இணைய இதழ் 125

மாரி.கிருஷ்ணமூர்த்தி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

ஒரு துண்டு வனம்

காலைப் பனியில்
வெடித்த பாறைகளுக்கு
அருகே
காற்றாட அசையும் காந்தல் பூவின்
உயிர்ச் சுடர்
அந்தக் காட்டின்
பரந்து விரிந்த
வாழ்வை ஒரு
கணம் விழித்துக்
காட்டியது.

*

மரம் முழுக்க
விரிந்திருக்கும்
கொன்றைப் பூவில்
மஞ்சள் வெயிலின்
சாயல்.

*

சுகவாசியாய்
பகலில் எங்கு போய்
மறைந்துக்கொள்கின்றனவோ
தெரியவில்லை
மின்மினிகள்

இருளைக் கண்டதும்
காதலின் தவிப்போடு
மின்னி மின்னி விரிக்கின்றன
ஒளியை.

*

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button