வாசகசாலை
-
இணைய இதழ்
பெரியவர் – தாமரை பாரதி
வாழை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த தோட்டத்தில் சற்றைக்கு முன்னர் பெய்த மழையீரத்தில் தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. வாழையிலைகளில் மழை நீர் வழிந்து கொண்டிருந்தது. சில துளிகள் இலையுடன் ஒட்டியும் ஒட்டாமலும் மினுக்கிக்கொண்டிருந்தன. மழைக்குப் பிறகான மாலை நேரத்தில் காகமொன்று கரைந்து கொண்டிருந்தது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் (தமிழில்: க.மோகனரங்கன்)
நான் ஒரு தவறு செய்தேன் அலமாரியின் மேல்பகுதியை ஆராய்ந்துகொண்டிருந்தவன் ஒரு ஜோடி நீல நிற உள்ளாடைகளை வெளியே எடுத்து அவளிடம் காட்டி, “இவை உன்னுடையதா?” என்று வினவினேன். அவள் பார்த்துவிட்டு, “இல்லை, அவை ஒரு நாய்க்குச் சொந்தமானவை.” என்றவள் அதன் பிறகு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
துறைமுகம் – கமலதேவி
பாரிமுனையில் இறங்கி ட்ராம்வேயின் இந்தப்புறமே நடந்தேன். சத்தமில்லாது பூனை போல ட்ராம்வண்டி நகர்ந்து சென்றது. காலையிலையே ஜானகியிடம் கோபத்தைக் காட்டியதை நினைத்தால் சஞ்சலமாக இருக்கிறது. பெர்னாலியின் எண்கள் காணாமற் போனதற்கு ஜானகி என்ன பண்ணுவாள்? ஆனால் அவள்தான் வாங்கிக் கட்டிக்கொள்கிறாள். வேறு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ப்பா… ப்பா.. ப்பா… பாம்பூஊஊ! – பாலகணேஷ்
பாம்பு என்றால் என்னவெல்லாம் தோன்றும் உங்களுக்கு.? அதுபோர் கொடிய விஷமுள்ள பிராணி. அது கொத்தினால் விஷம் மனிதர்களின் உடலில் இன்ஜெக்ட் செய்யப்பட்டு அவர்கள் உயிர் துறப்பார்கள். சிலர் பிழைத்துக் கொள்வதுமுண்டு. அது அந்தந்தப் பாம்பின் விஷத்தின் தீவிரத்தையும், உடனடியாக மருத்துவம் எடுத்துக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கனவின் வழியாக கண்டுகொள்ளும் தருணம் – உயிர்க்காடு குறுநாவலை முன்வைத்து – ‘முத்துச்சிதறல்’ முத்துகுமார்
இக்குறுநாவலை படித்தவுடன் முதலில் தோன்றியது இது நிகழ்வுகளின் பிரதியா அல்லது பிரதிபலிப்பா என்ற கேள்விதான். பெரும்பாலும் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம் அவை வாசகர்களை ஊடுருவ முடியாத படைப்பாக இருக்கலாம். இது படைப்பாளியின் போதாமையால் மட்டும் நிகழ்வதல்ல, வாசகர் அப்படைப்புக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தமிழ் சினிமாவும் மற்போரும் – அபுல் கலாம் ஆசாத்
1966ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஏவிஎம் தயாரிப்பில் ஏம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா’ வெளியானது. எம்.ஜி.ஆர். படங்களில் எம்.ஜி.ஆரின் ரசிகன் எதிர்பார்க்கும் எதுவும் இல்லாமல் நகைச்சுவையும் காதலுமாக அன்பே வாவின் கதையமைப்பு இருந்தது. ஆனால், அதிலும் ஒரு சண்டைக்காட்சி இடம்பெற்றது. ஆந்திராவின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நெகிழன் கவிதைகள்
அம்மா வீட்டிலிருக்கும் மனைவி போன் செய்து கேட்டாள் என் செல்லப் பூனை என்ன பண்ணுகிறது சுவரெல்லாம் ஆத்திரத்தைக் கீறலாக வரைந்தும் ஆறாமல் தன் நகங்களைத் தானே உடைத்துக்கொள்ளுமளவுக்கு பெருங் கோபத்தில் இருக்கிறது. *** துயரலகு இரவுப் பறவை என் வீட்டின் மூலையில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குற்ற உணர்வு துவங்கி நிபந்தனையற்று சரணடைவது வரை – ‘குட் நைட்’ திரைப்பட விமர்சனம் – பிரியதர்ஷினி ர
நம் மனது எவ்வளவு தூரம் பயணித்தாலும் இறுதியிலோ பயணத்தின் இடையிலோ அல்லது அவ்வப்பொழுதோ எதார்த்தங்களையும் உறவுகளையும் சண்டைகளையும் தேடும் இல்லையெனில் அதன் மீதான ஒரு ஏக்கம் உருவாகும். ‘Into the wild’ எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் கதாநாயகன் பல மைல் தூரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ச.ஆனந்தகுமார் கவிதைகள்
படைத்தல் வெவ்வேறு வண்ணமடித்த மூன்று புலிகள் தங்களில் எவர் உயர்ந்தவரென காத்திருந்தவரை கேட்டன எல்லாமே புலிகள்தான் என்று கடவுள் எவ்வளவோ சொல்லியும் நம்பியதாக தெரியவில்லை அதற்குள் வெவ்வேறு வண்ணக்கலவைகளோடும் வேட்டைக் கண்களுடனும் இன்னும் கொஞ்சம் புலிகள் சேர்ந்து மூன்று உட்பிரிவுகளாக மாறின…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தீஸிஸ் – ஜார்ஜ் ஜோசப்
1 துறைக்குள் நுழைந்ததிலிருந்து மனோகர் படு உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருந்தார். முழுக்கை வெள்ளைச் சட்டையை ஜீன் பேண்ட்டில் இன் செய்து, எண்ணெய் பூசி தலை வாரியவராய் பளிச்சென்றிருந்தார். துறைத்தலைவர் தன் ஆசனத்தில் அமர்ந்ததும் ஸ்வீட் பாக்ஸை எடுத்து நீட்டினார். ‘வைவா நடக்கும்போது…
மேலும் வாசிக்க