கவிதைகள்

  • Nov- 2019 -
    1 November

    கவிதை- ம.இல.நடராசன்

    மாயக்கண்ணாடி உங்கள், என் அருகில் ஒரு மாயக்கண்ணாடி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்தக் கண்ணாடிக்குள் உங்களை, என்னைப் போலவே ஒரு உருவம் ஒளிந்து கிடக்கிறது. ஆனால், அது வெறும் உங்கள், என் பிம்பம் தான். நீங்களும் நானும் தவறென்று செய்ய மறுப்பதைச்…

    மேலும் வாசிக்க
  • 1 November

    கவிதை- கீதா மதிவாணன்

    அவள் உரு மாறுகிறாள் ———————————————- பரிசுத்த ஆவியைப் போல.. கருவுறா முகிலின் கன்னிமை போல… காத்திருந்த கிள்ளையின் மனம் நோக வெடித்துப் பறக்கும் இலவம் போல… தாய்மடி முட்டியருந்தும் கன்றின் வாய் நுரைத்து வடியும் அமுதுபோல… சவக்காரம் போட்டு தானே வெளுத்த…

    மேலும் வாசிக்க
  • Oct- 2019 -
    18 October
    ஶ்ரீதேவி அரியநாட்சி

    கவிதை- ஸ்ரீதேவி அரியநாட்சி

    தேங்காய்ப்  பால் குழம்பு பவளமல்லியின் காம்பு சுமக்கும் அடர் ஆரஞ்சு வண்ணம் பதமாய் மேலேறி அதன் வெண் இதழில் சங்கமித்து வெளிறிய வண்ணம் உனது… உன் மேனியெங்கும் பார்த்திருக்கும் எண்ணெய் திட்டுக்கள் அதிகமாய் ஓலமிடாத கடலுக்குள் அமிழ்ந்திருக்கும் பவளப்  பாறைகளை நினைவூட்டுகின்றன…

    மேலும் வாசிக்க
  • 16 October

    கவிதை-வசந்ததீபன்

    புயல்சின்னம் முதுமக்கள் தாழிகளிலிருந்து மீண்டெழுந்து வருகின்றன மூதாதையர்களின் பெருமூச்சுகள். கண்ணீர் புரண்ட தரிசு நிலங்களின் வெக்கை யுகம் யுகமாய் வீசிக்கொண்டிருக்கிறது. நான்மறைகள் கழிவு நீரால் நனைபட்டு தெய்வ நம்பிக்கைகளெல்லாம் நாறுகிறது. நீள் கூந்தல் மழிக்கப்பட்டு இருள் கிடங்களுக்குள்ளும்.. புழைக்கடைகளுக்குள்ளும்.. தள்ளப்பட்ட அபலைகளின்…

    மேலும் வாசிக்க
  • 16 October

    கவிதைகள் -ஜான்ஸி ராணி

    1) ஒளிக்கும் அதன் இன்மைக்கும் பிறந்ததாயிருக்கின்றன நம் புரிதல்கள். உச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உருண்டோடும் பிரியங்கள். அடர்காதல் வனங்களை பதங்கமாக்கி கருக்கும் க்ஷணநேர பித்துக்கள். சிறகணிந்த தேவன் _ வால் முளைத்த சாத்தான் என உன் உருண்டோடும் கோலிக்குண்டின் திரவ லாகவத்தை வெண்சிறகுகளுதிர்த்து…

    மேலும் வாசிக்க
  • 16 October

    கவிதை -பாலைவன லாந்தர்

    போலிப்பற்கள்  நான் தப்புத்தப்பாக உறங்கிக்கொண்டிருந்தேன் தலைகளுக்கருகில் விரல்கள் கிடந்தன அவை அடிக்கடி ஒட்டிக்கிடந்த பாதச்சதைகளை சிணுக்கெடுத்துக் கொண்டிருந்தன   போலிப்பற்கள் உடைந்து முதுகுத்தண்டை உறுத்துகின்றனவா இல்லை கடிக்கின்றனவா எதுவோ ஒன்று   ஆம் நெடு நேரமாகிவிட்டிருந்தது   பிரிந்து போன காதலியின்…

    மேலும் வாசிக்க
  • 16 October

    கவிதைகள்- பா.தென்றல்

    1. செல்லங்கள் 〰️〰️〰️〰️〰️〰️ வீட்டில் பூனைகள் வளர்ப்பதில்லை நாய்களும் தான் நடு வீட்டில் மியாவ்கிறது ஒரு பூனைக்குட்டி எட்டிப் பார்க்கிறேன் என் மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள். அன்றொரு நாள் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. 2. ஏக்கம் 〰️〰️〰️〰️ பிடிமானம்…

    மேலும் வாசிக்க
  • 15 October

    கவிதை- இரா.கவியரசு

    அறுவடை ••••••••••••••• மரவள்ளி பிடுங்கிய வயிற்றை தடவிப்பார்க்க விடாமல் நிரம்பிக் கொண்டது மழை. வேலிக்கு வெளியே நின்ற என்னிடம் புதுக்கிழங்கை நீட்டினாள் மகள். சுட்டுத்தருவதற்குள் வேப்ப மரத்தை மோதியபடி ராட்சதக் குழாய்களை இறக்கியது லாரி மூங்கில் வேலியை உடைத்தவர்கள் வரப்புகளை அகழ்ந்தபடியே…

    மேலும் வாசிக்க
  • 15 October
    ச. விக்னேஷ்வரன்

    “நிரம்பாத குவளை”

    என் பாலைவனப் பயணத்தில் போகும் வழியெல்லாம் தண்ணீர் கொடுத்தென் தாகம் தணிக்கிறார்கள்.. பகல்களின் வெப்பத்தில் சிலர் தொண்டைக்கு குளிர்ச்சியாக பழச்சாறு தருகிறார்கள்.. இரவுகளின் குளிரில் சிலர் தேநீர் வழியே கதகதப்பைத் தருகிறார்கள்… சிலரிடம் என் சிகரட்டை புகையூட்ட மன்றாடியிருக்கிறேன்.. சிலரிடம் சிகரட்டையே…

    மேலும் வாசிக்க
  • 15 October

    கவிதைகள் -சுப. முத்துக்குமார்

      1.கண்ணீர்ப் பிரதி உன்னைப்போல் இல்லை நீ விட்டுச் சென்ற கண்ணீர் என் வீட்டுத் தண்ணீரில் உப்பு அதிகமென்றது உன்னைவிட எனக்கு நகைச்சுவை உணர்வு குறைவென்றது பகல் வெளிச்சம் அதற்குக்கூச்சம் தருவதாயிருக்கிறது இரவுகளில் உன் கண்ணீர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது குளியலறையில் நான்…

    மேலும் வாசிக்க
Back to top button