இணைய இதழ்

  • Apr- 2024 -
    16 April

    பாத்திரங்கள் – கா.ரபீக் ராஜா

    பேருந்து நிலையத்தின் அன்றைய நாள் முடிவில் நடக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. சுகந்தி நன்கு கால் நீட்டிக்கொண்டு போயிலை மென்று கொண்டிருந்தாள். அவளை பாபு சற்று கிண்டல் தொனியில் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை குறித்த முழு சந்தேகம் சுகந்தி அறிவாள்.…

    மேலும் வாசிக்க
  • 16 April

    மணல் – இத்ரீஸ் யாக்கூப்

    அதிகாலை மணி நான்கு இருக்கும்.  செய்யது, படலைத் திறந்துக்கொண்டு வீட்டின் முன்முற்றம் வழியே உள்ளே நுழைவதைக் கண்டதும், முத்துப்பொண்ணு இளம் காற்றுத் தீண்டி வெடித்தெழுந்த பஞ்சாக அவனை வரவேற்க வாசலுக்கு ஓடி வந்தாள். “வந்திட்டியளா மச்சா..! இன்னைக்கே பெருநாள்ங்கிறதால, அறிவிப்புக் கேட்டு…

    மேலும் வாசிக்க
  • 16 April

    அம்பர் சர்க்கா – பத்மகுமாரி

    பேச்சி எதிரே கிடத்தப்பட்டிருந்த தனக்கு நெருக்கமான உடலை கண்கொட்டாமல் பார்த்தபடி உறைந்து அமர்ந்திருந்தாள். சுற்று 1 – 1963 “அம்பர் சர்க்கா சுத்த சொல்லித் தராங்களாம். நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வந்திடுறோம்த்த” வள்ளி, பேச்சியின் அம்மாவை கரைத்துக் கொண்டிருந்தாள். அம்மாவின்…

    மேலும் வாசிக்க
  • 16 April

    நெறிக்கட்டி – சவிதா

    முதலில் சொட்டுச் சொட்டாய் வந்தது போலிருந்தது. அப்புறம் நான்கைந்து துளைகளிலும் பீய்ச்சியடிக்க ஆரம்பித்தது. நைட்டி முழுவதும் பாலால் நனைந்திருந்தது. ஒரே பால்வீச்சம். உள்ளைங்கையால் வலது மார்பைப் பொத்திக்கொண்டாள். கையில் பிசுபிசுப்பு. தொடைகளிலும் அதேபோல் தோன்ற, பொருந்தாமல் கண்களைத் திறந்த பிறகுதான் கனவென்றே…

    மேலும் வாசிக்க
  • 15 April

    தாய் மண் – ஸரோஜாசகாதேவன் 

    உலகின் கூரையென்றும் பனித்தூவிகளின் நாடு என்றும் அழைக்கப்படும் திபெத்தின் ஒரு பகுதி. ,முகட்டில் பனி படர்ந்த மலை. சரிவில் உயர்ந்து நின்ற மரங்களும் செடி கொடிகளும் பசுமை போர்த்தியிருந்தது.  சில்லென பனி அருவிகள் ஆங்காங்கே சலசலத்துக் கொண்டு மலைச் சரிவில் இறங்கிக்…

    மேலும் வாசிக்க
  • 2 April

    நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 02

    அவலங்களைப் பேசுதல் – ‘மூஞ்சிரப்பட்டன்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து மூஞ்சிரப்பட்டன் தொகுப்பினை அதன் வெளியீட்டு விழாவின் வழியாகவே அறிந்து கொண்டேன். பொதுவாக நம் சூழலில் முதல் நூலுக்கு வெளியீட்டு விழா நடப்பது  அரிது. சூழலில் புழங்கும் சக இலக்கியவாதிகளின் மதிப்பினைப் பெற்ற…

    மேலும் வாசிக்க
  • 1 April

    மழைக்குருவி கவிதைகள்

    மூக்குக்குள் முந்நூறு ஈக்கள் சுற்றுவதைப் போலமூக்கு நமநம என்று இருக்கிறதுஇடையறாத தும்மல்களால் அதிர்ந்துகொண்டிருக்கின்றன எனது ஒவ்வொரு நாட்களும்வற்றாத ஜீவநதியாக ஒழுகிக்கொண்டிருக்கிறது மூக்கு ஒவ்வொரு முறை தும்மும்போதும்முருகா முருகா என்பேன்நேற்றைக்கு முருகன் கனவில் வந்துதயவு செய்து நீ மதம் மாறி விடு என்கிறார்…

    மேலும் வாசிக்க
  • 1 April

    சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 3

    மாறுவேடப் பயணம் ’’இந்த நேரத்தில் என்ன அலங்காரம் வேண்டியிருக்கிறது?’’ முகம் பார்க்கும் ஆறடி கண்ணாடி எதிரே நின்றிருந்த சிங்கமுகனின் பின்னால் கிளியோமித்ரா குரல் கேட்டது. திரும்பிய சிங்கமுகன், ‘’இது அலங்காரம் இல்லை கிளியோ… மாறுவேடம்’’ என்றார். ‘’அடடே… இந்தப் பிச்சைக்காரர் வேடம்…

    மேலும் வாசிக்க
  • 1 April

    காலம் கரைக்காத கணங்கள் – மு இராமனாதன் – பகுதி 1

    ஹாங்காங்கில் வீடு வாங்குவது ஹாங்காங்கைப் பற்றிய சித்திரங்களுள் முதன்மையானவை அதன் அதிஉயர அடுக்ககங்கள். உயரங்களை வியந்து பாராதார் யார்? பல பழைய தமிழ்ப் படங்களில் நாயகனின் பட்டினப் பிரவேசத்தை அறிவிக்க எல்.ஐ.சி கட்டிடம்தான் பயன்பட்டது. அந்த 14 மாடிக் கட்டிடம் நகரத்தின்,…

    மேலும் வாசிக்க
  • 1 April

    சிபி சரவணன் கவிதைகள்

    வெள்ளை வேட்டி சொலவடைகளை மெல்லும் கிழத்திஅடை பாக்கை ஈரில் வைத்துநமத்துப் போகும்படி மெல்கிறாள்ஈ மொய்த்துக் கொண்டிருந்த புருசனின்உடம்பை அழுக்கில்லா வெள்ளை வேட்டியால்இறுக்கிக் கொண்டிருந்த பொழுதில்அவள் கண்களில் வெடித்த நீரில்எல்லாத் துக்கங்களும் நுரைத்துவிட்டன வெளியே,“வண்ணாத்தி புருசனுக்கு எதுக்குடிஒப்பாரிப் பாட்டு? எந்துருச்சு வாங்கடி முண்டைங்களா…”என்ற…

    மேலும் வாசிக்க
Back to top button