கவிதைகள்

  • Feb- 2020 -
    3 February

    கவிதை- விபீஷணன்

    03-கருமை நிற ரத்தம் எலும்புகளாலான சிம்மாசனத்தில் நதிக்கரையில் அமர்ந்து அதனுள் உதிக்கும் சூரியன், பறக்கும் பறவைகளைக் கண்டேன். வெண்மேகங்கள் நுரைத்திருந்தன. என் பிம்பத்தின் மீது வட்டம் மற்றும் தாள் வடிவக் கற்களை எரிந்தேன் அதிலிருந்து வழிந்த கருமை நிற ரத்தம் மறுகரையில்…

    மேலும் வாசிக்க
  • Jan- 2020 -
    31 January

    கவிதைகள்- மித்ரா

    1. அதீதங்களுக்கு சமயங்களில் நீடித்த பித்தின் சாயலேறி விடுகிறது அதில் நூறாண்டுகளாய் புதைந்து கிடந்த சுண்டக்கஞ்சியின் நெடி அப்பைத்தியத்தின் ருசியை புறங்கையில் வழியும் வரை அள்ளிப்பருகத் துடிக்கும் ஒருத்தியைத் தெரியுமெனக்கு அவளுடலெல்லாம் கசிகிறது பழங்கால போதையொன்று 2. எப்போதும் அதீதங்களோடே புழங்கி…

    மேலும் வாசிக்க
  • 27 January

    கவிதைகள்- மதுரா

    விடுமுறை கோட்டைக் கொத்தளங்கள் தூசு தட்டப்பட்டு ராஜா ராணிகள் நவீனத்துக்கு மாற்றப்படுகிறார்கள்.. பாரம்பரிய உணவுகளோடு பிட்ஸாவும் பர்கரும் இணைந்து கொள்கின்றன.. அழுகாச்சி தொடர்களெல்லாம் ஓரங்கட்டப்பட்டு ஆதித்யாவும் கார்ட்டூன்களும் களைகட்டுகின்றன.. முன்னூறு நாளாய் எந்த மருந்து மாத்திரைக்கும் கட்டுப்படாத மூச்சு பிடிப்பும் மூட்டுவலியும்…

    மேலும் வாசிக்க
  • 27 January

    கவிதைகள்- ஜீவன் பென்னி

    ஞாபகம் – 1   சின்னக் காலங்களிலிருந்து வெளியேறிக்கொண்டிருப்பதென்பது ஒரு நண்பனை கைவிடத்துணிவது மறந்திருந்த மனதொன்றை மிகத் தற்செயலாய் எதிர்கொள்வது இன்னும் மிகக்கச்சிதமாக எல்லாவற்றையும் விட்டுவிட்டு முடிவற்றதை நோக்கி நகரத்துவங்குவது. இவ்வளவு பெரிய நதியில் மிதந்து கொண்டிருக்கும் போது வாழ்வின் எல்லைகள்…

    மேலும் வாசிக்க
  • 27 January

    கவிதைகள்- இரா.கவியரசு

    1.வரைந்தவுடன் சிலையாக மாறுபவள் ??????????????? அம்மாவின் கைகள் சூம்பியிருக்கின்றன செவ்வக வயிற்றில் உறங்கும் சிறுவனை உதைத்துச் சுருட்டுகிறது குளிர் கதகதப்புக்காக முட்டும்போது மோதி நிறுத்துகிறது பெரும்பாறை. வானம் பார்த்த அவளது கண்கள் அசைவற்று நிற்கும் போது உடைந்துள்ள இதழ்கள் இறங்கி முத்தமிட…

    மேலும் வாசிக்க
  • 27 January

    கவிதைகள்- தமிழ்மணி

    சுகத்தின் மோட்சம் பிரயத்தனத்தின் பெருவெளியில் நுரைத்து திரளும் ஆன்மாவின் கட்டளை மீச்சிறு வடிவம் எய்துமுன் களியாட்டம் ஆடிவிடுகிறது தொங்கும் தோட்டம் ஊசலிற்கு ஏற்ப பிரம்மைகளை கூட்டித் திரியும் பாழ் மனிதர்களின் வன்முறை வெற்றிடம் சரீரத்தில் புல்லரிப்பின் தயவால் நீண்டிருக்கும் கேசம் தூண்டல்…

    மேலும் வாசிக்க
  • Dec- 2019 -
    6 December

    கவிதைகள் – இரா மதிபாலா

    #   01 காட்டுப் பூ —————- வேர்களின் குறு அறையில் தவம் முடிய வரம்  பெற விழிக்கையில் அடுக்ககத்தின் வரவேற்பறைக்கு கடத்தப்பட்டிருந்த மரத்தில் மலங்க, மலங்க விழித்தது காட்டுப் பூ. இருண்மையில் மறித்து கொத்தெனப் பிடுங்கி மேய அலைந்த தோள்களில் வாகாய்…

    மேலும் வாசிக்க
  • 6 December

    கவிதைகள்-உமா மோகன்

    1) திரும்பிவந்து பார்க்கும்போது நிச்சயமாக இவ்விடம்தானா எனச்சொல்ல முடியாதபடி எல்லாம் மாறிப்போய்விடுகின்றன தூரங்களைத் தாண்டுவது பாதுகாப்பு என்றிருந்த நாளில் பாழ்பட்ட மனைக்கு என்று எவ்விதப் பொருண்மையும் இல்லை கனவுகளிலும் சிரித்துக்கொண்டிருந்த ஒற்றைச் செம்பருத்திச்செடிதான் கற்றுத் தந்திருந்து கனத்தை புத்துருக் கொண்ட இடங்களில்…

    மேலும் வாசிக்க
  • 3 December

    கவிதை -இரா.கவியரசு 

    கிணற்றில் குதித்து விளையாடுதல்   மாமரத்தடியில் புளிய விதைகளை விழுங்கி பல்லாங்குழியைத் தோண்டி எடுக்கிறேன் கிடாவெட்டு முடிந்து வளையல்கள் ஒலிக்க அமர்கிறாள் அக்கா அவளிரு பிள்ளைகள் கைகளைப் பிடித்து இழுக்க அந்தரத்தில் மிதக்கிறாள்.   பல்லாங்குழியை மேலே சுழல விடுகிறேன் கிச்சுகிச்சு…

    மேலும் வாசிக்க
  • 3 December

    கவிதை -தமிழ்மணி

    மீட்பர்   தேங்கியிருக்கும் குட்டையில் துடித்துக் கொண்டிருக்கின்றன நீந்தத் தெரியாத தூறல்கள் காக்கையின் அலகும் தெருநாயின் நாவும் அதன் மீட்பர்   இச்சையின் கூட்டில் விறைத்து தனித்திருக்கும் சிசினத்தின் நரம்பு சொல்கிறது “உனக்கான மீட்பர் இன்னும் வரவில்லை”   பிரம்மச்சாரியத்தின் குட்டை…

    மேலும் வாசிக்க
Back to top button