கமலதேவி
-
சிறுகதைகள்
மூள் தீ – கமலதேவி
”ம்மா..ம்மா…” என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம். இரு மச்சுக் கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுக்கார பெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
நீல.பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – கமலதேவி
அவள் பள்ளிகொண்டபுரம் மீள் வாசிப்பின் பொழுது தான் தெரிகிறது இந்த நாவலை நான் மறக்கவே இல்லை என. சில பகுதிகள் துல்லியமாக நினைவில் இருக்கின்றன. அத்தனைக்கு வலிமையான எழுத்து. பத்மநாபசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்கள் மற்றும் அந்த நகரின் அதிகாலை பிரம்ம…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
சிலாம்பு
முற்பகலிலேயே மெல்லிய இருள் கவிந்திருந்தது. வேலைக்கான தேர்வில் தேறி வீட்டில் இந்த முறையாவது ‘பரவாயில்லை’ என்ற பெயர் வாங்கமுடியாமல் போனது குறித்து நந்தினிக்கு சலிப்பு .எந்த விஷயத்திலும் அவளுக்கு வீட்டில் இப்படித்தானாகும்.உண்மையில் அவள் தேர்வில் பாதிக் கேள்விகளை வாசிக்கக்கூட இல்லை.பின் எதற்காக…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- கமலதேவி
மண(ன)ம் கனவா? நனவா? கனவாயிருக்க வாய்ப்பெனில் நனவாகவும் அதேவோய்ப்பு. இங்கேதான் வீட்டின் வெளிசந்தில் அவள் கைமுட்டித்தேய நீர்இறைத்த கிணற்றின் முன்னிருக்கும் வாசல்முற்றத்தில்தான்… பழைய கருப்புவெள்ளை திரைப்படத்திலிருந்து எழுந்துவந்த அழகிய கரும்பட்டுச் சேலை நாயகியைப் போல நிற்கிறாள். காதோரத்தில் வழிந்து கலைந்த நீள்கூந்தல்…
மேலும் வாசிக்க -
காதலும் வீரமும்
காலங்காலமாக எழுத்து என்ற செயல்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து எழுதிய, எழுதும், எழுதப்போகும் எழுத்தாளர்களின் மனங்களுக்கு என் அன்பு. குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகள் மாறியிருப்பதை பலநேரங்களில் எதார்த்தமாகக் கேட்க நேர்கிறது. ஐந்து வயது பயல் பேருந்தில் என் பக்கத்தில் அம்மாவின் மடியில்…
மேலும் வாசிக்க -
கவிதைகள் -கமலதேவி
1.மேய்ப்பனின் புல்லாங்குழல் இசை நான் உன் லிபியில்லா மொழியென காற்றில் பரவுகிறேன். ஒரு மந்திரக்கோல் சுழற்றலாக யுகங்கள் மாறிய மேடையில் நீ எங்கே? 2.மேய்ப்பன் கையிலிருக்கும் ஆட்டுக்குட்டி எத்தனை சிலுவைகள் பிதாவே! முதுகில் தலையில் கரங்களில் வயிற்றில் கால்களில்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
நீலகண்டன்
ஈர உடலைத் தழுவிய காற்றை உணர்ந்த நீலகண்டன், “எங்கியோ மழை பெய்யுது” என்று நினைத்தபடி தக்காளிப் பழங்களைப் பொறுக்கிக் கூடையில் போட்டுக் கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த மேனகா, “இந்த அழிகாட்டு பழத்த யாரு வாங்குவாப்பா?”என்றாள். மஞ்சளும் பச்சையும் சருகுமாகத் தக்காளிச் செடிகள் வயலெங்கும்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
சுண்டைக்காய்
மீவெயில் காலத்தின் நடுப்பகல் மெல்ல நகர்ந்து சாய்வெயில் எழும் நேரத்தில் அந்த பிளாட்டினா நாற்சந்தியிலிருந்து மேற்கு சந்திற்குள் நுழைந்தது.வண்டி ஓட்டுபவனின் கண்கள் சுருங்கிய நேரத்தில் , சுண்டைக்காய் செடி அவர்களின் கால்களில் கீறி கீழே சாய்ந்தார்கள். விழுந்த இடத்திலேயே கிடந்து,“அந்தக் கொடுவாளை…
மேலும் வாசிக்க