கவிதைகள்

  • Apr- 2019 -
    5 April

    விலா எலும்புகள் 

    அவனிடமிருந்து உடைத்தெடுத்த விலா எலும்புகளின் வயிற்றில் பிரபஞ்சம் ஊறுவதைப் பார்த்தவுடன் வானத்துப் புத்தகத்தில் ஏதோ எழுதுவதற்காக சென்றுவிட்டார் கடவுள் விலா எலும்புகளின் வயிற்றை முதுகெலும்பை உடைத்துக் குத்தினான் வழிய ஆரம்பித்த கடலில் நிறைந்து பெருகின மீன்குஞ்சுகள் முளைத்த குரலை கழுத்து எலும்புகளால்…

    மேலும் வாசிக்க
  • 5 April

    நீங்கள் கேட்டவை

    இன்னமும் புன்னகையோடே இருக்கிறாள் அந்தப்புன்னகை தெய்வாம்சத்தின் குறியீடு.   அவள் சுருக்குபையில் கல்போட்டு எதுகேட்டாலும் கிடைத்துவிடும் அது சக்திமான் ஸ்டிக்கரோ நீல கலர் சர்ட்டோ இனிப்பு-புளிப்பு மிட்டாயோ?? எது கேட்டாலும் கிடைத்துவிடும்.   கல் எதுக்கு பாட்டி என்றால் மறக்காம இருக்கய்யா…

    மேலும் வாசிக்க
  • 5 April

    அவள் பூக்களின் சிறுகுறிப்பு

    வெற்று விரல்களின் விசும்பல்கள்  மயக்கும் மாலை பொழுதுக்கு முன்பே பகலை விரட்டி விடும் மாயம் எப்போதாவது கதவாகும்.   கனவுள்ள பிள்ளைக்கு கண் வழியே தூக்கம் வரும் என்ற கூற்றுக்கு குரல் மின்விசிறி மட்டும் தான்.   செய்வன எதுவெல்லாமோ செய்தது தான்…

    மேலும் வாசிக்க
  • Mar- 2019 -
    21 March

    மொரமக்காரன்

    கம்பங்காட்டுக்குள்ள கதிரருக்கும் வேளயில கரவேட்டிக்கார மச்சான் கால்நடயாப் போனீரு   உளுந்தங்காட்டு வழி ஒழவுசெய்யும் வேளயில ஊசித்தூரல் போட கொடப்புடிச்சு நடந்தீரு   நீரு போனபோக்குல உதுத்துவிட்ட கள்ளப்பார்வ மனச உலுக்குதைய்யா பொடம்போட்டு அடிக்குதைய்யா   அச்சு வெல்லத்த எறும்பு மொச்சிருக்க…

    மேலும் வாசிக்க
  • 20 March

    துளி விஷம்

    மயிரின் வேர்க்காலைப் போல ஒரு மெல்லிய அச்சம் ஒரு பருக்கை உட்சென்றால் தீர்ந்துவிடுதலைப் போல ஒரு மெல்லிய பசி செவிலி விரல் நுனியில் கூர்மை கொண்டு தொட்டும் தொடாமல் எடுப்பதைப் போல ஒரு மெல்லிய வலி நோயுற்ற பெண்ணின் எஞ்சிய வனப்பு…

    மேலும் வாசிக்க
  • 20 March

    உமை கவிதைகள்

    உயிர்த்திசை காற்றிலே சுவடு சேர்க்காக் கானுறைப் பட்சியொன்று நேற்றது தொலைத்த கூட்டின் நெடுங்கதை எழுதிச்செல்ல கூற்றுவன் கொடுத்த தீயைக் குளிர்வித்த மழையின் சாரல் ஊற்றிய நீரின் ஈரம் உலர்ந்திடவோர் இறகு உதிர்ந்து சாற்றிடும் துயரம் கேட்டு சயனித்த முகில் விலக்கி தேற்றிட…

    மேலும் வாசிக்க
  • 20 March

    முத்துராசா குமார் கவிதைகள்

     கைம்மாறு    சேந்தியில் கிடந்த பரம்பரை சொளகுகளில் கூட புடைத்து பார்த்தும் எந்த பயனுமில்லை. ஒவ்வொரு முறையும் மென்று தின்னுகையில் பொட்டல்கள் தட்டுப்படத்தான் செய்கின்றன.   எடுத்துப்போட்டு சாப்பிடத் தொடங்கினாலும் உட்கார்ந்தாலும் ஓடினாலும் சாணித் தாள்களில் பரவும் பேனா மையாக கால்களைப்…

    மேலும் வாசிக்க
  • 20 March

    நிறமற்ற நிழல்

    பனிக்கால ஏறு வெயிலை போல மனமெங்கும் நறுமணம் பூசிக்கொள்கிறது உன் நினைவுகளின் சிறு அலைபாயுதல் சிறு ஆறுதல் இருந்தும், எத்தனையோ பதற்றங்கள் நிரம்பியிருக்கிறது உன் நினைவுகள் ஒரு சில நேரங்களில் அவை திடீரென இருளை உண்டாக்குகின்றன அல்லது அந்த இருளில் என்னை…

    மேலும் வாசிக்க
  • 20 March

    எலிகள் பெருகும் நிலவறை

    எலிகள் பெருகிக்கொண்டே இருக்கும் நிலவறைகளில் தானியங்களின் உடைகள் குருதி நாற்றத்துடன் எரியூட்டப்படுகின்றன அருகேயிருந்த சுவர்களில் உடைந்த பனிக்குடங்களின்  நீரெடுத்து விதவிதமாக வரையப்படுகின்றன மண்டியிட்டழும் தானியங்களின் உடல்கள். குறுகிய துளைகளில் வெளியிலிருந்து கண்ணாடி வைத்து பிரதிபலிக்கும் வெளி எலிகளால் பற்றியெரிகின்றன வயல்வெளிகளும் சுற்றியுள்ள…

    மேலும் வாசிக்க
  • 20 March

    தண்டனை

    சிட்டுக் குருவி ஒன்று என் ஜன்னலுக்கு வெளியில் கருவேப்பிலை மரக்கிளை மேல் எதையோ தேடி அங்கும் இங்கும் தலையை திருப்ப…   ”கெட் அப்” என்றாள் ஆசிரியை குருவி ஒன்று இருப்பது தெரியாமல்   வகுப்பு முடிந்து எட்டிப் பார்த்தேன் குருவியோடு ஒரு கருவேப்பிலை பழமும் தொலைந்திருந்தது…!

    மேலும் வாசிக்க
Back to top button