![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/11/7cb80aa83e0d4c7495b6efeadbcab114-780x405.jpg)
Wong Kar Wai என்னும் இயக்குனர், lens வழியே காட்சிகளை சிந்திக்கும் படைப்பாளி. Frame, shot மற்றும் mise-en-scene composition… உணர்வுரீதியில் involved ஆகியிருக்கும் ரசிகனின் மனநிலையை பரவசநிலைக்கு உள்ளாக்குவதற்கும்,மிதக்கவைப்பதற்கும், பறக்கவைப்பதற்கும், lens வழியே காட்சிகளை சிந்திக்கும் reflex, மிகமுக்கிய காரணி.
“why did you call me at the office today?”
“I had nothing to do. I wanted to hear your voice”
யார் யாரையோ auteur என சொல்கிறார்கள். கொத்து கொத்தாக வந்துவிழ auteur என்பது manufacture process முடிந்து விழுந்த factory product அல்ல. அதுவொரு தனித்துவமான படைப்புத்திறன். Rare of the rarest.
Wong Kar Wai இயக்கிய in the mood for love, chunking express, happy together, fallen angels, days of being wild, 2046, as tears go by படங்களை பார்த்தால் புரியும். வழக்கமான திரைமொழி சட்டங்களுக்கு புறம்பான, இசைக்குக் கொடுக்கும் ஒருவிதமான hypnotic அணுகுமுறை, வருத்தந்தோய்ந்த கதாபாத்திரங்களின் melancholy, திரைக்கதையை offbeat கட்டமைப்பில் உருவாக்குதல், voice over narration, (one of the QT பதமான) cult பாடல்களை தேர்ந்தெடுத்து காட்சிகளுக்கு இடையில் ரசனை சொட்டும் விதமாகத் தொகுப்பது, சுயதேடல், multi-layered கதை சொல்லியாக ஒட்டுமொத்த combination கொண்டதொரு frequency தான் Wong Kar Wai உடைய திரைமொழி.
கதையின் தனித்துவத்தை பாதிக்காத ஒரு திரைக்கதையை தனக்கான தனித் திரைமொழியில் வெளிபடுத்தும் இயக்குனர்களே auteur. வம்படியாக ஒரு திரைமொழியை திணித்து, கதையின் மீதி ஆதிக்கம் செலுத்தி நாசம் செய்தால் அது auteur அல்ல. முன்னது auteurism பின்னது amateurism. வெவ்வேறு கதைகளை, அந்தந்தக் கதைகளின் சாராம்சத்துடன் தனது திரைமொழியில் சொல்வதற்கும், வெவ்வேறு கதைகளை தனது பாணிகளின் சாராம்சமாக்கி திரைக்கதையை சர்வநாசமாக்கி… இதுவே எனது தனித்திரைமொழியென சொல்வதற்கும் வித்தியாசமிருக்கிறது இல்லையா?
கதவுகளின் வழியாக, அறைமூலைகளின் வழியாக க்ஷணக்காட்சிகளை வெடுக்கெனப் பிடுங்கி ஒளிப்பதிவு செய்யும் பாங்கு என அட்டகாசமான காதலை பதிவு செய்திருக்குமொரு voyeuristic பதிவுதான் in the mood for love. கதாபாத்திரங்களின் தனிமையை அவர்களின் அறைகளின் சூழ்நிலைகளை, கதாபாத்திரங்களின் undergoing emotionsசை போட்டு கடத்திய Wong Kar Waiயினுடைய film making என்பது சினிமா ரசிகர்கள்/மாணவர்கள் கவனிக்க வேண்டியதொரு ரசனையான style.
‘காதலில்லை இது காமமில்லை… இந்தவுறவுக்கு உலகத்தில் பெயரில்லை’ வரிகளுக்கு ஏற்ப in the mood for love படத்தில் Tony Leung, Maggie, Cheungன் பந்தத்தை, நம் சமுதாயம் கட்டமைத்திருக்கும் பொதுமனித உளவியல்படி புரிந்து கொள்வது கடினமாக இருக்கக்கூடும் ஆனால் அதனையொரு அழகியலுடன் தனிமனித உளவியல் சிந்தனை உள்ளவர்கள் உணரும்விதமாக இயக்கியிருப்பார் மனிதர்.
studio-களுக்காக பணியாமல், commercial compromise என்ற பெயரில் செயற்கைத்தனத்தை செதுக்காமல் தனக்கே தனக்கெனவொரு மொழியை உருவாக்கி அதிலேயே பயணிக்கும் தனம்… சிரம் தாழ்ந்து மதிக்கப்பட வேண்டிய தனம். Language Barrier காட்டாத இப்படத்தின் திரைமொழியை நீங்கள் regular சினிமாக்களோடு பொருத்திப்பார்க்கவே முடியாது. செயல்களிலோ, வசனங்களிலோ நம்மை அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்த்தாமல் உணர்வால் நகர்த்துவதை நம் வாழ்வில் அடிக்கடி சினிமாவாக அனுபவிக்க மாட்டோமில்லையா? சாதாரண ஒரு கதையை இவ்வளவு influential பாதிப்போடு பதிக்க முடிவது பெரும் கலை.
“It is a restless moment.
Hongkong 1962,”
என ஆரம்பிக்கும் படத்திற்குள் காமிக்கப்பட்ட உலகம் என்னை அசரடிக்கவைத்தது. வண்ணங்களால் ஆன ஒளிவடிவமைப்பு என்னை போதையேற்றி மயக்கநிலைகொள்ள செய்து வேறு உலகிற்கு கடத்திய படங்களில் இது மறக்க முடியாத படம். ஒரு வருடத்தில் குறைந்தது 5 முறையாவது பார்த்துவிடுவேன்.
காதல், கள்ளக்காதலாக மாறிவிடக்கூடாது, நாம் மனதில் கலந்தாலும் உடலாகக் கலக்க மறுப்பதுமென கவனமாக இருக்கும் இரு கதாபத்திரங்களை நிதானித்தே தீட்டியிருக்கிறார் Wong Kar Wai. இம்மாதிரி ஒரு காதல் வழக்கமான வழியில் பயணிக்காததற்கு காரணம், அந்த நாட்டின் அப்போதைய சூழ்நிலை. அவள் தன் காதலை மனதிற்குள் புதைத்தும், கம்போடிய அங்கோர்வாட் கோயிலின் கற்களில் விழுந்தவொரு துவாரத்தில், சோகமான ரகசியத்தை சொல்லியும் அவன் சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறான்.
Tony Leung என்ற அபாரமான subtleness உணர்வை அழகா வெளிபடுத்தும் நடிகனும், பெண்மையை பேரழகாக வெளிப்படுத்திய Maggie Cheungம் தங்கள் கதாபாத்திரங்களின் தன்மையை எவ்வாறு உள்வாங்கி நடித்தார்கள் என தெரியவில்லை? கதாநாயக கதாநாயகியென நடிக்காமல், 1960, ஹாங்காங் மக்களில் ஒருவனை/ஒருவளை, குடியிருப்புகளில் வாழும் ஒருவனை/ஒருவளை, எவளுக்கோ/எவனுக்கோ வாய்க்கப்பட்ட கணவன் மனைவியாக Wong Kar Wai உருவாக்கிய உலகில் உலவியிருக்கிறார்கள் இருவரும். சினிமாவில் காலம்காலமாக நாம் தேடிக்கொண்டிருக்கும் காதலின் ஆன்மாவை (அப்படியா?) in the mood for love கொடுக்கலாம்.
ஒரு சீனப்பின்புல ஹாங்காங் படக்கதையின் உணர்வை ஒரு ஸ்பானிய பாடல் மூலம் வெளிப்படுத்தி, இயக்குனர் சொல்ல முற்பட்ட உணர்வை நாம் ஒரு கட்டத்திற்கு மேல் அனுபவிக்கையில், கலைக்கும் மொழிக்கும் சம்மந்தமேயில்லை என்னும் myth, உடைந்து சுக்குநூறாகியிருக்கும்.
திரைக்கதையில் ext. Int. என்னவென்பது தெரியும். அதுவெறும் இடத்தை மட்டும் குறிப்பதைக் கடந்து Wong Kar Wai உள்கட்டமைப்பு வசதியை ஃப்ரேமின் foreground background-ல் play பண்ணும் விதம் Polanski-யுடைய திரைமொழியை உங்களுக்கு நினைவூட்டும். திரைமொழி நுணுக்கங்களுக்கு யாரும் உரிமை கோர முடியாது இல்லையா? Collaboration of various aspects. அப்படியொரு aspect-ன் ஒற்றுமையே.
Conventional, traditional way of story telling என புராதன முறையில் படம்பார்க்க விரும்புபவர்கள் இந்த படத்தை ஐந்து நிமிடங்கள் கூட பார்க்க முடியாது. படத்தின் காட்டுத்தனமான வேகத்தில் நிலைகுழைந்து போக நிறைய வாய்ப்பிருக்கிறது. Mise-en-scene நுட்பத்தில் உச்சம் தொட முயற்சிக்கும் ஒரு படத்தை காண்பது எப்பேர்பட்ட அனுபவமாக இருக்குமென நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
காதலின் மற்றொரு பரிமாணத்தை, ஒரு நிலவியல் அனுபவமாக, ஒரு இசை அனுபவமாக, உணர்வுகளின் வழியே கதையை பார்க்கும் அனுபவமாக, visual treat அனுபவமாக ரசித்து ரசித்து ஒரு heterodox முறையில் படத்தை ரசிப்பவர்களுக்கு in the mood for love ஒரு paradise.
இப்படியொரு காவியத்துவம் வாய்ந்த படங்களை இனிமேல் உணரமுடியுமா என எண்ணி முடிப்பதற்குள் in the mood for love இவ்வாறாக முடிகிறது,
“that era has passed
nothing that belongs to it
exists anymore”
#inthemoodforlove