இணைய இதழ் 50
-
இணைய இதழ்
வேல் கண்ணன் கவிதைகள்
நதி உன்னில் பயணிக்கும் எல்லாவற்றிலும் ஏற்படும் சலசலப்பு ஓய்ந்தபாடில்லை குறுகிய கரைகள் மீறி அகண்ட பரப்பில் நிதானமாக உயர்ந்த மேடுகள் மீதேறி செல்வதை கவனிக்கும் என்னை அசட்டையாக பார்க்கிறாய் தீராத தாகத்தை தீர்த்துக் கொள்ள அவ்வப்போது எனைக் களைந்து சன்னமாக மிதக்கவும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
உயிர்த்தெழல் – கமலதேவி
எங்கும் இருள். இருக்கிறேனா என்று என்னையே நான் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன். என் அங்கியை இறுகப் பற்றி கொள்கிறேன். இங்கு காலம் இல்லை. ஔியில்லாத இடத்தில் ஏது காலம். ஔி வந்து தொட்டு எழுப்பும் வரை இருளிற்கு காலமில்லை. நினைவு இருக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மௌனன் யாத்ரிகா கவிதைகள்
கோபத்தின் மறுமுனை எனக்குள் வேறொருவனும் இருப்பதை நம்புகிறேன் நான் அழும்போது கண்ணீரிலிருக்கும் உப்பு வாய் வரைக்கும் இறங்காமல் அவன்தான் தடுத்து நிறுத்துகிறான் நான் மகிழ்ந்திருக்கும்போது உடன் சேர்ந்து அதைக் கொண்டாடுவதும் அவன்தான் கோபப்படும்போது மனதை அமைதிப்படுத்துபவனும் தவறிழைக்கும்போது திருத்த முயற்சிப்பவனும் அவன்தான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இன்று தந்தவர்கள் – பத்மகுமாரி
‘குணசேகரன் இன்னிக்கு பென்சன் கொண்டு வருவான்’ தாத்தா காலையில் இருந்து இரண்டு மூன்று தடவை சொல்லிவிட்டார். சொல்லும் பொழுதெல்லாம் பார்வை வாசற்படியில் இருந்தது.தலையில் தேய்த்திருந்த எண்ணெய் நெற்றியில் லேசாக பளபளத்துக் கொண்டிருந்தது. வேர்வையும் எண்ணெயும் சேர்ந்து கோர்த்து ஒரு கோடு இடது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சௌவி கவிதைகள்
கதவுகள் ஒரு வீட்டின் கதவு பெரும்பாலும் சாத்தியே கிடக்கிறது எப்போதாவதுதான் திறக்கிறது ஒரு வீட்டின் கதவு இரவைத் தவிர பகலில் எப்போதும் திறந்தேயிருக்கிறது ஒரு கதவு பசிக்கிறது என வரும் பிச்சைக்காரர்களுக்கும் திறக்காமல் இறுக்கமாக மூடிக்கிடக்கிறது ஒரு கதவு யாராவது உதவி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வடக்கான் – விஜய் சுந்தர் வேலன்
எந்த ஊர், எந்த மொழி அதெல்லாம் தெரியத் தேவையில்லை. பார்த்தாலே சொல்லிவிடலாம் அவன் வடக்கான் என்று. அந்த மெல்லிய நண்பகலில், அவன் கிழிந்த சட்டைக்கும், உடலில் ஆங்காங்கு இருந்த சிராய்ப்புகளுக்கும், தலையில் காயம் ஆறாமல் போடப்பட்டிருந்த கட்டுக்கும்., அவனை நிச்சயமாக அந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரேவா கவிதைகள்
அழியா வனம் ஓர் அனுமானம் அவிழ்த்துவிட்ட முடிச்சில் பின்னிக்கொண்டிருக்கிறேன் திசை சொட்ட நிகழ்ந்திடவோ திரும்பி வரவோ வளியற அறுந்துவிட்ட தீர்மானம் படபடத்து விரல் பொறுக்கும் தருணத்தில் ரேகை தீர சொட்டும் நதி உன் பிடிப்பு வழி நகர அலைமேவும் மனம் அணங்காட…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மயிரும் மயிர் சார்ந்தவைகளும் – சுஜித் லெனின்
நுண்கதை:1 ௦௦௦ அநேகமா பத்தாவது இல்லை பதினொன்னாவது படிக்கிறப்பவா இருக்கும் எனக்கு பாண்டினு ஒரு நெருக்கமான நண்பன் இருந்தான். எதேதோ பேசிட்டு இருந்தப்போ ‘மயிர்ங்கறது இறந்துபோன உடல் செல்களோட தொகுப்பு; அதாவது மயிர்ங்கறது செத்து வளருதுன்னு சொல்லிட்டேன்’. பயபுள்ள அப்போ இருந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திருமூ கவிதைகள்
அந்தரங்கச் செல்ஃபி ஒரு பக்கார்டி லெமனில் பூட்டிவைத்த காதல் வாசனையற்றது மதுக்குவளையின் இறுதிச்சொட்டினை அவள் தொப்புள்குழியிலிட்டுச் சுவைப்பதில் அரங்கேறுகிறது வாசனையுடனான ஆராதனை முடி முதல் அடியென முத்தம் முதல் சத்தம்வரை அவளுக்கென்று தனித்த பிரத்யேக சொற்களில் அவளை வர்ணிப்பது ரோம மேளதாள…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பிரதியெடுக்காதே – ராம்பிரசாத்
“உனக்குத் தெரியுமா? சரித்திரம் புகழும் ஈடு இணையற்ற காதலர்களாய் நாம் வலம் வருவோம் என்று ஒரு காலத்தில் நான் நினைத்திருந்தேன்” என்றாள் மிலி படுத்திருந்த படுக்கையில் வீட்டின் கூரையைப் பார்த்தபடி. “ஏன்? அதற்கென்ன?” என்றான் கரீம் மிலியின் அருகில் அவளுக்கு முதுகைக்…
மேலும் வாசிக்க