கவிதைகள்
-
Jun- 2019 -6 June
நிராகரிக்கும் முன்முடிவு
என் பிணத்திலிருந்து ஆதார் எண்ணை அழித்துக்கொண்டிருக்கிறேன் என் உடலெங்கும் அப்பியிருக்கும் காங்கீரிட் சாயலை கழுவிக்கொண்டிருக்கிறேன். என் கையிலிருக்கும் சொற்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடைத்துக்கொண்டிருக்கிறேன். ஏன் என்னால் சிலவற்றை கைவிட முடியவில்லை என் ஒழுங்குகளெல்லாம் என் அந்தரங்கமெல்லாம் என் தண்டனைகளெல்லாம் சில…
மேலும் வாசிக்க -
May- 2019 -6 May
ஏகாந்த உற்சவம்
முதிரும் இந்த இரவை தொடர்ந்து முன்னேறும் புலர்வுக்கு சற்றும் குறைவானதல்ல உனது நினைவு. மழையுண்ட பாதையில் உனது திருபாதத் தடத்தில் பச்சயம் பூத்திருந்தது. அதிலிருந்து பெருகிய வாசனை உன்னை உலகறியச்செய்தது. நளினம் மிளிர, தொடங்கிய அந்தியில் அலைசூழும் ஆழியைப்போல் நீ வருவதும்…
மேலும் வாசிக்க -
6 May
குளிர்
வானத்து மின்சாரக் கம்பிகள் நாகமென கட்டிப் பிணைகையில் தெருவில் கரண்ட் இருக்காது. தகவல் தந்தும் கண்டுகொள்ளாத வயர்மேனுக்கு முழங்காலுக்கு கீழே எக்காயங்களுமில்லை. இருந்தாலும், ‘காந்துது, எரியுதுனு’ அழுகிறாறென்று EB ஆபிசில் எழுதிப் போட்டிருந்தார்கள். கோடையில் சீமெண்ணை ஊற்றி தன்னை வேகவைத்த மாரியக்காள்…
மேலும் வாசிக்க -
6 May
முரண்களே!!!
குடும்பப் பணிவிடைகளுக்குப் பின் நண்பகலில் கழிப்பது காலைக்கடன் மிஞ்சியது வீணாகக்கூடாதென விழுங்குவதெல்லாம் உணவு கட்டிக்கொண்டவனிடமும் கொட்டிவிடா காமத்திற்குப் பெயர் கற்பு. படித்தவளின் சுயசிந்தையின்மையே அடக்கம். சிலிர்த்து சிலகாகிக்கும் மென்உணர்வு, வன்மையாய் உடலெங்கும் விரவுகையில் கர்ப்பிணியின் வயிற்றில் படரும் வெப்பக்கரத்தில் விரவும் குளிர்ச்சி…
மேலும் வாசிக்க -
6 May
சிறு திருக்குளம் பேசியபோது
இருள் மிதக்கும் பரப்புக்கடியிலிருந்து வாலை உயரத்தூக்கி குனிந்திறங்கிய மீனின் அலட்சிய “ஹும்” எனக்கோ மேற்படிப் பூனைக்கோ. படிகளுக்கப்பால் நின்ற அரசமரம் இலைவழிஉறவாடலில் அவ்வப்போது கேட்ட தட் தட் பகைதீர்த்த குறுவாள் ஒலி. படித்துறைக்கு மேலிருந்து இறங்கி இறங்கி ஏறுகிறது தூரத்து விளக்கொளி…
மேலும் வாசிக்க -
6 May
கேசாதி பாதம்
கேசாதி பாதம் வரை வலிகளே நிரம்பியிருக்கிறது எந்த வலியை முதலில் பாடப்போகிறீர்கள் ? வலியின்குருதி உறிஞ்சும் தூய நாப்கின் உங்களை விடவும் நம்பகமானதாக இருக்கிறது. முதலில் தலையை தனியாகக் கொடுக்கிறேன் நீங்கள் தைலம் பூசும் நெற்றியின் ஆழத்தினுள்ளிருந்து உதைக்கும் கால்கள் யாருடையது?…
மேலும் வாசிக்க -
6 May
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்
நொடிக்கும் நொடிக்கும் இடையே ஒரு நொடிக்கும் அடுத்த நொடிக்கும் இடையில் நடப்பது எதுவும் உண்டா? மைக்ரான் உலகம் உருவானது அதில் பிரவேசிக்க நுண்ணுயிர்கள் தோன்றியது மில்லி மீட்டர் தூரத்தை மில்லி செகண்டுகள் கடந்தன பல கோடி இடையீடுகளை என் கைபேசி ராட்சன்…
மேலும் வாசிக்க -
Apr- 2019 -5 April
சம்ஹாரம்
மனமிருந்தது தளிர் இலையாய் இதம் தரும் வெம்மை நோக்கி. வார்த்தைகளில்தான் எல்லாமிருக்கிறது எவ்விதக் கூச்சமுமற்று அந்தரங்க மண்டலத்துள் சிநேகிதத்தின் பெயரால் கம்பளிப் பூச்சுகளாய். நம்பிக்கைகளைச் சிதைக்கும் துரோகத்தின் கத்திகள் எப்போதுமிருந்ததில்லை என்னிடம். அன்பின் அனர்த்தக் கற்பிதங்களால் கொதிக்கும் உலோகக்குழம்பாய் வழிகிறது. சுரம்பாவிய…
மேலும் வாசிக்க -
5 April
தேங்காய் கிட்டங்கி
எச்சிலில் முக்கியுருவிய நூலாக நிற்கும் கடப்பாரை கூர்மைகளினால் பிரசவம் பார்க்கின்றன நிறைய உள்ளங்கைகள். நாளுக்கு 1000 பார்த்தால் 500/- கூலி. ரேகைகள் மங்கிய கருத்தயிலைகளின் முதுமை சாயல் கைகளுக்கு. பாறைகளை உரித்து கொத்தான கைரேகை நார்களோடு பிரசவிக்கப்படும் நீர் உருண்டைப் பிள்ளைகளுக்கு கங்குநார்; மொட்டைக்காய்;…
மேலும் வாசிக்க -
5 April
கரைகாணா இருள்வெளி
அகாத வெளியில் அற்புதங்கள் நிகழ்த்தவியலா யட்சிணிகளின் அலறல்களில் விரகம் கொள்ளும் வாயூரிஸ வியாதியஸ்தர்கள் நிறைந்த நாடிது… தண்ணொளி வீசும் முன்னே வெண்ணிலவின் தளிருடலை புண்ணாக்கி மோகம் கொள்ளும் ஓநாய்களின் கூட்டமிது… காடிழந்த வேழத்தின் கதறல்களையும் கண்ணீரினையும் துடைக்காது அதன்…
மேலும் வாசிக்க