இணைய இதழ் 127கவிதைகள்

தளபதி சல்மான் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

அதே 600கிராம்தான்
இருக்கிறது டைரி
ஆனால்
பேனா மையும்
மனப்பாரமும்
குறைந்துவிட்டன.

*

யாரிடமாவது
கொட்டித் தீர்த்துவிட
வேண்டும் என்றவனுக்கு
துணையானது மழை

”எப்படி கண்ணு
சிவந்திருக்கு பாரு,
இப்படியா நனைவ?”
என்று அதட்டிக் கொண்டே
தலையைத் துவட்டினாள்
அவள்.

*

விமர்சனங்கள் எழுதுவதை
சற்று நிறுத்திக்கொள்ளுங்கள்
நான் இன்னும் முழுவதையும்
முடிக்கவில்லை
நீங்கள் படித்தது
நான் கிழித்தெறிந்த
ஒரு சில பகுதிகளின்
தாள்களைத்தான்.

*

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button