கவிதைகள்
-
May- 2023 -16 May
ராணி கணேஷ் கவிதைகள்
அதிகம் பயன்பட்டிராத சாலையின் கூடவே அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது பாலமற்ற சிறு நதி வற்றா நதியினைத் தாண்டிய நிலப்பரப்பின் நடுவே நாளெல்லாம் தனித்தே இருக்கிறது பாதைகளற்ற பங்களா பாழடைந்த பங்களாவை தினமும் கடக்கையில் காணக் கிடைக்கும் பெயர் தெரியாத காட்டுமலர்கள் காட்டுமலர்களைத் தாண்டி…
மேலும் வாசிக்க -
16 May
அனிதா கோகுலகிருஷ்ணன் கவிதைகள்
வெயிலின் நாணயம் அதிகாலைச் சூரியனிடம் சூரிய நமஸ்காரத்தோடு கேட்டுக் கொண்டேன் அவ்வப்பொழுது மேகங்களுக்குள் ஒளிந்து கொள் என்று ஒப்புதல் கொடுப்பது போல காலை உணவுப் பொழுதில் மேகங்களுக்கு இடையில் சென்றவனை அங்கேயே கட்டி வைக்க முடியுமா? விழுந்து புரண்டு நின்று யோசித்துக்…
மேலும் வாசிக்க -
16 May
அன்றிலன் கவிதைகள்
பதங்கமாகும் பதர்வாழ்வு காற்றுக் குமிழ்கள் கோலிக்குண்டுக்குள் அடைபட்டுக்கொண்டது போல் சிக்கிக் கிடக்கிறான் வெளியற்ற உள்வெளியின் துகள்களின் மீது ஒரு நவீன யுவன் பாசிட்ரான்களின் பள்ளத்தில் உயிர் வெப்பத்தைச் சிதை மூட்ட அண்டவெளியில் ஆயுதங்களைக் கூர்தீட்டுகிறான் அதற்குக் கறைகொண்ட செவ்வகவொளியே போதுமென்கிறான் மென்று…
மேலும் வாசிக்க -
5 May
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
யார் நீங்கள்? அனைத்திலிருந்தும் வெளியேறிவிட குடியிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் கட்டிட வாசல் மட்டுமே வழி அல்ல தெருக்கள் சந்துகள் சாலைகள் நெடுஞ்சாலைகள் என எங்கெங்கும் நெரிசல் துரோகம் ஃபிராடுத்தனம் கூச்சல் குழப்பம் வெளியேறுதல் நிகழ்ந்தது முன்னர் வனத்திலிருந்து வெளியேறுதல் நிகழ்கிறது பின்னர் வனம்…
மேலும் வாசிக்க -
5 May
செ.புனிதஜோதி கவிதைகள்
அகோரத்தின் பசி உங்கள் தனிமையை எங்கே தொலைப்பதென அறியாமல் அங்கே தொலைத்திட வந்தீர்கள் பலநாட்களாக வெறுமையோடு கரம்குலுங்கிக் கொண்டிருந்தவன் நீங்கள் அடித்து விளையாடும் அழைப்பு மணி உடலெங்கும் ஊறும் புழுவின் நமைச்சல் வெறுமையும் தனிமையும் அகோர உருவமெடுக்கும் புயல் என்பதை அப்போது…
மேலும் வாசிக்க -
5 May
தாமரைபாரதி கவிதைகள்
அழுக்காறு உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதை திடீரென மறையும் அந்திமேகமாய் காற்று கொண்டுவரும் குளிர்ச்சியால் வருடாதீர் எனது உயரத்தை உங்களால் ஒருபோதும் தாங்கமுடிவதில்லை என்பதை மறைமுக உதாசீன மழையாகப் பொழியாதீர் உங்கள் வரையறைக்குள் வரமுடியாத என்னை வலுக்கட்டாயமான சிரித்த முகத்துடன் வரவேற்க…
மேலும் வாசிக்க -
5 May
நலங்கிள்ளி கவிதைகள்
வேண்டுகோள் உன் அப்பள வார்த்தைகளை வீசிச் சென்றால் நொறுங்கவே செய்யும் உன் தீ கருத்தை நீரில் அமிழ்த்தினால் அணையவே செய்யும் உன் பனி முகத்தை ஆதவனிடம் அர்ப்பணித்தால் மறையவே செய்யும் உன் வெயிலை ஒளித்து வைத்தால் இருள் வரத்தான் செய்யும் உன்…
மேலும் வாசிக்க -
Apr- 2023 -18 April
ச. மோகனப்ரியா கவிதைகள்
போர்களை நான் விரும்புகிறேன் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிலத்தின் கங்குகள் எழ கைகளில் தழலும் மெய்மையுள் உறைந்த உயிர்ப்பின் போர்களை நான் விரும்புகிறேன் பின்னே தொடரும் நேற்றைய சுயத்திற்கும் எனக்கும் இடையே நித்தியமும் நிகழும் போர்களை நான் விரும்புகிறேன் தீவட்டிகளை என்புறம்…
மேலும் வாசிக்க -
18 April
குமரகுரு கவிதைகள்
பூங்காவின் கதவிலொரு பூட்டு வந்து வந்து பார்த்துப் போகும் பிள்ளைகளுக்கெல்லாம் தன் சாவிதுவாரத்தால் பதில் சொல்லிக் கொண்டிருந்தது இன்னும் கொஞ்ச நேரம் போனால் அழுதேயிருக்கும் காவலாளி சாவியை துவாரத்தில் வைத்ததும் பொடக்கென்று எளிதாய்த் திறந்து கொடுத்து பிள்ளைகளை உள்ளே வரச் சொல்லி…
மேலும் வாசிக்க -
18 April
அய்யனார் ஈடாடி கவிதைகள்
மடி கனத்துப்போன காரிப் பசுவிடம் முட்டி மோதிக் குடிக்கிறது தாயை பறிகொடுத்த செவலை நாய்க்குட்டி வெண்கலப் பானையில் அலம்பாமல் கிடக்கிறது தண்ணீர்; அவளது சோர்வடைந்த முகத்தைப் போல. *** பலூன் விற்கிறாள் சிறுமி பூ கட்டுகிறாள் அம்மா காத்திருக்கிறது கொதிக்கும் உலை…
மேலும் வாசிக்க