கவிதைகள்

  • Jul- 2019 -
    14 July

    நீயும் நானும் 

    நீயும் நானும்  மலையுச்சி.. மரகதப் பச்சை உரசும் மேகம் சில்லிடும் காற்று.. நீள் காம்பில் நிரவும் பன்னீர்ப்பூ.. நட்சத்திர நெருடல்களில் பிசுபிசுக்கும் தேன் துளிகள்.. ஊறி மிதக்கும் சிற்றெறும்புகளாய் வலசை திரும்பும் பறவைகள்.. ஒரு கோப்பைத் தேநீர் கூடவே நீ.!  …

    மேலும் வாசிக்க
  • Jun- 2019 -
    27 June

    தீபச்செல்வன் கவிதைகள்

    ஒளித்து வைக்கப்பட்ட நாடு என் கிராமத்தின் பெயரை திரித்தனர் மிக மிக எளிதாக என் தேசத்தின் பெயரை ஒளிக்க முடியுமென நினைத்தனர் என் நாட்டின் அடையாளமோ பாறைகளைப் போல உறுதியானது எனது பெயரின் இறுதி எழுத்தை மாற்றி என்னை அவர்களாக்க முடியுமென…

    மேலும் வாசிக்க
  • 27 June

    ந.பெரியசாமி கவிதைகள்

    1. நட்சத்திர மலர் வான் உதிர்த்த ஒற்றைச் சிரிப்பை விழுங்கிய அதிசய மலரை அதிகாலையில் சூடி அலுவலகம் சென்றாள். வழக்கத்திற்கு மாறாக எல்லோரும் மகிழ்ந்தோதிக் கொண்டிருந்தனர். என்னதான் ஆயிற்று குழம்பியபடி வீடு திரும்பியவள் ஓய்வுகொள்ள உடை களைத்து வீசி எறிய மலரை…

    மேலும் வாசிக்க
  • 27 June

    ஒரு டீ ஸ்பூன் பெருங்கடல்

    வசதிக்கேற்ப காதலையும் காமத்தையும் மாறிக்கொண்டேயிருக்க ஒரு டீஸ் பூன் அளவிற்கா இருந்துவிடுகிறது தீர்ந்துபோவதும் தீரவே தீராத ஒரு பெருமழையும்தானே இந்த காதலும் காமமும் உங்களிடம் தீர்ந்துபோகும் பெருங்கடல் உள்ளது என்னிடம் தீரவே தீராத ஒரு துளி இருக்கிறது.

    மேலும் வாசிக்க
  • 27 June

    வலிகள் இசைக்கும் பாடல்

    மனமுறிவு என்றவுடனே பெண்களை வழிபாட்டுக்கூடத்துக்கும் ஆண்களை ஜிம்முக்கும் அனுப்புகிறார்கள். சொன்னால் நம்புங்கள் அவள் அழுவது தெய்வதிற்காக அவன் அலறுவது தசைகளின் வலியால். உப்பின் கரிப்பில் மனம் கரைய சமூகத்தின் நுண்ணறிவு வியக்க வைக்கிறது. பெண்களில்லா ஜிம்மிலும் தனி ஆண் வராத கோவிலிலும்…

    மேலும் வாசிக்க
  • 27 June

    உயிருக்கு சேதாரமில்லை

    மற்ற வண்டிகளை விட லாரிகளுக்குத்தான் எத்தனையெத்தனை அலங்காரங்கள் ஜோடனை முகங்கள். அதன் சதுரக் கண்களில் வழிந்தோடும் மழையை உடைந்த வெள்ளை வளையலின் அரைவடிவில் துடைக்கின்றன ‘வைப்பர்’ கரங்கள். ஒரு பின்னிரவு பரதேசத்தில் கரங்கள் சோர்ந்திட கண்களில் அருவியிரண்டு அடர்த்தியாக கொட்டியது. தேசிய…

    மேலும் வாசிக்க
  • 6 June

    நீர்மலர்

    பனிப்பிரதேசமொன்றில் மேகங்கள் வழிந்தோடிய கரும்பாறையொன்றை அணைத்தபடி நெடுநேரமாய் நிற்கிறான். தளர்ந்து நிற்கும் அவன் தனிமைக்குள் மெதுவாகத் தன் முதுகின் ஈரத்தால் ஊடுறுவுகிறது கரங்களற்ற பாறை. மீள்வதற்கு வழியற்ற கார்கால இரவுகளில் மெல்ல இறங்கும் ஈரம் பிரிதுயர் நிறைந்திருக்கும் அவன் வீட்டுச் சுவர்களில்…

    மேலும் வாசிக்க
  • 6 June

    அவளுக்கு

    இருபதுகளின் கடைசியில் முதல்பிரசவம் குழந்தையின் தலைகொஞ்சம் பெரிதென கிழித்த இடத்தில் ஐந்தாறு தையல்கள் அதன் பெயர் சுகப்பிரசவம் . பின் அசந்தர்ப்பத்தில் உயிர்த்ததென அபார்ஷன் ஒருமுறை முதிர்ந்த முப்பதுகளில் .. “ரிஸ்க் வேண்டாம் சிசேரியன் நல்லது” அடிவயிற்றின் குறுக்கில் ஆயிரங்கால் பூரானென…

    மேலும் வாசிக்க
  • 6 June

    மிகச்சாதாரணமான நாளுக்காக ஏங்குபவர்கள்

    துளி மேகமற்ற கண்ணாடிவானம் மிதக்கின்ற நகரின் வேலைநாள். திருவாளர் xyz அவர்கள் வேறொருவரின் அலுவலக அறையில் காத்திருக்கிறார். ஆம்,அதே xyz தான். நகரில் சிறிய விசயங்களின் கடவுளான xyz க்கு இந்த காத்திருப்பு எரிச்சலாய் மாறத்துவங்கி இருபது நிமிடம் ஆகிறது. Xyz…

    மேலும் வாசிக்க
  • 6 June

    விசாரணை 

    சொல் உன் பெயர் என்ன ? ” சொற்கள் ” புரியும் மொழியில் பதிலளி தப்பிக்கலாம் ! ” கபாலத்திலிருந்து வெளியேறும் ஒளிப்பிழம்பில் மொழி இல்லை மின்னல்கள் தெறிக்கின்றன ” திமிராக நிற்காதே மண்டியிடு ! ” குரல்வளை தெரிகிறது குரல்…

    மேலும் வாசிக்க
Back to top button