இணைய இதழ்
-
Mar- 2024 -2 March
பத்மகுமாரியின் ‘நட்சத்திரம்’ சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பனுபவம் – மன்னர்மன்னன் குமரன்
கதைகள் முழுக்கப் பெண்கள்; அதிலும் அம்மாக்கள். மனிதர்களின் இருப்பு, பறந்துவிடாமல் இருக்க லேசான கனத்தை தாள்களின் மீது கொடுக்கிறது. முழுவதும் வாசித்து முடித்து நிறைய மனிதர்களைச் சந்தித்த பின் என் மனம் பற்றிக் கொண்டதென்னவோ இதைத்தான்; ‘தரிசனம்’ கதையில், ‘சந்தோசத்தைக் கொண்டு…
மேலும் வாசிக்க -
2 March
சுரேந்தர் செந்தில்குமார் கவிதைகள்
உரிமை! என் புடவையைஅங்கு காயப்போடாதேஇங்கு காயப்போடாதேஎன்றார்கள்.ஈரப்புடவையைஉடுத்தியபடியேநடந்தேன்.இங்கே,வெயிலுக்காபஞ்சம்?உரிமைக்குத்தானே! ***** சந்தோஷச் சிறுமி! விடுமுறை நாளில்‘நான் எட்டு வயசுலயேசைக்கிள் ஓட்டக்கத்துக்கிட்டேன்’என்றபடியேசித்தி மகளுக்குசைக்கிள் ஓட்டகற்றுத் தருகிறாள் அம்மா.அவ்வப்போதுஅம்மாவே நொண்டியடித்துசைக்கிளில் ஏறி அமர்ந்துசைக்கிளை ஓட்டவும் செய்கிறாள்.சோகக் கதைகளிலேஅம்மாவின்பால்ய வயதை அறிந்தவள்தற்போதுஎட்டு வயது சந்தோஷச்சிறுமியைக் காண்கிறாள். **** ஆறிலிருந்து…
மேலும் வாசிக்க -
2 March
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 1
உரைகல் செய்தி “தொடரும் சுரங்கக் கொள்ளை… தூங்கும் சிங்க அரசு… படியுங்கள் உரைகல்! இரண்டே வெள்ளிக் காசுகள். தொடரும் சுரங்கக் கொள்ளை… தூங்கும் சிங்க அரசு… படியுங்கள் உரைகல்!” தூங்கிக்கொண்டிருந்த மன்னர் சிங்கமுகன், இந்தக் குரலைக் கேட்டு கண்களைத் திறந்தார். கோபமாகப்…
மேலும் வாசிக்க -
2 March
சிறகு முளைத்தவள் – வசுமதி சுகுமாரன்
என் உடம்பில் பொருத்தப்பட்ட ஒவ்வொரு கருவியின் பயன்பாடும் என்னவென்று என் பயிற்றுவிப்பாளர் ஒரு கிளிப்பிள்ளைக்கு கூறுவதைப்போல் என்னிடம் விளக்கி கூறிக்கொண்டிருந்தார். நேரம் நெருங்க நெருங்க என்னுடய இதயம் மின்னலின் வேகத்தை விட பன்மடங்கு வேகமாகத் துடித்தது, லப் டப் லப் டப்.…
மேலும் வாசிக்க -
2 March
ஹலோ…. – அகிப்ரியா
அந்தச் சத்தம் என்னை இன்னமும் கடுப்பேற்றியது. என்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டேன். ஆனால், அந்த அழுகை அடங்கியபாடில்லை. விடாமல் கேட்கும் அழுகைச் சத்தம் என் மண்டைக்குள் என்னவோ செய்தது. என்னால் தாங்கவே முடியவில்லை. தலைக்குள் ஏதோ நுழைந்து குடைந்தது. குழந்தையை…
மேலும் வாசிக்க -
2 March
வடு – பாஸ்கர் ஆறுமுகம்
அந்த மனிதர் மிகவும் களைத்திருந்தார். பல நாட்களாக மழிக்காத தாடி மீசையில் அவரின் சோபையான கிழட்டு முகம் ஒளிந்திருந்து எட்டிப் பார்த்தது. தூக்கம் காணாத கண்கள் கண்ணாடி ஃபிரேமுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. மஞ்சள் கரையேறிய அரைக்கை சட்டையொன்றை அணிந்திருந்தார். அது…
மேலும் வாசிக்க -
2 March
நண்பனிருந்தான் – கா.ரபீக் ராஜா
அன்பு நண்பனை இப்போதுதான் கழுத்தை நெரித்துக் கொன்றேன். கழுத்தை என் கைகளால் இறுக்கும்போது அவன் காட்டிய மறுப்பு படிப்படியாக குறையத் தொடங்கியபோது ஒரு தெய்வீகமானச் சூழலில் மனம் லயித்தது. என் கைகளை அவன் கைகள் உடையும் அளவிற்கு பற்றிக் கொண்டிருந்தான். பின்…
மேலும் வாசிக்க -
2 March
பள்ளிக்கூடத்திற்கு அப்பால் – த.குணசுந்தரி
பரிட்சை அட்டையால் கீழ்பாகம் அடைக்கப்பட்ட உடைந்த தகரக்கதவு கொண்ட கழிவறைகளை ஆசிரியரின் கட்டளைப்படி நான் பூட்டிக் கொண்டிருக்கும்போதே மணி அடித்தது. அவசரமாய் ஓடிச்சென்று கூட்டத்தில் கலந்து கொண்டேன். ‘நீராரும் கடலுடுத்த’ என்று பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. ஆங்காங்கே சிதறிக்கிடந்த கட்டிடங்களுக்கு நடுவில்…
மேலும் வாசிக்க -
2 March
ஆயிரம் குற்றவாளிகளும், ஒரு நிரபராதியும்..! – சகா
காவல் நிலையத்தின் வாசல் தள்ளி ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் என் வண்டியை நிறுத்திவிட்டு பதட்டமாக இறங்கினேன். எத்தனையோ தடவை இதே சாலை வழியாகச் சென்று வந்திருந்தாலும் இத்தனை நாள் பார்ப்பதற்கு சாதாரணமான, கண்களுக்குப் பழக்கமான ஒரு கட்டிடம் போலத் தோன்றிய இந்த…
மேலும் வாசிக்க -
2 March
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
டாலியின் மீசை என் அறையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுமுன்பு ஒருநாள் இரவில் வந்து சென்றமையிருட்டுப் பூனையின் கவிச்சைஅதற்கு ஒரு ஜோடி மீசைகள் இருந்தனடாலியின் மீசையைப் போலவே. **** அழிக்கப்பட்ட ஏரிதன்னுள் மிச்சம் வைத்திருந்ததுஇருபதாண்டுகள் பழமையான தூண்டிலை.அழிபாடுகளின் நினைவடுக்கில்இன்னும் அத்தூண்டில்காலத்தைத் தக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறதுஇருபதாண்டுகள்…
மேலும் வாசிக்க