சிறார் இலக்கியம்
-
Jun- 2025 -4 June
ப்ராங்கி ராணியார் – மீ.மணிகண்டன்
காலை நேரம் சூரியன் இப்போதுதான் மெல்ல மேலே ஏறிக் கொண்டிருந்தான். ஆற்றோரம் அமர்ந்துகொண்டு ப்ளாப் … ப்ளாப் … ப்ளாப் … எனத் தண்ணீரில் தன் கால்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தது ப்ராங்கி என்ற அந்தத் தவளை. தன்னுடைய குழந்தைகளான தலைப்பிரட்டைகள்…
மேலும் வாசிக்க -
Apr- 2025 -5 April
சிரிப்பு ராஜா சிங்கமுகன் 21 – யுவா
21. புதிய அரசாங்கம் ‘தொம்… தொம்… தொம்’ முரசுவின் உற்சாக முழக்கம் அரண்மனையின் ஒரு பக்கம் இருந்த பாதாளச் சிறைசாலைக்குள்ளும் ஒலித்தது. ‘’கேட்கிறதா மந்திரி கிழமே…’’ என்று தலையை உயர்த்தி ஜன்னலைப் பார்த்தவாறு கடுப்புடன் பேசினான் கம்பீரன். ‘’என் செவிகளுக்கு எந்தக்…
மேலும் வாசிக்க -
Mar- 2025 -19 March
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 20 – யுவா
20. நேருக்கு நேர் ‘’வேந்தே… நம் நாட்டின் எல்லையில் அரிமாபுரி அரசியும் அந்நாட்டுப் பெண்களும் திரண்டு வந்துள்ளார்கள்’’ குழலனின் கழுத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு சுகந்தன் சில அடிகள் நகர்ந்தபோது, ஒரு வீரன் வேகமாக உள்ளே வந்து சொன்னான். புலிமுகன் திகைத்துப் போனார்……
மேலும் வாசிக்க -
19 March
அசாதாரணமான வெள்ளரிக் காய்-ஷாராஜ்
(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) ஒரு தோட்டக்காரரின் தோட்டத்தில் ஒருநாள் பீப்பாய் அளவுள்ள வெள்ளரிக் காய் காய்த்திருந்தது. அதன் ப்ரம்மாண்டத்தைக் கண்டு அவர் அதிசயித்தார். குடும்பத்தாரிடமும் அண்டை அயலாரிடமும் அதைத் தெரிவிக்கவே, அவர்களும் வந்து கண்கள் விரியப் பார்த்து அசந்தனர். சேதி பரவி,…
மேலும் வாசிக்க -
4 March
பச்சை வனத்தில் சிவப்பு ஆப்பிள் – மீ.மணிகண்டன்
பச்சை வனத்தில் பலவிதமான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. விலங்குகள் யாவும் வியக்கும் வண்ணம் அந்த வனத்தில் ஒரேயொரு ஆப்பிள் மரம் இருந்தது. ஆப்பிள் மரம் இருந்த இடம் மந்து குரங்கிற்குச் சொந்தமான சிறிய தோட்டம். எனவே அந்த மரத்திற்கு மந்துவே உரிமையாளனாக…
மேலும் வாசிக்க -
4 March
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 19 – யுவா
19. புலிமுகன் திட்டம் ‘’அரிமாபுரி பொடியனுக்கு அதிகாலை வணக்கம்’’ என்று கேலியுடன் வரவேற்றார் புலிமுகன். ‘’வேங்கைபுரி மன்னருக்கு வணக்கம்’’ என்றான் குழலன். அந்த மாளிகையின் வரவேற்பறை போலிருந்த இடத்தில் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார் புலிமுகன். ‘’என்னை எதிர்பார்த்தாயா பொடியா?’’ என்று கேட்டார்.…
மேலும் வாசிக்க -
Feb- 2025 -18 February
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 18 – யுவா
18. வாள் விளையாட்டு சிங்கமுகன் உப்பரிகையை நெருங்கிய நிமிடம், ‘படபட’ என்று சிறகுகளை அடித்துக்கொண்டு வந்தமர்ந்தது அந்தப் புறா. அதன் காலில் ஓர் ஓலை கட்டப்பட்டிருப்பதைக் கண்டு புருவங்களைச் சுருக்கினார் சிங்கமுகன். புறாவை நெருங்கி கையில் ஏந்தினார். பார்வையை வெளியே வீசினார்.…
மேலும் வாசிக்க -
1 February
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 17 – யுவா
17. நிலவறை விடியல் ‘’இன்னும் சற்று நேரத்தில் விடிவெள்ளி எழுந்துவிடும். வெறுங்கையுடன்தான் குழலனின் தாய் முன்பு சென்று நிற்கப் போகிறோமா?’’ சூர்யனின் குரலில் பெரும்சோர்வு ஒலித்தது. அவர்கள் அந்த ஆற்றங்கரையில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். சூறாவளி சற்றுத் தள்ளி புல் மேய்ந்துகொண்டிருந்தது. பல…
மேலும் வாசிக்க -
Jan- 2025 -16 January
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 16 – யுவா
16. வற்றாத சுரங்கம் ‘’உன் பிறந்தநாளில் இத்தனை இடர்கள் நடந்திருப்பது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது கிளியோ’’ என்று குரல் கம்ம சொன்னார் சிங்கமுகன். நள்ளிரவின் நிலவொளி சாளரம் வழியே உள்ளே நுழைந்து அவர் அமர்ந்திருந்த கட்டிலை நனைத்தது. அருகே அமர்ந்திருந்த…
மேலும் வாசிக்க -
5 January
சிரிப்பு ராஜா சிங்கமுகன்;15 – யுவா
15. குழலன் எங்கே? அரசி கிளியோமித்ராவுக்கு உடனடியாக விஷமுறிவு மருந்து கொடுத்த வைத்தியர், பாயாசத்தைப் பரிசோதித்துவிட்டு, ‘’ஆம் அரசே… இதில் விஷம் கலந்திருப்பது உண்மைதான். நல்லவேளை அரசியார் சில மிடறுகளே அருந்தினார்’’ என்றார். அடுத்த நொடி… ‘’அடிப்பாவி… உன்னை மகள் போல…
மேலும் வாசிக்க