நூல் விமர்சனம்
-
Aug- 2026 -26 August
ஜனநாயகன் பிம்பச்சிறை 2.0 – ர. முகமது இல்யாஸ் ; நூல் அறிமுகம்: பீட்டர் துரைராஜ்
நடிகர் விஜய், அரசியல்வாதியாகி இருக்கிறார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற திரைநட்சத்திரங்கள் முதலமைச்சர்களாக அதிகாரத்திற்கு வந்துள்ளனர். விஜயும் முதலமைச்சர் ஆசையில் இருக்கிறார். கரூரில், கடந்த செப்டம்பரில் ஏழு குழந்தைகள் உட்பட 41 பேர், அவரைக் காண வந்த நெரிசலில் மரித்துப் போனார்கள். விஜயைச் சுற்றி எத்தகைய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதன் அரசியல் என்ன என்று இந்த நூலில் விவாதிக்கிறார் திரை ஆய்வாளரான ர. முகமது இல்யாஸ். விகடனில் பத்திரிகையாளராக இருந்த ர.முகமது இல்யாஸ் ஓர் ஆய்வு மாணவர். பெயரை மாற்றி கட்டுரை எழுத மறுத்து குரல் எழுப்பியவர். அவர் எழுதிய ‘ஜனநாயகன் பிம்பச்சிறை 2.0’ என்ற நூல் புத்தகக் கண்காட்சியின் போது வெளிவந்துள்ளது. உடனே வாசித்தும் விட்டேன். சுவாரசியமாக உள்ளது. உணர்ச்சி கடந்து, அறிவுத்தளத்தில் விவாதிக்க வேண்டிய பல புள்ளிகளை இந்த நூல் காட்டுகிறது. மறைந்த ஆய்வாளரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ‘ பிம்பச்சிறை எம்.ஜி.ஆர். திரையிலும், அரசியலிலும்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். அதன் தாக்கத்தில், இந்த நூலுக்கான பெயர் வைக்கப்பட்டுள்ளது. திரை நட்சத்திரங்களோடு, தொடர்புள்ள பல சம்பவங்களுக்குத் தத்துவ விளக்கம் கொடுக்கிறார் இல்யாஸ். நமக்கு வரும் செய்திகளை ஒரு குடிமகனாக எப்படிப் பார்க்க வேண்டும் என்று குறிப்புகளைத் தருகிறார். புகழ்பெற்ற ஒருவரின் நடவடிக்கைகளில் மறைபொருளாக இருக்கும் செய்திகளை நமது கவனத்திற்குக் கொண்டுவருகிறார். விஜய் நடித்த படங்கள், ரஜினி, அமிதாப், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற நட்சத்திரங்கள் ஊடாக தன்னுடைய வாதங்களை நம் முன் வைக்கிறார். இந்த நூல் விஜயை நடிகராகவும் அரசியல்வாதியாகவும் ஊடகப் பிரதியாகவும் அணுகுகிறது. ‘எம்ஜி.ஆரின் ஆட்சிக்காலம் ஓர் இருண்டகாலம்’ என்பதை நினைவுபடுத்தும் இந்த நூல், விஜயிடமும் இத்தகைய கூறுகள் உள்ளன என்று சொல்லுகிறது. ‘விஜயிடம் எந்த விவகாரம் குறித்தும் தெளிவாக வெளிப்படாத நிலைப்பாடுகளின் வழியாக, தொண்டர்கள் அவர்மீதான கற்பனையைத் தங்கள் உணர்ச்சியின் வழியாக தாங்களே கட்டமைத்துக்கொள்கின்றனர்’, என்கிறார். ‘குடிமக்களின் இறையாண்மை மக்களின் கனவாகவே இருந்துவிட்ட நிலையில், மொழி, அடையாளம், அதிகாரம் முதலானவற்றின் ஊடாக தென்னிந்தியாவில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், அதில் வெற்றிபெறுவதும் இயல்பானது’ என்று திரை ஆய்வாளர் மாதவ பிரசாத் சொல்வதைச் சுட்டிக்காட்டுகிறார். நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த விஜயை, சென்னை வரவழைத்து 24 மணிநேரம் வருமானவரித்துறை விசாரணை நடத்தியபிறகு, அவர் வெளியிட்ட செல்ஃபி அந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகமாகப் பகிரப்பட்ட படமாகும். எனவே விஜயைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. ஊழலை எதிர்ப்பதைத் தவிர அரசியல் நிலைப்பாடுகள் என்று ஒன்றில்லை என்பதை ரஜினியின் திரைப்படங்கள் முன்வைத்தன. வெகுமக்களிடம் ரஜினியின் இந்து தேசிய ஆதரவு செல்லுபடியாகவில்லை. திராவிட அரசியலை ‘அம்மா’ என்ற உருவகத்தால் நீர்த்துப்போகச் செய்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரும் அவரைப்பற்றி வெகுமக்களிடம் உருவாகியுள்ள ‘அனுதாபமான’ பிம்பத்தை விமர்சனம் செய்யாமல் திமுக இருக்கிறது என்கிறார் இல்யாஸ். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினி போன்றோர் பயணித்தவாறே விஜயின் பயணமும் உள்ளது என்கிறார் ஆசிரியர். விஜயின் பிம்பம் கட்டமைக்கப்பட்ட ஒன்று. ‘பாதுகாவலன், சகோதரன், தலைவன்’ முதலான பிம்பங்கள் ஒரே நாளில் உருவானவை அல்ல. இந்திப்படங்களில் கோபக்கார இளைஞனாக ‘விஜய்’ என்ற பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். இந்தப் பெயரையே, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் அவருக்குச் சூட்டியிருக்கக்கூடும். நடிகர் விஜயகாந்தின் படங்களில் அவரது தம்பியாக, சிறுவயது விஜயகாந்தாக நடித்தார். ஊடகங்கள் செய்தியைத் தருவதைத் தாண்டி, அவற்றை உருவாக்கவும் செய்கின்றன.டேனியல் டயான் சொல்லும் News Event என்பதை, கரூர் சம்பவங்களைக் கொண்டு விவரிக்கிறார். 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு விஜய் பொதுவெளியில் தலைகாட்டுவதைக் குறைத்துக்கொண்டார். டிஜிட்டல் வெளியில் இருந்து விலக்கிக் கொண்டார். அவரைப் பார்க்க வேண்டும் என்றால் அவருடைய திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இல்யாஸ் விஜயை, அனுதாபத்தோடு பார்க்கிறார். ‘தமிழ்ச் சமூகத்தின் கடந்த காலப் பெருமிதம், சமகால நெருக்கடி, எதிர்காலக் கனவு, பதற்றம் முதலானவற்றை வெளிப்படுத்தும் தொன்மமாக விஜய் இயங்குகிறார்’ என்கிறார் ஆசிரியர். ‘வெகுமக்களின் அன்றாடப் பிரச்சனைகளைப் பொறுப்போடு உரையாடத் தொடங்க வேண்டும். தானம் செய்வது அரசியல் செயல்பாடு அல்ல என்பதைத் தொண்டர்களுக்கு உணர்த்த வேண்டும்’ என்கிறார். இந்த நூலை ‘சீர்மைப் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. 180 பக்கம். விலை ரூ. 240. ஆழமான அணிந்துரையும் உள்ளது. (சமீபத்திய திருப்பரங்குன்றம் விஷயத்தில்கூட அவர் கருத்து சொல்லவில்லை). உதயநிதி ஸ்டாலினும் விஜயும் ‘பெரியாரின் பேரனாக’ பேசப்படுவது கண்டு மகிழ்கிறார் ஆசிரியர். இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்கிறார். இளைஞர்களையும் குடும்ப ரசிகர்களையும் ஒருங்கிணைத்த விஜயின் படங்கள், கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, மதுர போன்ற படங்களின் மூலம் கிராமங்களையும் நகரங்களையும் ஒருசேர ஈர்க்கும் கதைக்களங்களைக் கொண்டவை. நவதாராளவாத உலகத்தின் இளைஞனாக வலம் வரும் விஜய் காதல், பெண்கள், கற்பு என்ற முதலான பழமைவாத சிந்தனைகள் மூலமாக முரண்பட்ட நாயகனாகவும் உள்ளார். அவருடைய திரைப்படங்கள் அவரை கலகக்காரனாகவோ, சமூகப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வையோ முன்வைக்கவில்லை. இந்த நிலையில் திராவிட அரசியலும் இந்த நூலில் விமர்சிக்கப்படுகிறது. உதயநிதி, ஆ.ராசா, பொன்முடி ஆகியோர்மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் செயற்திட்டம் இன்றைய திமுகவில் இல்லை. இசுலாமியச் சமூகத்தினருக்கும் அந்தக் கட்சிக்கும் இடையிலான பாலமாக திமுகவில் இன்று யாரும் இல்லை. இசுலாமிய வெறுப்பை வைத்து அரசியல் செய்யும் இந்தச் சூழலில் தவெகவிற்கும் திமுகவிற்கும் இடையில் உள்ள முரண்களை நட்பு முரண்களாகக் கருத வேண்டும் என்கிறார். வெகுமக்களின் வேலை வாக்கு அளிப்பதோடு முடிவடைந்து விடுவதில்லை. சாதி ஒழிப்புக்கும் பதிலாகச் சாதி மேலாண்மை, நாயக வழிபாடு போன்றவை குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்கிறார். ர.முகமது இல்யாஸ், ‘இந்துத் தேசியம் இந்தியச் சினிமா’ என்ற காத்திரமான நூலை எழுதியவர். Read between lines என்ற இணையத்தையும் நடத்தி வருகிறார். நூலின் முதல் பக்கத்தில் மேற்கோளாக உள்ள, அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் பேசிய வசனத்தோடு, இதனை முடிக்கத் தோன்றுகிறது. “அரசியலில் நாயக வழிபாடும் பக்தியும் நிச்சயமாகச் சீரழிவுக்கான பாதையாகவும், தொடர்ந்து சர்வாதிகாரத்திற்கான பாதையாகவும் இருக்கின்றன” பிகு: விஜயின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய தஞ்சாவூர் விக்னேஷ், உயிருக்குப் போராடி மரணமடைந்த நாளன்று எழுதியது.
மேலும் வாசிக்க -
26 August
லோக் நாயக்’ ஜெயபிரகாஷ் நாராயண் – ஆர் பட்டாபிராமன்; நூலறிமுகம்: அக்களூர் இரவி
ஜெயபிரகாஷ் நாராயண் குறித்த முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் தமிழில் ஒன்றிரண்டுதான். இல்லை எனவும் கூறலாம். தமிழறிஞர், காந்தியவாதி தமிழருவி மணியன் ‘மனிதப் புனிதர் ஜெயபிரகாஷ் நாராயண்’ என்றொரு குறுநூலை ஆக்கியுள்ளார். பெரும் வாசிப்பாளரும், இந்தியச் சிந்தனை மரபு குறித்தும், மார்க்ஸ், காந்தி,…
மேலும் வாசிக்க -
Mar- 2026 -11 March
தடமற்ற வாழ்வில் தடயமற்ற வாக்குறுதிகளின் நகரதலில்… – இளையவன் சிவா
தற்கொலைகளின் துரத்தல்களில் தன்மானத்தைக் காப்பதற்காக தமது வாழ்வையே தொலைத்து நிற்கும் வெள்ளந்தி மனிதர்கள் எல்லாச் சிறுகதைகளிலும் இடம்பிடிக்கின்றனர். வாழும் வாழ்வை யாரும் குறை சொல்லாமல் யாரிடமும் கையேந்தாமல் குறையறியா மாந்தர்களாக வாழ்வதே அவர்களின் எழுதப்படாத விதியாகிறது. ஆனால் வாழ்வெனும் நதியின் போக்கு…
மேலும் வாசிக்க -
11 March
ஆழ்மனத் திசைகள் – ராஜேஷ் வைரபாண்டியன்
யாறு – சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் சுபியின் யாறு, பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு, மனித மனத்தின் ஆழங்களை, சமூக உறவுகளை, பாலியல் உணர்வுகளை விரிவாக ஆராய்கிறது. எழுத்தாளர் சுபி, பெண் கதாபாத்திரங்களின் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டு,…
மேலும் வாசிக்க -
11 March
அய்யனார் ஈடாடியின் நன்செய்க் கதைகள் – மு.அம்சம்
எழுத்தாளர் அய்யனார் ஈடாடி அவர்கள் எழுதிய ‘கிருதுமால் நன்செய்’ எனும் நூல், 16 சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. எதார்த்தமான பேச்சு வழக்கில் அமைந்த கதைகளின் போக்கும், அவற்றின் மொழிநடையும் வாசகர்களைக் கதையோடும் பாத்திரங்களோடும் பேசவும் வாழவும் செய்கின்றன. தான் கேட்ட செய்திகள்,…
மேலும் வாசிக்க -
11 March
அந்தரங்க உரையாடலின் அழைப்பு – தயாஜி
சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கவிதைப் புத்தகம் இது. எழுத்தாளர் நரனை வாசிக்க ஆரம்பித்த சமயம். அவரது சில கவிதைகளையும் சிறுகதைகளையும் வாசித்திருந்தேன். அவருடைய புத்தகங்களைத் தேடி வாங்கி வாசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் கிடைத்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.எடுத்தவுடன் இந்தத் தொகுப்பைத்தான் வாசிக்க…
மேலும் வாசிக்க -
11 March
நூல் விமர்சனம் : தாழ்வரை -கமலா முரளி
வேரல் புக்ஸ் வெளியிட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் தாழ்வரை நாவல் பற்றிய கண்ணோட்டம். (முதற்பதிப்பு ஜனவரி 2026, 168 பக்கங்கள், விலை 200ரூ ) தனியார் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் கவிதைகள்,…
மேலும் வாசிக்க -
Jan- 2025 -4 January
கனவுகளின் விளக்கம் [The interpretation of Dreams] – நூல் வாசிப்பு அனுபவம் : உதயபாலா
உளவியல் என்பது தீர்க்க முடியாத அதாவது நம்மால் விளங்கிக் கொள்ள முடியாத சிக்கலான வடிவம் என்றுதான் இப்புத்தகத்தை வாசிக்கும் வரையிலும் நினைத்திருந்தேன். ஏனென்றால் நான் இளநிலை கல்வியல் படிக்கும்போதான அனுபவம் அத்தகையது. தேர்ந்த அனுபவமும், தெளிந்த கற்றலும் ஏற்படும்வரை உளவியலை ஒரு…
மேலும் வாசிக்க -
Nov- 2024 -18 November
ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு – மதிப்புரை : பால பன்னீர்செல்வம்
அயல் சமூகங்கள் படைப்பாளிகளைக் கொண்டாடுவதன் ஒரு சாட்சியமாக விளங்குகிறது லண்டன் ஷெர்லக் ஹோம்ஸ் அருங்காட்சியகம். அந்தப் பயண அனுபவத்தை இலக்கியச் சுவையோடு வழங்குகிறது இந்த நூலின் தலைப்புக் கட்டுரை. பொறியாளர் மு இராமனாதன் தனக்கே உரிய எளிய நடை, சொற் சிக்கனம்,…
மேலும் வாசிக்க -
Nov- 2020 -9 November
தேடலின் சிறகுகள் படபடக்கும் ‘உயர்திணைப் பறவை’: கதிர்பாரதியின் கவிதை நூல் விமர்சனம் – க.ரகுநாதன்
கவிதையின் குறியீடுகளும் படிமங்களும் சாத்தியமல்லாத உலகையும் காட்சிப்படுத்தி மனக்கண் முன் நிறுத்தும் வல்லமை கொண்டவை. நம்மை அயராது கேள்விகளின் முனையில், ஆழத்தின் ஆழத்தில், உச்சியின் உச்சத்தில், விரிவின் விரிவில் வைத்திருக்க கவிதையின் ஒற்றைச் சொல்லால் முடியும். முதல் கவிதையில் தன் பயணத்தைத்…
மேலும் வாசிக்க