இணைய இதழ் 125கவிதைகள்

தேன்மொழி அசோக் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

மனத்தரண்


நான்
சாதாரணக் கல்லே.

ஆனால்
உங்கள் பொறாமைதான்

என்னுள்
வைரம் இருப்பதை
நிரூபிக்கிறது.

ஆகவே,
உங்களிடமிருந்து
என்னைக் காப்பதே
என் மீப்பெரு வேலை.


*


பலர் சேர்ந்து எழுப்பிய
என் தன்னம்பிக்கையெனும் மதிலை
நீயொருவனாய்த் தகர்க்க முயல்கிறாய்.

அதன் வேர்கள்
தொப்புள்கொடி வழியே
பாய்ந்தவை!

அதை
அந்தப் பலரும் கூட
முழுதாக அறிய மாட்டார்கள்.

இருந்தும்
அவர்கள் இன்னும்
சாந்தைக் குழைத்துத் தருகின்றனர்.


*


உடைமையெனப் பார்க்காதே,
என் உயிரைப் பார்.

எனக்கு,
நீ கம்பளிப் புழுவாக அல்ல;
பட்டாம்பூச்சியாகும்
அந்த நொடி வேண்டாமா?

இன்னும்
எத்தனை காலம்
உன்னைப் பார்த்து
அருவருப்பேன்?

*


கோட்டின் அந்தப் பக்கம் நின்றுகொண்டு
நியாயம் பேசாதீர்கள்.

ஒருமுறை
இந்தப் பக்கம்
கால் வைத்துப் பாருங்கள்.

இங்கே
தரை மென்மையில்லை;
கொப்பளிக்கும் காயங்கள்.

உங்கள் கால்கள்
அதைத் தாங்குமா
பார்த்துவிடலாம்.


*

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button