கவிதைகள்
-
Oct- 2019 -15 October
கவிதைகள்-ரேவா
1. நீள்வரிசை படி திறக்கக் காத்திருக்கும் சொல்லின் தயவுவேண்டி நிற்கிறது நிதானம் அசைவுகளற்ற நகர்வை ஈடுசெய்கிற மனக் குதிரையின் வேகம் சிந்தனையின் நாற்திசைக்கும் கட்டுப்பட மறுக்கிறது வலுசேர்க்கும் பிடி இறுகிப் பின் தளர்த்தும் யோசனையின் ஒற்றை மையம் குவிக்கிற கேள்விகள் நமக்குச்…
மேலும் வாசிக்க -
15 October
கவிதைகள் – சாரு
இளைப்பாறிய கூட்டை விட்டு பறந்தோடியது அப்பறவை பசித்திருக்கும் புழுவிற்கு உணவு தயாராகி விட்டது… முகூர்த்தமில்லா நாளொன்றில் அவன் மாலைகள் தொடுக்கிறான் வார செலவிற்கான வரவின் களிப்பில்.. தீபாவளியில் தீண்டப்படாத பட்டாசொன்று மோட்சம் அடைய தயாராக, மளிகைக் கடைக்காரன் பழைய ஊதுபத்திகளைப் பாதிவிலைக்கு…
மேலும் வாசிக்க -
15 October
கவிதைகள் -கமலதேவி
1.மேய்ப்பனின் புல்லாங்குழல் இசை நான் உன் லிபியில்லா மொழியென காற்றில் பரவுகிறேன். ஒரு மந்திரக்கோல் சுழற்றலாக யுகங்கள் மாறிய மேடையில் நீ எங்கே? 2.மேய்ப்பன் கையிலிருக்கும் ஆட்டுக்குட்டி எத்தனை சிலுவைகள் பிதாவே! முதுகில் தலையில் கரங்களில் வயிற்றில் கால்களில்…
மேலும் வாசிக்க -
15 October
கவிதை- நரன்
~ பிறழ்வு ~ —————– 1) ~ யாருடைய வயதை எண்ணும் போது 33 க்கு பிறகு 7 ஆகவும் பிறகு 54 வயதாகவும் அதன்பிறகு 13 ஆகவும் மாறுகிறதோ ~ ~யாரின் திசையை நீங்கள் கிழக்கின் இடத்தில் தெற்கை; வடக்கின்…
மேலும் வாசிக்க -
1 October
கவிதை- தமிழ் உதயா
உயிர் நழுவுகிறதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா இதோ தூக்குமேடையில் உயிரை நேசித்தவன் புன்னகையோடு கிடத்தப்பட்டிருக்கிறான் மற்றெந்த நாளையும் போலல்ல இந்நாள் கணக்குத் தீர்க்க முடியாத கண்களில் அப்படி ஒரு கனல் கிழிக்கப்படாத நாட்காட்டி வன்மத்தோடு படபடக்கிறது சோளப்பொத்தி விரிந்து ஒலிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா அப்போது…
மேலும் வாசிக்க -
1 October
கவிதைகள்- கீதா மதிவாணன்
தனிமைக்குள் தாழிட்டமர்ந்து வெறுமையின் கரங்களில் ஒப்புவித்து இயலாமை கசியும் இருவிழி துடைத்து துயிலா நினைவுகளைத் துகிலுரித்து விமோசனமற்ற சாபங்களோடு சல்லாபித்து துக்கித்துத் துவண்டு வெளியேறியதும் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் உதட்டு வளைவிலிருக்கிறது வாகாய் வாழ்வு நகர்த்தும் சூட்சுமம். ********** கற்பனை உலையில் வெந்த…
மேலும் வாசிக்க -
1 October
கவிதைகள்- மௌனன் யாத்ரிகா
கபிலன் முதல் பெருங்கடுங்கோ வரை 1.பன்றிகள் மூர்க்கத்தோடு மோதிக்கொண்டபோது உருண்டு சமவெளிக்கு வந்த பாறையில் காடு பெருகுவதற்கான முதல் செடி இருந்தது மலையிலிருந்து நதி, காடு, விலங்குகள் இறங்கி வந்த காட்சிகளை புலவர்கள் எழுதினர் கபிலன் அதில் பேர் போனவன். …
மேலும் வாசிக்க -
1 October
கவிதைகள்- பச்சோந்தி
கடைசிப் பச்சயம் தேசியக்கொடியில் 1.யானைக்கால் கற்தூண்களில் உடைந்த ஓடுகளால் எஞ்சியிருக்கிறது சென்னை ஆட்டுத்தொட்டி மேற்கூரை ஓட்டைகளின் வழியே உற்றுநோக்கிக் கரையும் காகங்கள் கால்கள் கட்டப்பட்ட மாட்டின் வால் பின்னோக்கி இழுக்கப்படும் கொம்புகளும் கழுத்து நரம்பை அறுத்த கத்தி ரத்தம் சொட்டச் சொட்ட…
மேலும் வாசிக்க -
1 October
கவிதைகள்- ம.இல.நடராசன்
தவிப்பு ஆரத்தழுவும் போதெல்லாம் பிரிவைப் பற்றியே பேசுகிறாய். முத்தங்கள் இடுகையில் இதுவே கடைசியாக இருக்குமென்று சற்று அதிகமாகவே இதழோடு இதழ் உறைந்து கிடக்கிறாய். நடக்கின்ற பொழுதுகளில் கைகளைக் கோர்த்து இன்னும் இறுக்கமாக அணைத்து நடக்கிறாய். எப்போதும் யாரோ ஒருவர் என்னை உன்னிடமிருந்து…
மேலும் வாசிக்க -
1 October
கவிதை- இரா.கவியரசு
குருதி மணக்கும் நிலம் நிலத்தின் வாசனையை ரயில் ஜன்னல் வழியாக முகர விரும்புபவர்களுக்காக குட்டி குட்டியாகக் கிழித்த அம்மாவின் புடவையில் மண்ணைக் கட்டி விற்பேன். நாற்றமடிக்கிறது என்று தூக்கி வீசாமல் இருப்பதற்காக மல்லிகை மொட்டுகளை நசுக்கி புதைத்து வைத்திருப்பேன். மண்ணைக் கிளறி…
மேலும் வாசிக்க