சிறுகதைகள்
-
Jul- 2023 -6 July
தூய்மையெனப்படுவது – கோ.புண்ணியவான்
கல்யாணிக்கு கதவைச் சாத்தியதும்தான் புதிய காற்று நுழைந்ததுபோல இருந்தது . நிம்மதி பெருமூச்சு விடுவதற்காக அவளுக்கென பிரத்தியேகமாக நுழைந்த காற்று அது. விருந்தினர் அறைக்குள் புதிய வெளிச்சம் பிரவாகித்திருந்தது. சன்னலுக்கு வெளியே கதிரொலி பாய்ந்து பச்சை வெளி பளீச்சென்று ஜொலித்தது. இதெல்லாம்…
மேலும் வாசிக்க -
6 July
அதே கண்கள் – தயாஜி
துர்க்கனவு போல வந்து போகிறது அவள் முகம். அவளின் கண்கள். அது சுமந்திருக்கும் செய்தி. இதுவொன்றும் புதிதல்ல. அவளை மறந்துவிடுவேனோ என்ற அச்சம் அம்முகத்தின் வருகைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால்………… எஸ்.பி.எம் தேர்வு முடிந்த நிலையில் சிலமாத விடுமுறை கிடைத்தது. நல்ல…
மேலும் வாசிக்க -
5 July
அம்மாவின் மூன்று நாட்கள் – தேவசீமா
இன்று ஜனவரி மூன்றாம் தேதி, மருத்துவமனைக்கு வந்து இன்றோடு இருபத்து மூன்று நாட்கள் ஆகி இருந்தன. இவ்விடத்தில் ஒன்றும் 2012 ல் கடந்த அந்த இருபத்தி மூன்று நாட்களையும் குறித்து முழுமையாகப் பேசப் போவதில்லை. பேசுவது போல் பேசிப் பேசி அந்நாட்கள்…
மேலும் வாசிக்க -
5 July
கதை – ஆத்மார்த்தி
“நான் சொல்லப் போறது கதை மாதிரி தோணும். நம்பக் கஷ்டமாக் கூட இருக்கும். பட், அதான் என்னோட பின்புல உண்மை” என்றார் திலகன். ரவியும் செல்வினும் புன்னகைத்துக் கொண்டார்கள். திலகன் தன் கையிலிருந்த நிறங்கெட்ட திரவத்தை மேலும் ஒரு மடக்கு உறிஞ்சியபடியே,…
மேலும் வாசிக்க -
5 July
ம்க்கும்.. – கவிதைக்காரன் இளங்கோ
“ஏன் அப்படி பாக்குற? என்னால டயலாக்ஸ்ல கவனம் செலுத்த முடியலடா” “சரி.. நான் ஒரு தம் அடிச்சிட்டு வந்திடறேன்.. யூ கேரியான்” மனோரஞ்சன் அவளைத் தனியாக விட்டுவிட்டு மெதுவாக எழுந்து பால்கனிக்கு போய் நின்றுகொண்டான். இந்த டபுள் பெட்ரூம் ஃபிளாட் வசுமித்திரையினுடையது.…
மேலும் வாசிக்க -
5 July
சுவையிழந்த நாக்கின் தளுகை – லட்சுமிஹர்.
தனக்கு பிடித்த ஒருவருக்கான உணவை இப்படியாக வாங்க வருவேன் என்று ஒரு போதும் எண்ணவில்லை. அவரின் பல்வேறு கதைகளின் கதாப் பாத்திரங்கள் அனைவரும் பொரிப்பிரியர்களாகவே இருந்திருக்கின்றனர் அவரின் கதையை வாசித்தவர்கள் எல்லோருக்கும் அது தெரியும். அவரை ஒருமுறை கூட நேரில்…
மேலும் வாசிக்க -
5 July
நித்தியம் – சுரேஷ் பிரதீப்
1 ஜீனத் அம்மன் மளிகை ஸ்டோர் நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்துக்கு எதிரே இருந்தது. அது திருவாரூரில் உள்ள சிறிய நகரம். தொடர்ந்து சிறிதாகவே இருக்க விருப்பமில்லாமல் விரிந்து கொண்டே போனது. நகரின் இரண்டு பக்கமும் ஆறு ஓடியதால் பெருக்க…
மேலும் வாசிக்க -
5 July
திருவிருத்தி – மஞ்சுநாத்
இரத்தம் உந்தப்பட்டு உச்சி நோக்கிப் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தியது. இறக்கத்திலிருந்து சிரமத்துடன் மேலேறினோம். முகம் விறுவிறுத்திருந்தாலும் மலர்ச்சியின் சாயலை ருசிக்க முடிந்தது. தலையின் பாரம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. உள்ளங்கைகள் நீரில் ஊற வைத்த தாமரை இதழ்களாகப் பிசுபிசுத்தன. விழிப்படலங்களில் திரையிட்டிருந்த…
மேலும் வாசிக்க -
5 July
பெரியவர் – தாமரை பாரதி
வாழை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த தோட்டத்தில் சற்றைக்கு முன்னர் பெய்த மழையீரத்தில் தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. வாழையிலைகளில் மழை நீர் வழிந்து கொண்டிருந்தது. சில துளிகள் இலையுடன் ஒட்டியும் ஒட்டாமலும் மினுக்கிக்கொண்டிருந்தன. மழைக்குப் பிறகான மாலை நேரத்தில் காகமொன்று கரைந்து கொண்டிருந்தது.…
மேலும் வாசிக்க -
5 July
துறைமுகம் – கமலதேவி
பாரிமுனையில் இறங்கி ட்ராம்வேயின் இந்தப்புறமே நடந்தேன். சத்தமில்லாது பூனை போல ட்ராம்வண்டி நகர்ந்து சென்றது. காலையிலையே ஜானகியிடம் கோபத்தைக் காட்டியதை நினைத்தால் சஞ்சலமாக இருக்கிறது. பெர்னாலியின் எண்கள் காணாமற் போனதற்கு ஜானகி என்ன பண்ணுவாள்? ஆனால் அவள்தான் வாங்கிக் கட்டிக்கொள்கிறாள். வேறு…
மேலும் வாசிக்க