சிறுகதைகள்

  • Apr- 2026 -
    13 April

    உணவுப் பொதி சுமக்கும் கடவுளின் தூதுவர்கள் – இலட்சுமணப் பிரகாசம்

    வீட்டுப் படிப்பறையில் அலுவலக அதிகாரி நடத்திக்கொண்டிருந்த கூகுள் மீட்டிங்கில் இருந்த வேளையில் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தவள், “உங்களுக்குச் சாப்பிட என்ன வேணும்?“ என்றாள். கூகுள் மீட்டிங் போய்க்கொண்டு இருப்பதாகவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் முடியும் தறுவாயில் இருப்பதையும் சைகையால் காட்டி மீண்டும் கவனத்தை அலுவலக அதிகாரியின் கட்டளையைச் செவிமடுக்கத் தொடங்கினேன். அடுத்த சில நிமிடங்களில் இணைய வழியிலான கூகுள் மீட்டிங் முடிந்தது. அதுவரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காதுகளில் மாட்டியிருந்த கருவிகள் காதை சூடாக்கி இருந்தன. அதிகாரியின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில் இருந்த வேளையில் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பதற்கும் தோன்றாது. இப்போதோ தொண்டை வறண்டிருந்தது.  காதுகளில் பரவியிருந்த சூடு உடல் முழுவதும் பரவி கொதிநிலைக்குச் செல்வது போலிருந்தது. எத்தனை மணி நேரம் உழைத்தாலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தங்களுடைய ஊழியர்கள் மீது கருணையே வராது. கார்ப்பரேட் கம்பெனியில் பணிக்குச் சேர்கிற நாள்முதல் அவர்களுடைய விதிகளுக்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும். கார்ப்பரேட் கம்பெனியின் ஊழியர்கள் நவீன யுகத்தில் எளிதில் கிடைக்கிற அடிமைகள், சாசுவதமான சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட பலியாடுகள் என்ற எண்ணம் ஐ.டி ஊழியர்களுக்குக் கல்வெட்டு போலப் பதிந்தாலும் நாளுக்கு நாள் அன்றாடப் பொருட்களின் விலைவாசி ஏறுகின்றன. மாதாமாதம் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்துக்கொள்கிற வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த…

    மேலும் வாசிக்க
  • 13 April

    இடைப்பட்ட வாழ்க்கை – பாலமுருகன். லோ

    “சார், உங்க கருத்தைச் சொல்ல முடியுமா?” “ஏம்ப்பா… கேள்வி கேக்குறீங்க? எதைப் பத்தி, இல்ல, யாரைப் பத்தின்னு தெரிஞ்சாதானே பதில் சொல்லச் சௌகரியமா இருக்கும்.” “அதான், தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் கொடுக்கப்பட்டதே! உங்களைப் போல அவரும் ஒரு நடிகர்தானே.” இந்தக் கேள்வியைக் கேட்டவுடன், முகம் முழுக்கக் கோபம் பொங்க, ஏதோ ஒரு நாகம் அவரைத் தீண்டியதுபோல ஒரு படபடப்பு…

    மேலும் வாசிக்க
  • 13 April

    பெரியது – மழைக்குருவி 

    மாலை நான்கு மணிக்கு வர வேண்டிய பேருந்து இன்னமும் வரவில்லை. தட்டாம்பட்டியில் இருந்து ஏழு பேர் கொண்ட குழு கிளம்பி அரசமரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாயிற்று. முருகராசு, தன் சட்டைப்பையிலிருந்து நைந்து போன நெகிழியில் வதங்கிப் போயிருந்த வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பு தடவ ஆரம்பித்தார். பேச்சி…

    மேலும் வாசிக்க
  • 13 April

    பரந்து கெடுக – பாக்கியராஜ் கோதை

    “எழுத்தாளரா மட்டும் ஆயிடாத, கிறுக்குப் புடிச்சிடும்” “ஏன்?” “உலகத்துல பாக்குறதெல்லாம் கதையாத் தெரிய ஆரம்பிச்சு, சாதாரண வாழ்க்கை வாழ முடியாம போய்டும். ஒருத்தன் செத்தாலும், ஒருத்தன் என்ன ஒருத்தன், உன்னப் பெத்த அம்மாவே செத்தாலும் அதுவே கதையாத்தான் தெரியும். வர்ற கண்ணீருக்கு முன்னாடி இது கதையா மாறுனா எப்படியிருக்கும்னுதான் தோணும், அம்மா செத்ததுக்கு அழுவாம அதுல கதையத் தேடுறவன் கிறுக்கனாத்தான இருக்க முடியும்” கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட அந்த எழுத்தாளருடனான இந்த உரையாடலை என்னால் …

    மேலும் வாசிக்க
  • Mar- 2026 -
    11 March

    முத்தத்தின் வாசனை! – ராம் சங்கர்

    “உனக்கு என்ன வேணும்?” “எனக்கு என்ன வேணும்” எனத் தாமதிக்காமல் அவள் கேட்ட மறு கேள்வியால் உருவான மௌனம், அந்த மங்கலான அறையை ஆரத்தழுவியது. மௌனத்தின் வெப்ராளம் தாளாமல் மீண்டும் கேட்டான்… “உனக்கு என்ன வேணும்? “என் தலையை மட்டும் தொட்டு…

    மேலும் வாசிக்க
  • 11 March

    பழைய கணக்கு (வாத்தியார்)…..! – கே.ரவிஷங்கர்

    “மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா? இவ்வளவு வருஷம் கழிச்சு இது தேவைதானா? அவரு மறந்தே போய் இருப்பாரு. எனக்கும் சொல்லிச் சொல்லி போரடிச்சுப் போச்சு. மனசுல இப்படி வாலண்டிரியா இழுத்துவிட்டுட்டு இருக்கீங்க” மனைவி சுந்தரி பரிதாபமாகப் பார்த்தாள் சிவஞானத்தை. நண்பன் சக்திவேல் சுந்தரியுடன் சேர்ந்துகொண்டான்.…

    மேலும் வாசிக்க
  • 11 March

    குணுக்கம் – சுதர்சன்

    மாடிப்படியேறி வரும்போதே எங்களுக்கு எதிர் வீட்டிலிருந்து சாமான்களை அட்டைப்பெட்டிகளிலும் சாக்கு மூட்டைகளிலும் கட்டி, ஆட்கள் தூக்கிக்கொண்டு படி இறங்கியபடி இருந்ததைக் கவனித்தேன். மூன்றாவது மாடியிலிருந்து தரைத் தளம் வரை படியில்தான் இறங்க வேண்டும், மின்தூக்கி ஏதுமில்லை. அம்மா இன்னும் வேலையிலிருந்து வந்திருக்கவில்லை.…

    மேலும் வாசிக்க
  • 11 March

    எடுபிடி – கனகா பாலன்

    “ஒரு ஆம்பளைன்னா உரக்கப் பேசி, மீசை முறுக்கோடு கம்பீரமா இருந்தாத்தானே மரியாதை. இப்படியா, யாரு என்ன சொன்னாலும் ஆமாஞ்சாமி போடுறது. உமக்குன்னு சொந்தமா மூளை இல்லையா” என்று அடிக்கடி அப்பாவின் இயல்பைக் குத்திக்காட்டி பேசும் அம்மாவை எனக்கும் பிடிக்காமல் போய்விட்டது. அப்பா…

    மேலும் வாசிக்க
  • 11 March

    அந்த இரண்டாயிரம் ரூபாய்

    1 கடந்த ஒரு வாரமாக வாடகைக் காரை எடுத்துக்கொண்டு அப்பாவும் அம்மாவும் அருப்புக்கோட்டையில் தொடங்கி, சென்னை வரையிலும் பரவிக் கிடக்கும் உறவுக்காரர்களுக்கெல்லாம் பத்திரிக்கை வைத்துவிட்டு, இன்று காலைதான் வீடு திரும்பினார்கள். பயண அலுப்பை அகற்றுவதற்குப் பகல் நேரத்திலேயே பத்து மணி நேரம்…

    மேலும் வாசிக்க
  • Feb- 2026 -
    10 February

    விடுப்பு – மழைக்குருவி

    குமரனுக்கு படபடப்பாகவே இருந்தது. இன்றைக்காவது எப்படியாவது மேனேஜரிடம் லீவு கேட்க வேண்டும். லீவுக்காக சூப்பர்வைசரிடம் பேசும்போதெல்லாம்,”மேனேஜர் கடும் டென்ஷனில் இருக்கிறார். இப்பொழுது வேண்டாம்”என்று மறுத்து விடுகிறார். ‘ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பணிபுரியும் இத்தனை பிரம்மாண்ட தொழிற்சாலையில் என் ஒருவனுக்கு விடுப்பு கிடைப்பது என்ன…

    மேலும் வாசிக்க
Back to top button