இணைய இதழ் 75

  • Jul- 2023 -
    5 July

    வாடகை மனைவி – அபிஜித் சென் – வங்காளச் சிறுகதை (தமிழில்: அகிலா ஶ்ரீதர்)

    அது மார்ச் மாதத்தின் பிற்பகுதி.  பரந்து விரிந்த வயல்களினூடே புழுதி நிறைந்த பாதை ஒன்று பிரிந்து சென்றது.  பிற்பகல் சூரியனின் மங்கலான வெளிச்சத்தில் தொலைதூரத்திலிருந்த கிராமங்கள் இன்னும் தொலைவில் இருப்பது போலத் தோன்றின. அந்த நிலப்பரப்பின் பெரும்பகுதி பாழடைந்து தரிசாக இருந்தது…

    மேலும் வாசிக்க
  • 5 July

    நித்தியம் – சுரேஷ் பிரதீப்

    1 ஜீனத் அம்மன் மளிகை ஸ்டோர் நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்துக்கு எதிரே இருந்தது. அது திருவாரூரில் உள்ள சிறிய நகரம். தொடர்ந்து சிறிதாகவே இருக்க விருப்பமில்லாமல் விரிந்து கொண்டே போனது. நகரின் இரண்டு பக்கமும் ஆறு ஓடியதால் பெருக்க…

    மேலும் வாசிக்க
  • 5 July

    பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 09 – கிருபாநந்தினி

    கடல்குருவி இதன் அறிவியல் பெயர் Hydrobates monorhis; இதன் ஆங்கிலப் பெயர் Swinhoe’s Storm-petrel. Robert Swinhoe என்பவர் 1867 ஆம் ஆண்டு இப்பறவையைப் பற்றி முதன் முறையாக விவரித்தவர். அதனால் அவருடைய பெயரையே வைத்துள்ளனர்.  ராபர்ட் சிவினோ கல்கத்தாவில் பிறந்தவர்.…

    மேலும் வாசிக்க
  • 5 July

    பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்

    வீட்டில் அவர் யாரோடும் அதிகமாகப் பேசினதில்லை. கேட்டால் பதில் சொல்லுவார் அவ்வளவுதான். வெளியே யாரோடும் பேசுவார். அவரை அங்கே இங்கே யாரோடோ பேசிக் கொண்டிருந்ததை நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். சாப்பிட சரியான நேரத்துக்கு வந்துவிடுவார். முன்பெலாம் மூன்று நேரம் சாப்பிடுவார். ரொம்ப…

    மேலும் வாசிக்க
  • 5 July

    வெந்தழலால் வேகாது; 03 – கமலதேவி

    மானுட ஆடல் மனிதர்களுக்குள்ளான உறவும், அன்பும், உதாசீனமும் என்றைக்கும் புரிந்து கொள்ள முடியாத, விடைசொல்ல முடியாத உணர்வுகளாகவே உள்ளன. ஏன் ஒருவரை வெறுக்கிறோம் அல்லது நேசிக்கிறோம் என்பதற்கு சரியான பதில் இல்லை. இது நம்முடைய அறிவு என்ற நிலையில் இருந்து நழுவிய…

    மேலும் வாசிக்க
  • 5 July

    திருவிருத்தி – மஞ்சுநாத் 

    இரத்தம் உந்தப்பட்டு உச்சி நோக்கிப் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தியது. இறக்கத்திலிருந்து சிரமத்துடன் மேலேறினோம். முகம் விறுவிறுத்திருந்தாலும் மலர்ச்சியின் சாயலை ருசிக்க முடிந்தது. தலையின் பாரம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. உள்ளங்கைகள் நீரில் ஊற வைத்த தாமரை இதழ்களாகப் பிசுபிசுத்தன. விழிப்படலங்களில் திரையிட்டிருந்த…

    மேலும் வாசிக்க
  • 5 July

    குகை மா.புகழேந்தி கவிதைகள்

    வாழ்க்கை நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து எல்லாத் திசைகளுக்குமாய் எண்ணற்ற பாதைகள் நீளுகின்றன ஒன்று கடலை நோக்கி மற்றொன்று மலையுச்சிக்கு ஒன்று கலைக்கூடத்திற்கு மற்றொன்று மாபெரும் பள்ளத்தாக்கின் பாதாளத்திற்கு ஒன்று விசாலத்தை முன்னிறுத்தி மற்றொன்று குறுகலான முட்டுச்சந்திற்கு ஒன்று அமைதியின் மையப்புள்ளிக்கு மற்றொன்று கொலைவிழும்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    செந்தி கவிதைகள்

    ஒரு ரயில் காட்சி ரயிலடியில் வழியனுப்ப வந்தவர்களும் வண்டியில் ஏறப்போகிறவர்களும் தங்கள் காதுகளில் ஏதோவொன்றை மாட்டிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்தபடி யாருடனோ பேசியபடியே இருக்கிறார்கள் கடைசி நிமிடத்தில் தட்டுத்தடுமாறியொருவன் ஏறுகிறான் காபி காபி என்று கூவுகிறான் ஒருவன் உட்கார்ந்த கணத்தில் இட்லியைப் பிரிக்கிறார்கள்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    பெரியவர் – தாமரை பாரதி

    வாழை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த தோட்டத்தில் சற்றைக்கு முன்னர் பெய்த மழையீரத்தில் தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. வாழையிலைகளில் மழை நீர் வழிந்து கொண்டிருந்தது. சில துளிகள் இலையுடன் ஒட்டியும் ஒட்டாமலும் மினுக்கிக்கொண்டிருந்தன. மழைக்குப் பிறகான மாலை நேரத்தில் காகமொன்று கரைந்து கொண்டிருந்தது.…

    மேலும் வாசிக்க
  • 5 July

    சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் (தமிழில்: க.மோகனரங்கன்)

    நான் ஒரு தவறு செய்தேன் அலமாரியின் மேல்பகுதியை ஆராய்ந்துகொண்டிருந்தவன்  ஒரு ஜோடி நீல நிற உள்ளாடைகளை வெளியே எடுத்து  அவளிடம் காட்டி, “இவை உன்னுடையதா?” என்று வினவினேன். அவள் பார்த்துவிட்டு, “இல்லை, அவை ஒரு நாய்க்குச் சொந்தமானவை.” என்றவள் அதன் பிறகு…

    மேலும் வாசிக்க
Back to top button