கவிதைகள்

  • May- 2019 -
    6 May

    கேசாதி பாதம்

    கேசாதி பாதம் வரை வலிகளே நிரம்பியிருக்கிறது எந்த வலியை முதலில் பாடப்போகிறீர்கள் ? வலியின்குருதி உறிஞ்சும் தூய நாப்கின் உங்களை விடவும் நம்பகமானதாக இருக்கிறது. முதலில் தலையை தனியாகக் கொடுக்கிறேன் நீங்கள் தைலம் பூசும் நெற்றியின் ஆழத்தினுள்ளிருந்து உதைக்கும் கால்கள் யாருடையது?…

    மேலும் வாசிக்க
  • 6 May
    Lavanya sundararajan

    லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்

    நொடிக்கும் நொடிக்கும் இடையே ஒரு நொடிக்கும் அடுத்த நொடிக்கும் இடையில் நடப்பது எதுவும் உண்டா? மைக்ரான் உலகம் உருவானது அதில் பிரவேசிக்க நுண்ணுயிர்கள் தோன்றியது மில்லி மீட்டர் தூரத்தை மில்லி செகண்டுகள் கடந்தன பல கோடி இடையீடுகளை என் கைபேசி ராட்சன்…

    மேலும் வாசிக்க
  • Apr- 2019 -
    5 April

    சம்ஹாரம்

    மனமிருந்தது தளிர் இலையாய் இதம் தரும் வெம்மை நோக்கி. வார்த்தைகளில்தான் எல்லாமிருக்கிறது எவ்விதக் கூச்சமுமற்று அந்தரங்க மண்டலத்துள் சிநேகிதத்தின் பெயரால் கம்பளிப் பூச்சுகளாய். நம்பிக்கைகளைச் சிதைக்கும் துரோகத்தின் கத்திகள் எப்போதுமிருந்ததில்லை என்னிடம். அன்பின் அனர்த்தக் கற்பிதங்களால் கொதிக்கும் உலோகக்குழம்பாய் வழிகிறது. சுரம்பாவிய…

    மேலும் வாசிக்க
  • 5 April

    தேங்காய் கிட்டங்கி

    எச்சிலில் முக்கியுருவிய நூலாக நிற்கும் கடப்பாரை கூர்மைகளினால் பிரசவம் பார்க்கின்றன நிறைய உள்ளங்கைகள். நாளுக்கு 1000 பார்த்தால் 500/- கூலி. ரேகைகள் மங்கிய கருத்தயிலைகளின் முதுமை சாயல் கைகளுக்கு. பாறைகளை உரித்து கொத்தான கைரேகை நார்களோடு பிரசவிக்கப்படும் நீர் உருண்டைப் பிள்ளைகளுக்கு கங்குநார்; மொட்டைக்காய்;…

    மேலும் வாசிக்க
  • 5 April

    கரைகாணா இருள்வெளி

    அகாத வெளியில் அற்புதங்கள் நிகழ்த்தவியலா யட்சிணிகளின் அலறல்களில் விரகம் கொள்ளும் வாயூரிஸ வியாதியஸ்தர்கள் நிறைந்த நாடிது…   தண்ணொளி வீசும் முன்னே வெண்ணிலவின் தளிருடலை புண்ணாக்கி மோகம் கொள்ளும் ஓநாய்களின் கூட்டமிது…   காடிழந்த வேழத்தின் கதறல்களையும் கண்ணீரினையும்  துடைக்காது அதன்…

    மேலும் வாசிக்க
  • 5 April

    விலா எலும்புகள் 

    அவனிடமிருந்து உடைத்தெடுத்த விலா எலும்புகளின் வயிற்றில் பிரபஞ்சம் ஊறுவதைப் பார்த்தவுடன் வானத்துப் புத்தகத்தில் ஏதோ எழுதுவதற்காக சென்றுவிட்டார் கடவுள் விலா எலும்புகளின் வயிற்றை முதுகெலும்பை உடைத்துக் குத்தினான் வழிய ஆரம்பித்த கடலில் நிறைந்து பெருகின மீன்குஞ்சுகள் முளைத்த குரலை கழுத்து எலும்புகளால்…

    மேலும் வாசிக்க
  • 5 April

    நீங்கள் கேட்டவை

    இன்னமும் புன்னகையோடே இருக்கிறாள் அந்தப்புன்னகை தெய்வாம்சத்தின் குறியீடு.   அவள் சுருக்குபையில் கல்போட்டு எதுகேட்டாலும் கிடைத்துவிடும் அது சக்திமான் ஸ்டிக்கரோ நீல கலர் சர்ட்டோ இனிப்பு-புளிப்பு மிட்டாயோ?? எது கேட்டாலும் கிடைத்துவிடும்.   கல் எதுக்கு பாட்டி என்றால் மறக்காம இருக்கய்யா…

    மேலும் வாசிக்க
  • 5 April

    அவள் பூக்களின் சிறுகுறிப்பு

    வெற்று விரல்களின் விசும்பல்கள்  மயக்கும் மாலை பொழுதுக்கு முன்பே பகலை விரட்டி விடும் மாயம் எப்போதாவது கதவாகும்.   கனவுள்ள பிள்ளைக்கு கண் வழியே தூக்கம் வரும் என்ற கூற்றுக்கு குரல் மின்விசிறி மட்டும் தான்.   செய்வன எதுவெல்லாமோ செய்தது தான்…

    மேலும் வாசிக்க
  • Mar- 2019 -
    21 March

    மொரமக்காரன்

    கம்பங்காட்டுக்குள்ள கதிரருக்கும் வேளயில கரவேட்டிக்கார மச்சான் கால்நடயாப் போனீரு   உளுந்தங்காட்டு வழி ஒழவுசெய்யும் வேளயில ஊசித்தூரல் போட கொடப்புடிச்சு நடந்தீரு   நீரு போனபோக்குல உதுத்துவிட்ட கள்ளப்பார்வ மனச உலுக்குதைய்யா பொடம்போட்டு அடிக்குதைய்யா   அச்சு வெல்லத்த எறும்பு மொச்சிருக்க…

    மேலும் வாசிக்க
  • 20 March

    துளி விஷம்

    மயிரின் வேர்க்காலைப் போல ஒரு மெல்லிய அச்சம் ஒரு பருக்கை உட்சென்றால் தீர்ந்துவிடுதலைப் போல ஒரு மெல்லிய பசி செவிலி விரல் நுனியில் கூர்மை கொண்டு தொட்டும் தொடாமல் எடுப்பதைப் போல ஒரு மெல்லிய வலி நோயுற்ற பெண்ணின் எஞ்சிய வனப்பு…

    மேலும் வாசிக்க
Back to top button