சிட்டுக்குருவி பாடல்
சிட்டுக் குருவி பட்டுக் குருவி
சிறகை விரித்திடும் அழகைப் பார்
கூம்பு அலகால் கொத்தித் தின்னும்
குட்டிக் குருவியின் அழகைப் பார்
பக்கம் நாமும் சென்று விட்டால்
பட்டெனப் பறக்கும் அழகைப் பார்
தினமும் குளியல் போட்டு விடும்
சின்னக் குருவியின் அழகைப் பார்
ஆணும் பெண்ணும் சேர்ந்தபடி
கூட்டைக் கட்டிடும் அழகைப் பார்
கூட்டில் பெண்ணும் அமர்ந்தபடி
குஞ்சு பொரித்திடும் அழகைப் பார்
ஆணும் பெண்ணும் பறந்தோடி
தீனி ஊட்டிடும் அழகைப் பார்
ஆணுக் கிங்கே உயர்வு மில்லை
பெண்ணுக் கிங்கே தாழ்வு மில்லை
பறவையின் பாடம் கற்றிடுவோம்
பாரினில் நாமும் உயர்ந்திடுவோம்.
குழந்தைகளுக்கு பாடல் மூலம் பாடம் சொன்ன பாங்கு அருமை. பாராட்டுகள்!