கவிதைகள்
-
Feb- 2025 -1 February
ப.மதியழகன் கவிதைகள்
எனக்கு என்னைக் கொடுத்துவிடு 1 பிறகென்றாவது ஒருநாள்என்னைப் பற்றி நினைத்துப் பார்ப்பாய்வாக்குறுதிகள் அப்படியேதான்இருக்கின்றனசெல்லரித்துப் போனகாகிதங்கள் போலவார்த்தைகளுக்கும் மௌனத்திற்குமானஇடைவெளியை நிரப்பிவிடுகிறது இந்த மதுஒவ்வொரு நாளும் வாழ்க்கை நதியில்பலவந்தமாகப் பிடித்துத் தள்ளப்படுகிறோம்இரவின் மங்கிய வெளிச்சத்தில்நட்சத்திரங்களும் மின்மினியும்ஒன்றுபோலவே தெரிகின்றனஎனது பிடிமானங்கள் வலுவற்றவைஎப்போது வேண்டுமானாலும் நழுவலாம்சந்தேகங்கள் கூட…
மேலும் வாசிக்க -
Jan- 2025 -16 January
கி.கவியரசன் கவிதைகள்
மின்னலொன்று உன் முகத்தைவரைந்து செல்கிறது இன்னும் வேகமாய்த் துடிக்கிறது இதயம்அடுத்த மின்னலுக்குஉன்னிடம் வந்து சேர்ந்திட… இந்த மழைஉன் நினைவுகளைப் பொழியத் தொடங்குகிறது உன் நினைவுகள் விழ விழஇன்னும் வெகு நேரம் பிடிக்கிறதுஇந்தப் பயணம். *** ஒவ்வொரு முறையும் வந்து செல்லும்காட்டாற்று வெள்ளத்தைப்…
மேலும் வாசிக்க -
16 January
தேன்மொழி அசோக் கவிதைகள்
உன்னதப் பெருவெள்ளம் என்னைத் துண்டு துண்டாய் வெட்டிதிசைக்கு ஒன்றாய்நீ வீசியிருந்தால் கூடஎல்லையைக் காக்கும்காவல் தெய்வம் போலஎல்லாத் திசையிலும்உன்னையே காத்து நின்றிருப்பேன். யாரோ ஒருவரை ஏவிநம் அந்தரங்க நிமிடங்களால்என் உணர்வை லேசாகக் கீறினாய் அல்லவா?அப்போது முடிவு செய்தேன்உயிரே பிரியும் இடரில் நீயிருந்தாலும்பாழடைந்த கோவிலின்சாதாரண…
மேலும் வாசிக்க -
16 January
இரா.கவியரசு கவிதைகள்
பொன்விதி இந்த இடத்தில் வந்துஅமர்ந்துற்ற பொன்விதியால்ஆயிரமாயிரம் மனிதர்களின் தலையைத்தொட்டுத் தொட்டு விம்முகிறதுஅம்மரம்.தலைகள் என்றும் தீருவதில்லை.விழுதூஞ்சல் ஆடுகிற குழந்தைகளும்இழுத்துச் செல்லப்படுகிறார்கள்காலந்தோறும்.நிற்கவே கூடாத வாகனங்களும்அனிச்சையாகஓடிக்கொண்டேநடக்கப் பழகிவிட்டவர்களும்சிவப்பு மஞ்சள் பச்சைக்காகவேநேர்ந்துவிடப்பட்ட ரயில்களும்மொய்த்துக் கிடக்கும் நிலையத்தின்முன்புமரமாக வாழ்வதென்பதுஒவ்வொரு இலையாக தலை திருகிக்கொன்று புதைப்பதுகாலாவதியாவதற்காகவேதூசிக்காற்றை முகர்ந்துஉயிர்த்தைலத்தைபலியிடுவது. *** மாரிலடிக்கும்…
மேலும் வாசிக்க -
16 January
வளவ.துரையன் கவிதைகள்
வருணதேவன் வாய்திறந்து கொட்டுகிறானேவழியெங்கும் வெள்ளமாய். வாடும் பயிருக்குத்தனைவிட்டால் யாருமில்லைஎன்றெண்ணி அவ்வப்போதுமறக்காமல் பெய்கிறதுஇந்த மாமழை. இதுபோன்று பெய்தால்இனியதுதான்.விரைவில் நின்றுவிடும். தூளியை ஆட்ட ஆட்டத்தூங்காமல் சிணுங்கும்சிறு குழந்தையாய்வரும் தூறல்கள்தாம்எப்போதும் தொல்லை ஒதுங்கவும் இடமின்றிஓடவும் இயலாமல்ஒண்டிக்கொண்டுஅல்லல்படும்நொண்டி ஆட்டுக்குட்டிதான்கண்முன் நிற்கிறது. *** சிரிப்பு என் அம்மா அதிகமாகச்சிரிக்கமாட்டாள்…
மேலும் வாசிக்க -
4 January
கூடல் தாரிக் கவிதைகள்
நினைவு மரம் அப்பாவின் நினைவால்வைக்கப்பட்டமுற்றத்து மரத்திடம்அம்மா அடிக்கடி பேசிக் கொள்வாள்இலேசாக சிரித்தும்கொள்வாள்எப்போதாவது அதனைப் பார்த்துக்கண்ணீர் சொரிவாள் இன்று காலைவாசலில் நின்றவாறுகொஞ்சம் கொப்பொடித்துக்கொள்ளட்டுமாஎன்றான் எதிர்வீட்டுக்காரன் நல்லவேளைஅம்மா வீட்டில் இல்லை. * பிரியமிகு பூனை நடக்கும் தருணத்தில்சத்தம் எதுவும் எழுப்பாமல்மெல்ல நடக்கின்றனபூனைகளெல்லாம் மியாவ்…என்னும்ஒற்றைச்சொல்பாலுக்கானது மட்டுமல்லஅதன்…
மேலும் வாசிக்க -
Dec- 2024 -18 December
சந்திரா மனோகரன் கவிதைகள்
வில்லிடுதல் மிளிரும் நட்சத்திரம் அவன் காலுக்கடியில்எப்படி ஒளிரும் என்ற கேள்வியோடுகண் சிமிட்டி சிமிட்டிப் பார்த்தவன் கால்கள்ஒரு வட்டத்திற்குள் சிலந்தி போல் சிக்கிக்கொண்டன ஒடிந்து சாயும் செடி போல் அவள் எழும்பி இருந்தாள்ஆரவாரமற்ற அவள் தோற்றத்தில்அவன் தயக்கம் தகனம் ஆயிற்று ஆற்றங்கரையிலும் கடலோரத்திலும்நிமிர்ந்த…
மேலும் வாசிக்க -
18 December
இரா.மதிபாலா கவிதைகள்
சேதி கேட்டு அதிர்ந்துமெய் பார்த்துபெருந்தீ கண்ணுற்றுதிரும்புகையில்நீர் குளித்த வீட்டில்சின்னஞ்சிறு சுடராகிநின்று விடுகிறதுவாழ்வு. காலம் அமைதியில்உறங்குகிறது புழக்கடையில்கதாபாத்திரங்கள்எதிரொலிக்கின்றனவாழ்ந்த வாழ்வினை. காலக் குளத்தில்பேரமைதியோடுவிழுகிறது கல். அடர்ந்த மனசின்கீழ்வாரத்தில்பட்டென சிறு ஒசை. இப்போதுதான்பறந்திருக்கிறது பறவை. இறகில் இருந்ததுஎழுதி வைத்தஉயிர்க்குறிப்பு. பெருங்கல் போர்த்திபடுத்துக் கிடப்பதெனஅவதி. குறுஞ்சொல் கூடகிடைக்காத…
மேலும் வாசிக்க -
18 December
ச.ஆனந்தகுமார் கவிதைகள்
பிரார்த்தனை எலும்பெல்லாம் சரியாக வெந்திருக்க வேண்டும்கைகூப்பி வேண்டி உறுதி செய்தார்…சொர்க்க ரதத்திற்கு பேரம் பேசாமல்கேட்டதைக் கொடுத்தாயிற்றுமருத்துவமனையின் கடைசிநிமிடங்களில் கூட ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம்சச்சரவின்றி சுமூகமாக முடிந்ததுஇரவில் வயிறு முழுக்கக் குடித்துவிட்டுஎப்போதும் போல் கத்திவிடாமல்மாலையிட்ட போட்டோ முன்பு அமர்ந்துமௌன அஞ்சலிஎல்லாம் சரிதான்…உயிரோடு இருந்தபோதும் கொஞ்சம்வாழ்ந்திருக்கலாம்…
மேலும் வாசிக்க -
2 December
அ.ஈடித் ரேனா கவிதைகள்
நியாயங்கள்எடுபடாது என்றுதெரிந்த பின்பேச முடியவில்லைஅருகில்தான் இருந்ததுசொற்கள் நிரம்பிய பை. * அப்பா எப்படிஇருக்கிறார் என்று கேட்கமுடிவதில்லை அப்பா இறந்தநாளிலிருந்து. மரணக் கடலில்கலந்த பின் என்னவாகும்என் நினைவுகளின் நதி? * இட்லிக்கும் சட்னிக்கும்இடையிலான தூரம்தான்உனக்கும் எனக்கும் இரண்டும் ஒன்றையொன்றுஎப்போது வேண்டுமானாலும்கபளிகரம் செய்துவிடலாம் இட்லி…
மேலும் வாசிக்க