இணைய இதழ் 99

  • Aug- 2024 -
    22 August

    காலம் கரைக்காத கணங்கள்; 6 – மு.இராமநாதன்

    அரபிக் கடலின் காந்தக் கரங்கள் 1985 மிகவும் சாதுவான ஆண்டாக இருந்தது. ஜார்ஜ் ஆர்வெல் ‘1984’ என்றுதான் நாவல் எழுதினார். 1984இல்தான் இந்திரா காந்தி சுடப்பட்டார். ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.  போபால் நகரத்தின் காற்றில் கார்பைட் ஆலை நஞ்சை உமிழ்ந்ததும் 1984இல்தான்.…

    மேலும் வாசிக்க
  • 21 August

    ராக், பேப்பர், சிஸ்ஸர்ஸ்! – ப்ரிம்யா கிராஸ்வின்

    ‌                                அம்மா என்னை இந்தக் கோலத்தில் பார்த்தால் என்ன சொல்லுவாள் என்று தெரியவில்லை. தன் கருப்பு நிற ஸ்கூட்டியை சீராக நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களின் சரத்தின் இடையில் ஒரு உதிர்ந்த மலர் போல அலையக்குலைய நிறுத்தியவள், நான் நின்று கொண்டிருக்கும் பள்ளியின்…

    மேலும் வாசிக்க
  • 21 August

    ஆகாத தீதார் நூல் வாசிப்பனுபவம் –  பாகை இறையடியான்

    சந்தூக்கில் வைக்கப்பட்ட ஜனாஸா ஒன்று மையத்தங் கொல்லையில் தனித்திருக்க.. “இங்கு மனிதர்களிடத்தில் சொர்க்கத்திற்குரியவர் யார்? நரகத்திற்குரியவர் யார்? என்பதைப் பற்றிய விவாதமே மேலோங்கி இருக்கிறது. முதலில் இந்த பூமிக்குரியவர்கள் யார்? என்பது பற்றிய பிரக்ஞையே இல்லாமலிருக்கிறார்கள்.” – என்ற தனது பொன்மொழியைத்…

    மேலும் வாசிக்க
  • 21 August

    ‘அதிர்ஸ்ய ஜலஹங்கள்’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – ராணி கணேஷ்

    தலைப்பு கூறுவது போல விநோதமான ஒரு படம்தான். கொஞ்சம் பொறுமையாய் பார்த்தால் படம் சொல்லும் கதையை உள்வாங்க முடியும். மேலோட்டமாக பார்த்தால் என்னடா இது பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறதே என்று தோன்றும், மிக மெதுவாகச் செல்வது போலவும் தோன்றும். ஆம்; இது ஒரு…

    மேலும் வாசிக்க
  • 21 August

    ஜமீலா நூல் வாசிப்பனுபவம் – எஸ்.உதயபாலா

    ரஷ்யா, ஜெர்மன் போர் நடந்த காலகட்டத்தில் போர்முனைகளில் வாழ்ந்த பாமர மக்களின் வாழ்வியலை பதிவு செய்த நாவல்தான் ஜமீலா. இதுவொரு மொழியாக்கம் செய்ப்பட்ட ரஷ்ய குறுநாவல். இதன் மொழி பெயர்ப்பாளரான பூ.சோமசுந்தரம் தமிழில் சுவை குன்றாது மொழியாக்கம் செய்திருக்கிறார். காலவோட்டத்தால் எண்ணவோட்டத்தில்…

    மேலும் வாசிக்க
  • 21 August

    நெஞ்சு பொறுக்குதில்லையே – உஷா தீபன்

    எப்படித்தான் அந்த பதிலைச் சொன்னோம் என்று ஒரு கணம் தனக்குள் ஆடித்தான் போனாள் புவனா. அதை வேறு மாதிரிச் சொல்லியிருக்கலாம் என்று பிறகுதான் தோன்றியது. பதிலென்றால் என்ன, நீண்ட வாக்கியமா…ஒரேயொரு வார்த்தை….சாதாரண வார்த்தைதான். ஆனால், அதை எந்த மாதிரிச் சொல்கிறோம் என்பதில்தான்…

    மேலும் வாசிக்க
  • 21 August

    பித்தளைத் துட்டு – சாளை பஷீர்

    இரு பத்தாண்டுகளாக எனது தெருவில் பல இடங்களிலும் அவரைப் பார்த்திருக்கிறேன். உம்மா வாப்பா இட்ட பெயர் ஷேக் அப்துல் காதிர். ஒத்த வயதுக்காரர்களால், ‘சேத்துக்காரு’ என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார். ‘பித்தளைப்பூட்டு’ என்பதுதான் அவரது விளிப்பெயராக இருந்திருக்க வேண்டும். அது ஏன் பித்தாளப்பூட்டாக…

    மேலும் வாசிக்க
  • 20 August

    தேன்சிட்டுகள் – சாய்வைஷ்ணவி

    மீரா போதையின் உச்சமென்றொன்றை இன்றுதான் கண்டறிந்தாள். நீர் உறிஞ்சும் உவர் நிலம் போல் அவள் மேல் படர்ந்த வியர்வைத் துளிகளை உந்தி வரை உடுத்தியிருந்த வெள்ளாடை முழுதும் உறிஞ்சி தாகம் தீர்த்திருந்தது. வெள்ளாடைக்கொரு குணமுண்டு. அது ஒளிவுமறைவற்றது. தொடை வரை மறைத்திருந்த…

    மேலும் வாசிக்க
  • 20 August

    கொமங்கை – க.மூர்த்தி

    இசுவு. வலிப்பு நோயினைப் போல கொமங்கையின் உடம்பினை வெட்டி வெட்டி இழுக்கும். சந்தோசம், மனக் கிளர்ச்சி என நெஞ்சை கிழித்து இரத்ததினை வெளியே அள்ளிப் போடும் கவலையாக இருந்தாலும் அவளுக்கு இசுவு வந்துவிடும். முந்தைய இரவில் வந்திருந்த இசுவின் தளர்ச்சி அவளது…

    மேலும் வாசிக்க
  • 20 August

    சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 9 – யுவா

    சதிகள் பலவிதம் ”கிளிக்குப் பிறந்தவள் நீயோ கொண்டை தோகை மயிலோ குயில் தோற்கும் குரலோ கவிக்கு நீதான் தாயோ!’’ அரண்மனையின் தனது அறையில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு மெல்ல ஆடியவாறு சொல்லிக் கொண்டிருந்தார் சிங்கமுகன். அவர் கையில் ஒரு பட்டுத்துணியும்…

    மேலும் வாசிக்க
Back to top button