக் கடவுச் சொல்லுக்காக இறைஞ்சுகின்றன அலுவலக மடிகணினியும் சொந்த மடிகணினியும் ஆளுக்கொரு புறம் திருப்பிக்…

    மேலும் வாசிக்க
  • 17 July
    jeevan benny

    கவிதைகள் – ஜீவன் பென்னி

    தேவகுமாரனுக்குள்ளிறங்கிக் கொண்டிருக்கும் ஆணிகள் பரிசுத்தமான ஆன்மா தன் அப்பத்தைப் பிரித்துக்கொடுப்பதற்கு முன்பு ஜெபிக்கிறது. காட்டிக்கொடுக்கும் மனது அந்த இடைவெளியில் தான் வளர்ந்து நிற்கிறது. ***** தேவகுமாரன் தனக்குள்ளிறங்கிக் கொண்டிருந்த ஆணிகளை ஒரு முறை நன்றாகப் பார்த்து சிரித்துக் கொண்டார், அவை ஏற்படுத்தப்…

    மேலும் வாசிக்க
Back to top button