இணைய இதழ்

  • Apr- 2026 -
    13 April

    உணவுப் பொதி சுமக்கும் கடவுளின் தூதுவர்கள் – இலட்சுமணப் பிரகாசம்

    வீட்டுப் படிப்பறையில் அலுவலக அதிகாரி நடத்திக்கொண்டிருந்த கூகுள் மீட்டிங்கில் இருந்த வேளையில் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தவள், “உங்களுக்குச் சாப்பிட என்ன வேணும்?“ என்றாள். கூகுள் மீட்டிங் போய்க்கொண்டு இருப்பதாகவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் முடியும் தறுவாயில் இருப்பதையும் சைகையால் காட்டி மீண்டும் கவனத்தை அலுவலக அதிகாரியின் கட்டளையைச் செவிமடுக்கத் தொடங்கினேன். அடுத்த சில நிமிடங்களில் இணைய வழியிலான கூகுள் மீட்டிங் முடிந்தது. அதுவரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காதுகளில் மாட்டியிருந்த கருவிகள் காதை சூடாக்கி இருந்தன. அதிகாரியின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில் இருந்த வேளையில் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பதற்கும் தோன்றாது. இப்போதோ தொண்டை வறண்டிருந்தது.  காதுகளில் பரவியிருந்த சூடு உடல் முழுவதும் பரவி கொதிநிலைக்குச் செல்வது போலிருந்தது. எத்தனை மணி நேரம் உழைத்தாலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தங்களுடைய ஊழியர்கள் மீது கருணையே வராது. கார்ப்பரேட் கம்பெனியில் பணிக்குச் சேர்கிற நாள்முதல் அவர்களுடைய விதிகளுக்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும். கார்ப்பரேட் கம்பெனியின் ஊழியர்கள் நவீன யுகத்தில் எளிதில் கிடைக்கிற அடிமைகள், சாசுவதமான சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட பலியாடுகள் என்ற எண்ணம் ஐ.டி ஊழியர்களுக்குக் கல்வெட்டு போலப் பதிந்தாலும் நாளுக்கு நாள் அன்றாடப் பொருட்களின் விலைவாசி ஏறுகின்றன. மாதாமாதம் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்துக்கொள்கிற வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த…

    மேலும் வாசிக்க
  • 13 April

    இடைப்பட்ட வாழ்க்கை – பாலமுருகன். லோ

    “சார், உங்க கருத்தைச் சொல்ல முடியுமா?” “ஏம்ப்பா… கேள்வி கேக்குறீங்க? எதைப் பத்தி, இல்ல, யாரைப் பத்தின்னு தெரிஞ்சாதானே பதில் சொல்லச் சௌகரியமா இருக்கும்.” “அதான், தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் கொடுக்கப்பட்டதே! உங்களைப் போல அவரும் ஒரு நடிகர்தானே.” இந்தக் கேள்வியைக் கேட்டவுடன், முகம் முழுக்கக் கோபம் பொங்க, ஏதோ ஒரு நாகம் அவரைத் தீண்டியதுபோல ஒரு படபடப்பு…

    மேலும் வாசிக்க
  • 13 April

    பெரியது – மழைக்குருவி 

    மாலை நான்கு மணிக்கு வர வேண்டிய பேருந்து இன்னமும் வரவில்லை. தட்டாம்பட்டியில் இருந்து ஏழு பேர் கொண்ட குழு கிளம்பி அரசமரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாயிற்று. முருகராசு, தன் சட்டைப்பையிலிருந்து நைந்து போன நெகிழியில் வதங்கிப் போயிருந்த வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பு தடவ ஆரம்பித்தார். பேச்சி…

    மேலும் வாசிக்க
  • 13 April

    பரந்து கெடுக – பாக்கியராஜ் கோதை

    “எழுத்தாளரா மட்டும் ஆயிடாத, கிறுக்குப் புடிச்சிடும்” “ஏன்?” “உலகத்துல பாக்குறதெல்லாம் கதையாத் தெரிய ஆரம்பிச்சு, சாதாரண வாழ்க்கை வாழ முடியாம போய்டும். ஒருத்தன் செத்தாலும், ஒருத்தன் என்ன ஒருத்தன், உன்னப் பெத்த அம்மாவே செத்தாலும் அதுவே கதையாத்தான் தெரியும். வர்ற கண்ணீருக்கு முன்னாடி இது கதையா மாறுனா எப்படியிருக்கும்னுதான் தோணும், அம்மா செத்ததுக்கு அழுவாம அதுல கதையத் தேடுறவன் கிறுக்கனாத்தான இருக்க முடியும்” கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட அந்த எழுத்தாளருடனான இந்த உரையாடலை என்னால் …

    மேலும் வாசிக்க
  • Mar- 2026 -
    12 March

    நான் – ஒரு போஹேமியன் பயணி;10 – காயத்ரி சுவாமிநாதன்

    இருட்டிலிருந்து வெளிச்சம் –  புத்தருக்குள் நுழைந்த இரவு       இந்த அத்தியாயம் ஒரு சம்பவத்தை விவரிப்பதற்காக எழுதப்படவில்லை, ஒரு மனநிலையைப் பதிவு செய்வதற்காக எழுதப்படுகிறது. ‘கயா’ பெயரை மட்டும் அறிந்திருந்த இடம், வரலாற்று புத்தகங்களில் படித்த பெயர். ஆனாலும்…

    மேலும் வாசிக்க
  • 11 March

    தடமற்ற வாழ்வில் தடயமற்ற வாக்குறுதிகளின் நகரதலில்… – இளையவன் சிவா

    தற்கொலைகளின் துரத்தல்களில் தன்மானத்தைக் காப்பதற்காக தமது வாழ்வையே தொலைத்து நிற்கும் வெள்ளந்தி மனிதர்கள் எல்லாச் சிறுகதைகளிலும் இடம்பிடிக்கின்றனர். வாழும் வாழ்வை யாரும் குறை சொல்லாமல் யாரிடமும் கையேந்தாமல் குறையறியா மாந்தர்களாக வாழ்வதே அவர்களின் எழுதப்படாத விதியாகிறது. ஆனால் வாழ்வெனும் நதியின் போக்கு…

    மேலும் வாசிக்க
  • 11 March

    கம்யூனிசப் பூச்சாண்டி (Communist spectre) – லிவி

    முன்குறிப்பு – தன்னலம் இல்லாமல் மக்களுக்காகப் போராடிய, போராடிக் கொண்டிருக்கும், உயிர் நீத்த, தங்கள் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த, அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் கம்யூனிசத் தலைவர்களையோ தொண்டர்களையோ போராளிகளையோ அவமதிக்கும் நோக்கம் மொழிபெயர்ப்பாளனாக எனக்கு இல்லை. அவர்கள் பெற்றுக் கொடுத்த உரிமைகளுக்கு என்றும் கடமைப்பட்டவனாக…

    மேலும் வாசிக்க
  • 11 March

    ஆழ்மனத் திசைகள் – ராஜேஷ் வைரபாண்டியன்

    யாறு – சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் சுபியின் யாறு, பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு, மனித மனத்தின் ஆழங்களை, சமூக உறவுகளை, பாலியல் உணர்வுகளை விரிவாக ஆராய்கிறது. எழுத்தாளர் சுபி, பெண் கதாபாத்திரங்களின் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டு,…

    மேலும் வாசிக்க
  • 11 March

    அய்யனார் ஈடாடியின் நன்செய்க் கதைகள் – மு.அம்சம்

    எழுத்தாளர் அய்யனார் ஈடாடி அவர்கள் எழுதிய ‘கிருதுமால் நன்செய்’ எனும் நூல், 16 சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. எதார்த்தமான பேச்சு வழக்கில் அமைந்த கதைகளின் போக்கும், அவற்றின் மொழிநடையும் வாசகர்களைக் கதையோடும் பாத்திரங்களோடும் பேசவும் வாழவும் செய்கின்றன. தான் கேட்ட செய்திகள்,…

    மேலும் வாசிக்க
  • 11 March

    அந்தரங்க உரையாடலின் அழைப்பு – தயாஜி

    சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கவிதைப் புத்தகம் இது. எழுத்தாளர் நரனை வாசிக்க ஆரம்பித்த சமயம். அவரது சில கவிதைகளையும் சிறுகதைகளையும் வாசித்திருந்தேன். அவருடைய புத்தகங்களைத் தேடி வாங்கி வாசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் கிடைத்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.எடுத்தவுடன் இந்தத் தொகுப்பைத்தான் வாசிக்க…

    மேலும் வாசிக்க
Back to top button