இணைய இதழ் 79
-
இணைய இதழ்
ரையோகான் கவிதைகள் – ஆங்கிலத்திலிருந்து தமிழில்; சமயவேல்
வசந்தத்தின் முதல் நாட்கள் வசந்தத்தின் முதல் நாட்கள்–ஆகாயம் பிரகாசமான நீலம், சூரியன் மிகப்பெரியதாகவும் வெதுவெதுப்புடனும் இருக்கிறது எல்லாமும் பச்சையாக மாறுகிறது. எனது துறவுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, நான் கிராமத்திற்கு நடந்தேன் எனது தினசரி உணவைப் பிச்சையெடுக்க. குழந்தைகள், என்னை ஆலய வாசலில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பாலைவன லாந்தர் கவிதைகள்
துற்சகுனத்து இரவில் மோதும் ஒளியின் முதற்சாயல் உடைந்து தெறித்த பொம்மையின் கை தரையில் மோதி சுக்குநூறாகச் சிதறியபோது கைவிடப்பட்ட பிள்ளைகளின் முகங்களென அறைமுழுக்கப் பரவியது கை அற்ற பொம்மையை நாடியது கைவிடப்பட்ட இன்னொரு கை. **** பைன் மரத்தின் தடித்தகிளையொன்றில் சணல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மீன் காட்டி விரல் – நூல் விமர்சனம் – மீ. யூசுப் ஜாகிர்
ஆசிரியரின் நான்காம் தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு உயரம் தொட்டவர் இந்த தொகுப்பில் மேலும் உயர்ந்து நிற்கிறார். பிடித்தவர்களின் வார்த்தைகளை வாசிக்கும்போது அவர்களோடு உரையாடுவதைப் போல இருக்கும். அப்படியாக ஒவ்வொரு கவிதையும் வாசிக்கும்போது கவிஞரோடு கலந்துரையாடுவதை போலவே இருந்தது. கவிதைகள் அனைத்தையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தாமரைபாரதி கவிதைகள்
வலியின் வண்ணங்கள் ஒளிரும் கோடி விழிகளால் நீர்மை பொங்கும் செந்திரவத்தைப் பொழிகிறது உடல் செம்மறிகள் ஒதுங்கும் மரத்தடி நிழல் போல நான் நனைந்துகொண்டிருக்க தோல் நனையா செம்மறியாக அது மட்டும் சந்தேகத்தின் கண்களைச் சுழல விடுகிறது எத்துனை சிறிய பொருளையும் விடுவதாயில்லை ஊதிப் பெருக்க ஒரு துளி போதுமே காயத்தின் அளவே கடும் வலியின் அளவுமென்கின்றன மருந்தின் தாதுக்கள் வலியின் குணமறியாத விரிசல்களில் வழிந்தோடுகிறது நாள் பட்ட காயத்தின் குருதி உணர்வை ஓர் ஓவியமாய்ப் பார்க்கும் ஐயத்தின் கண்களைத்தான் எவ்வளவு நேரம் பொறுப்பது அச்சத்தின் விழிகளுக்கு ஒரு துண்டு புலால் போதும் புலன்கள் மரிக்க தூர மலையின் வீழருவியில் நனைகிறேன் கசடைக் கழுவிச் …
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ச. சக்தி கவிதைகள்
பட்டாம்பூச்சிகளை பிடிப்பதே வேலையாகக் கொண்ட தன் மகளிடம் ஒரு செடி இருக்கின்றது அதில் நிறைய பூ இருக்கின்றது அவள் குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறாள் பூ பூத்துப் பூத்து குலுங்குகிறது படை சூழப் பறந்து வந்து அமர ஆரம்பிக்கின்றன பட்டாம்பூச்சிகள் அவள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேன்மொழி அசோக் கவிதைகள்
சாயல் நதியில் புகுந்த அந்திகாவலனைத் தன் உள்ளங்கையில் சிறை பிடிக்க எண்ணுகிறாள் என் சேட்டைக்காரச் சிறுமி ரெட்டைச் ஜடை நனையாமலும் முழுக்கால் பாவாடையை அரைக்காலுக்காக்கி மெல்ல மெல்ல இறங்கி ஜடையிலிருந்து நீர் சொட்டச் சொட்ட கை நிரம்ப நதி நீரை அள்ளுகிறாள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
லஷ்மி கவிதைகள்
குரல்கள் பெரும் சனங்களின் வதைகள் நடக்கும் பொழுதெல்லாம் உங்கள் குரல்கள் என்னை அலைகழித்துக்கொண்டேயிருக்கின்றன தலையீடுகளற்ற பெருவெளியில் என் குரல் உயர்த்த விரும்புகின்றேன் என்னால் இயலவில்லை குரலெழுப்ப முனையும் நேரங்களில் என் முதுகெலும்புகள் முறிந்துவிடும் சத்தம் கேட்கின்றது குரலை சில கரங்கள் அழுத்திப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திருமூ கவிதைகள்
தீ ‘உன் கொள்கையையும் கோட்பாட்டையும் புரட்சியையும் புளிசோத்தையும் தூக்கிக் குப்பையில் போடு’ என்றார்கள் போன இடங்களிலெல்லாம் தூக்கிப் போட்டேன் அது பற்றித் திபுதிபுவெனத் தீயாய் எரிகிறது. **** அரசியல் போலி எனக்கு எந்தக் கொள்கையும் கோட்பாடும் கிடையாது ஆனால், ஒன்றே ஒன்றுமட்டும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அந்நியநிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 23
என்னை நியூ யார்க் நகரத்துக்கு அழைத்துச் சென்ற பால் கிளிஃபர்ட் செப்டம்பர் 11 தாக்குதல் சமயத்தில் மீட்புப் பணிகளில் சேவையாற்றியவர். ஆக உலக வர்த்தக மையம் எங்கள் பயணத்தின் மையமாக இருந்தது. புதிதாக எழுப்பப்பட்டிருக்கும் வர்த்தக மையம் ஒற்றை கோபுரமாக நிற்கிறது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திட்டம் எண் 2.0 – தயாஜி
இப்போது என்ன மணி இருக்கும்?. தெரியவில்லை. இன்று என்ன கிழமை தெரியவில்லை?. என் பெயர் என்ன?. நினைவில் இல்லை. ஆமாம். தெரியவில்லை என்பதும் நினைவில் இல்லை என்பதும் ஒன்றல்ல. உண்மையில் எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. ஏதோ ஓர் இராட்ச இரப்பர்…
மேலும் வாசிக்க