தமிழ் கவிதைகள்

  • இணைய இதழ் 100

    வேல் கண்ணன் கவிதைகள்

    வியர்த்த காற்றுக்குஒரு மிடறு வார்த்தாள் ஜன்னலோர சிறுமிபின்னிருக்கைகள் வசை பொழிந்தது‘சனியனே’ யென வெடுக்கினாள்தண்ணீர் பாட்டிலை அம்மா மிச்சமான மழை உலர்ந்து • நின்றிருக்கும் இடத்திற்கு வந்தடைந்த பாதைபுதிரானதுவெலவெலத்து போய் நிற்கும் கேள்விகளால்எதுவொன்றையும் தொடங்கவில்லைமெய்யுணர்த்தும் இடைவெளிக்குள் இட்டு நிரப்பிக் கொள்ளதிக்கற்ற தேடலால் இயலவில்லைஅவிழ்க்க…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    வருணன் கவிதைகள்

    மாலுமியின் இணையள் முகில் காயத் தனித்திருக்கிறேன்இருளடறக் காத்திருக்கும் விரல்களோடுவியர்வை இறைக்கும் கோடையின் வெம்மையெனமார்கழிப் பனியிலும் தேகஞ்சுடுகிறதுஅசைவாடிக் கொண்டிருக்கும்உன் கப்பலின் நிலவறையில்நடுக்கடல் தாலாட்டெனநினைத்துத் துயில்கிறாய்உனையேங்கிப் பெருமூச்செறியும்தனங்களேயென நீயறியாய்பசித்தலையும் ஊரின் பார்வைக்கு சிக்காதுகரையை வெறிக்கிற கண்களோடுமணற்சிலையெனபசித்திருக்கும் காற்றில்கரைந்தபடியே காத்திருக்கிறேன்கரை காண்.எனைச் சேர்! • இலக்கினுமினிது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    முத்துராசா குமார் கவிதைகள்

    அலகுக்கு பாத்தியப்பட்ட விதை நாத்தாங்காலின் நெல்தளிர்களைத்தோண்டியுண்ணும் குருட்டுக்கொக்குகள்சம்சாரி உருவுக்கு அஞ்சுவதில்லைஅதட்டலுக்கு பறப்பதில்லை.வரப்பு நெடுகஅவன் ஊன்றிய கொடிக்கம்பங்களைகண் சுருக்கிப் பார்க்கும் கொக்குகள்காற்றில் சடசடக்கும்கம்பத்து பாலித்தீன்களைசம்சாரி நாவுகளென நம்புகின்றன. • கொப்பள மேடு கரும்புகள் தின்னும் கல்லானையும்சுதையுடம்பு பாகனும்வெப்ப அலையில் மறுகுகிறார்கள்.பாகனின் தலையில் உருமா…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    மோகனப்ரியா கவிதைகள்

    இரு கருநீலக் காப்பிக் கோப்பைகளின் இறுதி யாத்திரை பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருக்கும்ஒவ்வொரு நாளும்ஒன்றின் மீது ஒன்று அமரும்நம் இருவரின் கருநீலக் காப்பிக் கோப்பைகள்கைத்தவறி ஒரே நேரத்தில்அந்தரத்திலிருந்து வீழ்கின்றன. உருவ ஒற்றுமையாய்இருக்கும் அத்தனை இடையூறுகளையும்ஒருவேளை வெகுகாலமாய்ச் சுமந்துசலித்திருக்கலாம்.பயனாளர் மாறிமாறிப் போகும்சாத்தியங்களையும் சந்தர்ப்பங்களையும்வெறுக்கத் தொடங்கியிருக்கலாம்.காலம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    மதிக்குமார் தாயுமானவன் கவிதைகள்

    உயிர்த்தெழ வேண்டாம் நெடுநெடுவென வளர்ந்தமரம் போலநீண்டு செல்கிறது இரவு.இந்த நாளின் மகிழ்வுகளைஅதன் அடியிலிருந்து எழுத ஆரம்பிக்கிறேன்.மூன்றடி உயரம் வரை வருகிறது.போலவே இந்த நாளின் துயர்களைஅதன் மேல் அடுக்குகிறேன்.இரவு இன்னும் வளர்ந்துகொண்டே செல்கிறது.இரவை இரண்டாக வெட்டுகிறேன்.மகிழ் இரவு : துயர் இரவுமரம் இருந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    மலர்விழி இளங்கோவன் கவிதைகள்

    தவளையை வரைகிறவன் வீட்டுப்பாடத்திற்குத்தவளையொன்றை வரைய வேண்டுமெனஅம்மாவிடம் சொல்லியபடிஇரு கைகளையும் தரையூன்றித்தவ்விக் கொண்டிருக்கும்அச்சிறுவனைப் பிடித்துஇடம் அமர்த்துவதற்குள்வீட்டை நிறைக்கிறதுஅம்மாத்தவளையின் சத்தம் சிறுவன் சுவற்றில் தேய்த்த சோடா மூடியில்ஒற்றை வரள் தவளையின் தொண்டை.பிதுங்கியுருளும் அம்மாவின் பார்வையில்அதனை அடக்கியவன்பின்னொரு தனிமைப்பொழுதின் உரையாடலுக்கெனஅந்தக் ‘கொர்ர்ரக்’குகளைத்தன் கால்சட்டைப் பையிலிட்டுப்பத்திரப்படுத்திக் கொள்கிறான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்

    கொல்லப்புறத்து மாவிலைகளில்பச்சை கூடியிருந்தது இரு வாரத்திற்குமுன்வாசலில் முறைத்து நிற்கும்வேம்பிலைகளிலும்அப்படியே வசந்தகாலத்தின் வருகைஒவ்வொரு உயிருக்குமாகஒரு கணக்கைமுன் குறித்திருக்கிறது போல எங்கள்வீட்டில் மட்டும்தான் அப்படிஎன்றாள் மனைவிஅவளதுவசந்தத்தின்காலயெல்லை புரியாமல்தான்நான்ஆண்டுகளைக் கணக்கிடுவதையேநிறுத்திக்கொண்டேன். • இயல்பாகக்கையாட்டிப் பேசுபவர்களதுஉடலும்கூடமின்சாரம் பாய்ந்ததுபோல்ஆடத்தான் செய்கிறது அமர்கையில்படுக்கையில்நடக்கையில்என எப்பொழுதும்அசைந்துகொண்டேஇருக்கிறார்கள் அசையாமலிருந்துகடவுளாவதைத்தவிர்க்கிறார்கள்போல. • எனக்கு கிட்சனைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 99

    ஷினோலா கவிதைகள்

    விரலிடை மணற்துகள்கள் தத்தித் தாவிதவழ்ந்த பொழுதுகளில்திக்கித் திருத்திபேசிய பச்சிளம் பருவத்தில்விளையாடச் சென்ற விரிந்த வயல் நிலத்தில்சிக்கியும் சிக்காமலும் நழுவினவிரலிடை மணற்துகள்கள் தொலைவில் இருக்கும் கனவுகளையும்எஞ்சி இருக்கும் நினைவுகளையும்நினைத்துக்கொண்டேகடத்தியதில் உணரவில்லைவிரலிடையில் நழுவியதுமணற்துகள்கள் மட்டுமல்லமணித்துளிகளும்தானென்று கட்டிப்பிடித்து உறங்கினாலும்களவு போய் விடுகின்றன நொடிகள்நொடிக்கு நொடிசேர்த்து வைத்தஇன்பங்கள்…

    மேலும் வாசிக்க
  • Uncategorized

    வருணன் கவிதைகள்

    முன்னும் பின்னும் ஞானத்தின் கண்கள் திறக்கும் முன் எப்படிப் பார்த்தாய்?ஊனக்கண்ணால்முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?சும்மா இருந்தேன்இப்போது?இப்போதும் அப்படியேபின் ஞானமெதற்கு?சும்மாஇருக்கத்தான்! எந்தையும் தாயும் களைத்த காற்தடங்களின்நோவு நீங்க நீவிதீண்டித் தீண்டித் திரும்புகிறதுஅலையின் கடைசி விரல்தன்னை நோக்கித் திரும்பிதன்னுள் தொலைய நினைத்திருந்தஅப்பாதங்களை மீட்டெடுத்தனகடலன்னையின் பேரன்பும்காலத்தகப்பனின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 99

    அருள்ஜோதி முரளிதரன் கவிதைகள்

    பவளமல்லி மரம்! கைவிடப்பட்ட வீட்டுச் சுவற்றில்மங்கலாகி நிற்கிறதுஅம்மா வரைந்தபவளமல்லி மரம் பின்வாசல்முற்றத்து மருதாணிக் குறுமரத்தில்புதிதாகக் குடியேறியிருக்கிறதுபறவைக் குடும்பமொன்று சிதிலமடைந்த மதிற் சுவற்றைநிறைத்திருக்கின்றனகுளவிக்கூடுகள் கால்கடுக்க நின்றசமையல் கூடத்தில்புதிதாக முளைத்திருக்கிறதுகரையான் புற்று உடைந்த ஓடுகளின் வழியேஇறங்கி வருகிற நிலவில்தெரிகிறது அவள் முகம் மெல்லக் கவியும்…

    மேலும் வாசிக்க
Back to top button