சிறுகதைகள்
-
Oct- 2024 -6 October
திசையொன்றின் திறவு – லட்சுமிஹர்
‘பிழைத்து கொண்டுவிட்டேன்’ என்பதை மீறி, அடுத்த நொடியினைக் கொண்டு தீர்மானிக்கும் யாவையும் மறந்திருந்த மருத்துவ நாட்களில் அப்படியாக ஒரு பிரார்த்தனையைக் கேட்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. விளங்கிக் கொள்ள வேண்டி எடுத்த முயற்சிகள் என்னைக் கொண்டு போய் நிறுத்திய இடத்தினை மறக்கவே…
மேலும் வாசிக்க -
6 October
திரும்புதல் – எம்.கோபாலகிருஷ்ணன்
“அப்பா இன்னும் வீட்டுக்கு வர்லப்பா” என்று சொல்லும்போது சுதாவின் குரல் சாதாரணமாகத்தான் இருந்தது. கணினியின் ஓரத்தில் மணி பார்த்தேன். ஒன்பதைத் தொட்டிருந்தது. வழக்கமாக இந்த நேரத்தில் அவள் அழைப்பதில்லை. கணினியை அணைத்துவிட்டு உடனடியாகப் புறப்பட்டேன். இனந்தெரியாத மூட்டம் மனத்துள் கவிவதை உணர்ந்தேன்.…
மேலும் வாசிக்க -
6 October
தன் வரலாறு – யுவன் சந்திரசேகர்
எங்களுடைய உறவுக்காரப் பெண்மணி சோழவந்தானில் இருந்தார். அதாவது அந்த ஊருக்கு மணமாகி வந்தவர். பூர்விகம் கேரளம். இறுதிக் காலத்தில் அப்பா படுத்த படுக்கையாய்க் கிடந்தபோது, அம்மாவுக்கு ஒத்தாசையாக நாலைந்து மாதங்கள் எங்களுடன் வந்து தங்கினார். செம்மீன் பாடல்களும், நடைமுறைப் புழக்கத்திலுள்ள சில…
மேலும் வாசிக்க -
6 October
டேர் – பத்மகுமாரி
மதிய வெயில் மேகங்களுக்குள்ளே மறைந்து கிடந்தது. மனோகரி வானத்தை வேடிக்கை பார்த்தபடி மரத்தைச் சுற்றி கட்டிவிடப்பட்டிருந்த திட்டில் வலது காலுக்கு மேல் இடது காலை நட்டனம் கொடுத்து அமர்ந்திருந்தாள். மரத்திற்கு வளையம் கட்டியிருக்கிறார்கள், வேர்களுக்கு? இந்த மரத்தின் வேர்கள் மண்ணுக்கடியில் எந்த…
மேலும் வாசிக்க -
6 October
டால்ஸ்டாய் பண்ணை – சி.சரவணகார்த்திகேயன்
லலிதா ஈர்க்குச்சியால் தைக்கப்பட்ட மந்தாரை இலையில் வைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய, பொன் மஞ்சள் நிறம் கொண்ட உருண்டையை ஆர்வமாகவும் ஆசையாகவும் நாவில் எச்சிலூறப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘அதைச் சாப்பிடலாமா வேண்டாமா? காந்திக்குத் தெரிந்தால் திட்டுவாரா?’ என்று மனதில் குழப்பம் ஓடிக் கொண்டிருந்தது.…
மேலும் வாசிக்க -
6 October
டிராயர் உள்ளே ஒரு கவர் – ‘காலச்சக்கரம்’ நரசிம்மா
அட்டெண்டர் பரசு கையில் கவரை ஆட்டிக்கொண்டு வந்த விதமே, சங்கமேஸ்வரனுக்கு வருவது என்ன என்பது புரிந்து விட்டது. அதோ! அந்த கவரின் உள்ளே, அவரது முப்பத்தைந்து வருட கடும் உழைப்புக்கு மங்களம் பாடும் அறிவிப்பு வந்துகொண்டு இருக்கிறது. கவரைப் பிரிக்கவே வேண்டாம்.…
மேலும் வாசிக்க -
6 October
உத்தரவு – இராஜலட்சுமி ஆறுமுகம்
“6 மணிக்கெல்லாம் எல்லோரும் தயாராகிடுங்க.. அப்புறம் அது இல்லை இது இல்லைனு சொல்லிக்கிட்டு ‘லேட்’ பண்ணாதீங்க. நேரத்துக்கு அங்க போய் சேர்ந்தா தான் ‘தோக்கன்’ எண் கிடைக்கும் தெரியும்தானே?’ என அப்பா அம்மாவிடம் காராசாரமாக சொல்லிக் கொண்டிருந்தார். அம்மாவும், ‘சரிங்க. எல்லாம்…
மேலும் வாசிக்க -
6 October
உடனுறைவு – கா. சிவா
வெறுமை பெரும் போர்வையென என்மேல் கவிந்தது. மென் துகிலால் ஆனதாக இருந்த அப்போர்வை மெல்ல மெல்ல எடை கூடி எடைமிக்க உலோகத்தால் ஆனதாக மாறி அழுத்தியது. கதறி அழுவதற்கான வேட்கை என்னுள் எழுந்தது. ஆண்டிற்கு ஒரு வாரம் மட்டும் பார்க்கவேண்டிய…
மேலும் வாசிக்க -
6 October
உருத்து – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
இருளுக்கும் அமைதிக்குமான காதலைக் கரைத்துக் கொண்டிருந்த சுவர்க்கோழியின் ஒப்பாரி அதன் இணைக்குக் கேட்டதோ யில்லையோ, இடிந்துபோயிருந்த தவமணி வீட்டாளுகளுக்கு புத்திக்கு எட்டாமல் காதுகளில் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தது. பொழுதிருட்ட வேடிக்கைக்கும் விலக்கி விடவும் கூடிய கூட்டமெல்லாம் ஒன்றும் இரண்டுமாய் கலைந்துபோக சாமமிரண்டு…
மேலும் வாசிக்க -
6 October
ஊற்று – ந.சிவநேசன்
இந்த இருட்டில் தன்னை எழுப்பி அப்பா எங்கே அழைத்துப் போகிறாரென அவனுக்குத் தெரியவில்லை. கதவருகில் போய் அம்மாவைப் பார்த்தான். அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். இருவரும் வெளியே வந்து கதவை சும்மா சாத்திவிட்டு நடந்தோம். வழக்கம் போல உடன் வரத் தயாராக…
மேலும் வாசிக்க