...

இணைய இதழ் 67

  • Mar- 2023 -
    8 March

    தெய்வமே சாட்சி! – மல்லி

    ‘ஒரு சின்ன சைஸ் பிராந்தி பாட்டில் குடுங்க ‘ என்று பல வருடங்களுக்கு முன் திருவான்மியூர் ஒயின் ஷாப்பில் கேட்டதும், ஒருவிதக் கலக்கத்துடன் என்னைக் கடைக்காரர் பார்த்தார். ‘சாமி கும்முட‘ என்று நானே சொன்னதும்தான் அவர் ஆசுவாசப்படுத்திக்கொண்டார். சிறுவயது முதற்கொண்டே, வீட்டில் எவரேனும்…

    மேலும் வாசிக்க
  • 1 March

    பல’சரக்கு’க் கடை; 14 – பாலகணேஷ்

    வேலூரில் என்ன ஸ்பெஷல்? “விளையாடாதீங்க இன்ஜி ஸார்.” என்றேன். “இல்லய்யா. ஐயாம் டெட் ஸீரியஸ். டேய் நரேஷ், சொல்லேண்டா..” என்று அவனை முறைத்தார். “ஆமாண்ணா. இங்கயே ஆள் கம்மியா இருக்கு. யாரையும் அனுப்ப முடியாது. நம்மட்டருந்து போனவங்கள்ல யாராச்சும் சரிவருவாங்களான்னு இன்னிக்குக்…

    மேலும் வாசிக்க
  • 1 March

    பனிவிழும் பனைவனம்: போரும் புன்னகையும் – சிறில் அலெக்ஸ் 

    எத்தனை விதவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள் இந்த உலகத்திலே… ‘காலம்’ செல்வம் அத்தனை விதமான மனிதர்களையும் சந்தித்திருக்கிறார். அவரது மூன்று புத்தகங்களையும் வாசித்தவர்கள் இதை உணரக்கூடும். செல்வத்தின் புத்தகங்கள் விதவிதமான மனிதர்களை நமக்குக் காண்பிக்கின்றன. அவர் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு கதாபாத்திரம்.…

    மேலும் வாசிக்க
  • 1 March

    கடலும் மனிதனும்; 36 – நாராயணி சுப்ரமணியன்

    உயிருள்ள சோனார்கள் அமெரிக்கக் கடற்படையின் மிக முக்கியமான உறுப்பினர்களாக இவை போற்றப்படுகின்றன.  கே-டாக், கத்ரீனா, காஹிலி, மகாய் போன்ற பல பெயர்களில் இவை அமெரிக்காவின் கடற்படையில் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இவற்றின் பராமரிப்புக்காகவே பல பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதை ஒரு திட்டமாக…

    மேலும் வாசிக்க
  • 1 March

    நூல் மதிப்புரை: சரோ லாமாவின் ‘காகங்கள் கரையும் நிலவெளி’ – கவிதைக்காரன் இளங்கோ 

    கொரோனா காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் நிறைய திரைப்படங்களை ஓ.டி.டி. தளத்தில் பார்த்துப் பொழுதை நகர்த்தும் எத்தனிப்பும் அநேக பேர் செய்ததுதான். பல புதிய வாசகர்கள் அதில் உருவானார்கள் என்பது ஒரு வகை. ஏற்கனவே உள்ள வாசிப்பு பழக்கத்தை செம்மைப்படுத்திக் கொண்டவர்கள்…

    மேலும் வாசிக்க
  • 1 March

    ரேவா கவிதைகள்

    இலையுமில்லை காயுமில்லை பழுக்கத் தெரிந்த காத்திருப்பை காலங்காலமாக கையில் வைத்திருக்கிறது மனமுறிந்து கீழ் விழுந்த சருகுடைய ஓர் நாள் ஒட்டிப்பார்க்கும் பதற்றத்தைக் கொடுத்து விடுவதில்லை பச்சையம் நழுவி பூமி பார்த்த சொல்லொன்று அசைத்து அசைத்து அது நிகழ்த்தும் நாடகத்தில் காற்றுண்டு கட்டுக்கடங்காத…

    மேலும் வாசிக்க
  • 1 March

    பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 05 – கிருபாநந்தினி

    நார்ட்மேன் பச்சைக்காலி நாம் முன்னர் பார்த்த உள்ளான் இனங்களைப் போன்றே தோற்றமளிக்கும் பறவை நார்ட்மேன் பச்சைக்காலி. இது மட்டுமல்ல. பெரும்பாலான கடல் பறவைகள் கிட்டதட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சிறு வேறுபாடுகள் மட்டுமே காணப்படும். நார்ட்மேன் பச்சைக்காலியின் அறிவியல் பெயர் Tringa…

    மேலும் வாசிக்க
  • 1 March

    அகமும் புறமும்; 16 – கமலதேவி

    காலத்தால் சிதையாதது கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து, வேனில் ஆயின் மணி நிறங்கொள்ளும் யாறு அணிந்தன்று நின் ஊரே, பசப்பு அணிந்தனவால் மகிழ்ந, என் கண்ணே ஐங்குறுநூறு: 45 பாடியவர்: ஓரம்போகியார் திணை : மருதம் தோழி கூற்று பாடல்.…

    மேலும் வாசிக்க
  • 1 March

    லாவண்யா சுந்தர்ராஜன் கவிதைகள்

    எலுமிச்சம் பழங்களுக்கு  வயதாவதில்லை 1. எலுமிச்சம் பழமொன்றைக் கையில் எடுத்தேன் நான் சின்னஞ்சிறு வயதில் பார்த்து வியந்தது போலவே சீரான உருண்டை வடிவத்தில் இருந்தது சாறு பிழியும் முன்னர் மெல்ல உருட்டினேன் பால்யத்தில் நான் கண்ட அதே மினுமினுப்புடன் என் முன்னே கண் சிமிட்டியது இரக்கமின்றி இரண்டாய் வகுந்தேன் பதின் வயதில் ரசித்த அதே மணத்தை விரித்தது அதே ஆறு பிரிவான அறைகள் மிக மென்மையாக உள்சதை அல்லிகள் எல்லாமே எல்லாமே அப்படியே இருந்தன முதல் சாறு பிழிய மென்மையாய் அதக்கினேன் அப்போது வடியும் சாற்றின் நிறம் என் முதல் தூமையின் தினத்தில் பிழியப்பட்ட சாற்றின் வண்ணத்தைப் பிரதிபலித்தது கசப்பு கலக்காமல் சாற்றைப் பிழிந்தெடுக்க அரைவட்டத் துண்டங்களை மெல்லத் திருப்பி அல்லிகளை உடைத்துடைத்து சாற்றை ஒட்டப் பிழிந்தேன் கன்னிப் பருவத்தில் வெள்ளிக்கிழமை துர்க்கை முன் ஏற்றி வைத்த எலுமிச்சை அகல்களாய் இருந்தன இவ்விரு கிண்ணங்கள் எத்தனை முயன்றாலும் அவை கன்னி பருவத்திற்கு மேல் வளர்வதேயில்லை. *** என் பதின் வயத்தில் சாறு முற்றிலும் பிழிந்த பின்னர் அம்மாவிடம் நான் சொல்வேன் “எலுமிச்சைத் தோலை முகத்தில் தேய்க்கிறேன் முகப்பரு குறையுமாம்…

    மேலும் வாசிக்க
  • 1 March

    சுஷ்மா கவிதைகள் 

    ஏன் எழுதுகிறாள்? ஏன் எழுத வேண்டும்? என்ன கிடைக்கிறது? – என்கிறார்கள். ஊர் கூடுமிடத்தில் இருக்கும் ஒற்றைப் புளியமரம் எனக்கது! அதன் வேர் பிடித்துத் துயில்வேன், கிளை எண்ணிச் சுகிப்பேன், ஏதேனுமொரு பொந்திடை ஜீவன் ஒளித்துத் தேடுவேன், பறவையமர்த்தி அழகு பார்ப்பேன்,…

    மேலும் வாசிக்க
Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.