இணைய இதழ்
-
Jan- 2024 -21 January
நன்னயம் செய்துவிடல் – இத்ரீஸ் யாக்கூப்
“கணேஷ் பாய், ஸ்ட்ராபெர்ரி பிளாண்ட்ஸ் வந்துட்டுண்டு, இன்னும் ஒரு மணிக்கூரினுள்ளில் அவ்விட எத்தும் கேட்டோ! ஞான் விளிச்சப்போல் புள்ளி கோல் அட்டெண்ட் செய்தில்லா! நிங்களு அயாளோடு அறியுக்குக்கா ப்ளீஸ்!” லாஜிஸ்டிக்ஸ் கோஆர்டினேட்டர் சஜித் அப்படிச் சொன்னதும் இன்றும் லேட்டுதானா என்பதுபோல் ‘ஹ்ம்’…
மேலும் வாசிக்க -
21 January
ஆன் தி ராக்ஸ் – லட்சுமிஹர்
சுவைத்து காலியான அந்த ‘இளநீர் ரம்’ குடுவையின் வடிவம் என்னை எப்போதும் ஈர்க்கக் கூடியதாகவே இருந்திருக்கிறது. நீங்கள் எப்போதாவது கோவா செல்லும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இதைச் சுவைக்க பரிந்துரைக்கிறேன். இதன் சுவை உங்களை உள்ளிழுத்து வசியம் செய்யக்கூடியது என்கிற பிதற்றல்கள்…
மேலும் வாசிக்க -
21 January
அந்தரம் – ப்ரிம்யா கிராஸ்வின்
“இப்ப என்னாத்துக்குண்ணே உனக்கு இவ்ளோ அவுசரம்…?” தமிழ்நாடு மின்சார வாரிய கிட்டங்கி வராந்தாவின் உவர் பூத்திருந்த தரையில், அமர்வதற்குத் தோதாய் தினசரி நாளிதழ்களில் ஒன்றை விரித்துக்கொண்டே கேட்டான் சகாயம். தரையில் ஏற்கனவே அமர்ந்து மோர் சோற்றில் நீர் ஊற்றி பிசைந்து கொண்டிருந்த…
மேலும் வாசிக்க -
6 January
இறைவனின் வெளிச்சம் – தயாஜி
பொம்மி பிறந்து முதன் முறையாகக் கோவிலுக்குச் சென்றோம். ஒவ்வொருமுறையும் எங்கள் குடும்பத்தில் குழந்தை பிறந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய குடும்ப வழக்கங்களில் இதுவும் ஒன்று. எங்கள் குலம் காக்கும் தெய்வத்தின் காலடியில் குழந்தையை வைத்து அந்த மூத்த மூதாதைத்தாய்க்கு நன்றி செலுத்த…
மேலும் வாசிக்க -
6 January
லாகிரி – சபிதா காதர்
1 கிலோ 1×17 ஆணி… . அரை லிட்டர் … . என்ற நீண்ட பட்டியலை கடைப்பையன் சொல்லச் சொல்ல கணிப்பொறியில் தட்டச்சு செய்து, ரசீது வரவும் அதைக் கிழித்து கொடுக்கும் போது உரிய பொருளுக்கு சரியான விலை உள்ளதா என்று…
மேலும் வாசிக்க -
6 January
படிச்ச பொண்ணும் ஃபாரீன் மாப்பிள்ளையும் – இத்ரீஸ் யாக்கூப்
“நீ படிச்ச பொண்ணதான் கட்டிக்கணும்!” இப்படி தனது தந்தை வற்புறுத்துவது ஜமாலுக்கொன்றும் புதிதில்லை. இவன் கல்யாணப்பேச்சு வரும்போதெல்லாம், இந்த பல்லவியை எப்படியும் அவர் பாடிவிடுவார். ஆனால், அவனுக்குதான் அதில் அப்படியொன்றும் பெரிதாக நாட்டங்கள் இருந்ததில்லை. அவன் பட்டப்படிப்பெல்லாம் முடித்தவன் என்றாலும், வரும்…
மேலும் வாசிக்க -
5 January
மொழிபெயர்ப்புக் கவிதைகள் – மலர்விழி
அவன் அழைக்கப்பட்டான் அவன் அழைக்கப்பட்டான்மொகமத் ஸீயப் என்றுஅமீர்களின்தேசாந்திரிகளின்தற்கொலைக்கு முயல்பவர்களின்வழித்தோன்றலாய்ஏனென்றால் அவனுக்குஒரு நாடு இருந்ததில்லைஅவன் பிரான்சை நேசித்தான்ஆதலால் அவனது பெயரை மாற்றினான்அவன் வீரன்ஆனால் பிரஞ்சுக்காரன் அல்லமேலும் அவனுக்குத் தெரியவில்லைஎப்படி வாழ்வதன்றுநீங்கள் காபி பருகியபடிகேட்ட குரானின் கோஷத்தைஅவனுடைய அந்தக் கூடாரத்திலிருந்து வெகு தொலைவில்மேலும் அகதிமையின்…
மேலும் வாசிக்க -
5 January
காலி அடிப் பானை – மு.குலசேகரன்
(“தங்க நகைப் பாதை” என்ற வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்) சுந்தரத்தை ஆழ்ந்த தூக்கத்திலிருந்து யாரோ தொட்டெழுப்பியது போலிருந்தது. இன்னும் வழக்கமான அதிகாலையாகவில்லை. சுற்றிலும் பேரமைதி நிலவியது. அதை சிள்வண்டுகளின் ஓயாத இரைச்சல் அதிகப்படுத்தியது. உற்றுக் கேட்டால் அகால பட்சிகளின் அலறல்கள்,…
மேலும் வாசிக்க -
5 January
உமா சக்தி கவிதைகள்
புத்தகப் பூச்சி இரவு இரவாகநீண்ட காலமாய்ஒரு புத்தகப் பூச்சிக்குஉணவாக மாறியிருந்தேன்.விசித்திரமான அப்பூச்சிவாசிப்பு குறையும்தினங்களில் மட்டும் அதிகம்என்னை தின்னுகிறதுபுத்தகத்துடன் உரையாடும்போதெல்லாம்மூளையின் மையத்தில்மண்டியிட்டுஅமர்ந்துகொள்கிறது.வான்காவை வாசித்ததினத்தில் காதுக்குள்ஊர்ந்து கொண்டேயிருந்தது‘ரகசியம்’ படித்த தினத்தில்கால்விரல்களுக்கிடையில்ஒளிந்துகொண்டதுஇறுதியில் என் இதயத்தைருசித்துவிட்டுமண்டைக்குள்ளிருந்துபர்பிள் நிறப் பட்டாம்பூச்சியாகவெளியேறியது! **** அவனுடைய குரல் மற்றவை எல்லாம் கூட…
மேலும் வாசிக்க -
5 January
புகழ் பூமியின் சாகசக்காரன் – மஞ்சுநாத்
தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகம் வெளிவருவதுடன் பெருவாரியான வாசகர்களைச் சென்றடைந்து விமர்சனத்திற்கும் உள்ளாகிறதென்றால் இன்றைக்கு திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். அவர்களது கவனத்துடன் கூடிய உழைப்பும் இலக்கிய ரசனையும் மொழியாக்கத்தின் தரத்தைக் கூட்டியுள்ளன. புகழடைந்த எழுத்தாளரின் பிரபலமான நூலைக் கொண்டுவருவதின் வழியாக…
மேலும் வாசிக்க