இணைய இதழ் 94
-
May- 2024 -1 May
சமயவேல் கவிதைகள்
இலைமுகம் வெள்ளென வெளுக்கிறது தூய அதிகாலை.ஈர இதயத்தின் பனித்துளிகள்புற்களிலும்இலைகளிலும் பூக்களிலும்;எங்கெங்கும் நீர் தெளித்துக் கோலமிட்ட தெருக்கள்;காலியான,அனைத்தும் நிரம்பித் ததும்பும்ஒரு தூய சாலை;ஒரு விநோத இலையாகிறதுஎன் முகம்;நிச்சயம்பனித்துளிகள் அரும்பக்கூடும். ***** டைஹோ மால் நான் எங்கே இருக்கிறேன்?எங்கேயோ இருக்கிறேன் என்று கூற வேண்டியதில்லை.…
மேலும் வாசிக்க -
1 May
பொருண்மை – மணிராமு
வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் இருக்கைப் பட்டையை அணிகிறார்களோ இல்லையோ முதல் வேலையாக வானொலியின் காதைப் பிடித்து திருகிவிடுபவர்கள் அநேகர். அவர்களில் பிரபாகரனும் ஒருவன். மனசுக்குள் எத்தனை குழப்பங்கள் குத்தவைத்து உட்கார்ந்திருந்தாலும் தன்னைச் சுற்றி ஓசையெழுப்பிக் குழப்பங்களை மறந்துவிடும் மனநிலையென்பது மாயநிலையை ஒத்தது. …
மேலும் வாசிக்க -
1 May
கல்யாண்ஜியின், ‘மேலும் கீழும் பறந்தபடி’ – கவிதைத் தொகுப்பு அறிமுகம் – ப.தாணப்பன்
நாம் பெரும்பாலும் சாமானியம் என்று எண்ணுவதும் அனிச்சையாகவோ, பழக்கமாகவோ, கவனிக்காமலோ, ரசிக்காமலோ, பாராமல் கடக்கும் காட்சிகளை, நிகழ்வுகளை, சின்னச் சின்ன அழகுகளை, மிகச்சிறிய நுட்பங்களை, ஒரு ஓவியனின் கண் கொண்டு பார்ப்பதற்கும் அவதானிப்பதற்குமான விழிப்பையும் தருவது கல்யாண்ஜியின் கவிதைகள் என்று அவரை…
மேலும் வாசிக்க -
1 May
பாப் பீக்ரி கவிதைகள் – தமிழில்: ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி
நானா நார்சிசஸ்? நான் மரங்களுக்கு மத்தியில் எழுகையில், சூரிய வெளிச்சமோமண்ணிலிருந்து துரிதமான உதயத்திற்கானஉற்சாகத்தில் குலுங்குகிறதுநீராவிப் பனிமூட்டங்களோமலைமேலுள்ள அலங்கோலமானமாயபூதங்களைப் போல மிதக்கின்றனபின்னிப் படர்ந்த புதிய இலைகளோ,காட்டில் வீசும் காற்றுக்கு சிறு சிறு புள்ளிகளாய்பச்சை வண்ணமிடுகின்றனஎனது நினைவுகள் முன்பும் விருப்பங்கள் முன்பும்தொங்க விடப்பட்டவாறுஒவ்வொரு வெளிசுவாசத்திலும்,நான்…
மேலும் வாசிக்க -
1 May
சாமி கிரிஷ் கவிதைகள்
சமச்சீர் பயணம் சட்டை போன்ற ஒன்றைசட்டையென அணிந்திருக்கிறார்துண்டு போன்ற ஒன்றைதுண்டெனப் போட்டிருக்கிறார்முழுக்கால் சட்டை ஒன்றையும்அப்படியே உடுத்தியிருக்கிறார்அவரது அழுக்குகள் குறித்துஉங்கள் குரல்வளையில்நெளியும் வார்த்தைகளைஅங்கேயே அடக்கம் செய்துவிடவும்பட்டுவிடாமல்ஒதுங்கிக்கொள்ளும் நீங்கள்நெரிசல்மிகு நகரப் பேருந்தின் குலுங்கலில்தகிக்கும் வெக்கையில்சிலையென உறைந்து நிற்பதற்குமுயற்சி செய்யலாம்வேறு ஒன்றும் முடியாதுஅவரிடமும் இருக்கிறதுபேருந்துக் கட்டணமானஇருபது…
மேலும் வாசிக்க -
1 May
மீள்வு – கா. சிவா
மணி பதினொன்று ஆனபோதும் ஈஸ்வரிக்கு தூக்கம் வரவில்லை. கட்டிலில் வினோத் தூங்கிக்கொண்டிருக்க அவன் மார்பின் மேல் தலைவைத்து ரக்சன் தூங்கிக் கொண்டிருந்தான். இவர்கள் இப்படி ஆழ்ந்து தூங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஈஸ்வரி கதவைத் திறந்து வெளியே பார்த்தாள். பக்கத்து வீட்டிற்கு…
மேலும் வாசிக்க -
1 May
ஊற்றுக்கண் – ந.சிவநேசன்
மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. என்னமோ தப்பாகவே படுகிறது அவனுக்கு. இதற்கு முன்பும் நிறைய தடவை இப்படித் தோன்றியிருக்கிறது. தனக்கு மட்டுமே இப்படியெல்லாம் நடப்பதாகவும் தான் மட்டுமே தரித்திரம் சூழ வாழ்கிறோமென்றும் ஒரு எண்ணம் அடிக்கடி வந்து போகிறது. யாரிடமாவது சொல்லி…
மேலும் வாசிக்க -
1 May
கம்ப்யூட்டர் கரப்பான்பூச்சி – சிபி சரவணன்
“வானம் ஏன் இவ்வளவு பச்சையாக இருக்கிறது?’ வானம் எப்படி பச்சையாக இருக்குமென உங்களுக்கு சந்தேகம் வருவதில் தவறில்லை. இளம் வயதிலேயே எனது கண் வெளிச்சத்தை தாங்கி கொள்ளும் சக்தியை இழந்து விட்டது. அப்போதிருந்தே நான் பல வகையான கண்ணாடிகளை அணிந்து கொண்டிருக்கிறேன்.…
மேலும் வாசிக்க