கவிதைகள்
-
Jul- 2019 -31 July
கவிதை- தமிழ் உதயா
மனிதக்காட்டின் வழியே ஒரு காட்டை சுமந்து வந்திருந்தேன் சருகின் சாறறுத்து வேர்வழி சடைத்து விகாரமானாய் பனங்கூடல் என்பது நமக்கேயான தனிச்சொல் உன் வானத்தை நோக்கி என் முற்றத்தில் இரண்டு கதவுகள் ஒன்று தெரியுமா திறப்பது நான் மூடுவது நீ கவிழ்ந்து விடும்…
மேலும் வாசிக்க -
31 July
காலத்தின் இரை
பாம்பொன்றாய் ஊர்ந்து கொண்டிருந்த நினைவுகளை கொத்தித் தின்ன கழுகாய் ஆக வேண்டி இருக்கிறது மேட்டாங்காட்டு மொட்டை மரத்தினடியில் பாம்பின் நிழலாய் மாறிப் போவது ஆயிரங்கால் ஊர்தல்கள் இரை ஆகும் கழுகுக்கெல்லாம் முன்பொரு காலத்து பாம்பின் ஞாபகம் வயதாகி வாழ்வது மொட்டை…
மேலும் வாசிக்க -
31 July
நகரும் நிலம்
லாரியில் நகருகிறது விதைகளற்ற நிலம். இடுக்குகள் வழியே கசிந்து ஓடும் விடாய்க் குருதி மணம் வீசும் மண்ணை சரக் சரக்கென்று குத்துகின்றன சக்கரங்கள் உடைத்துச் சிதறும் பிராந்தி பாட்டில் சில்லுகள். நகரும் நிலம் வழியனுப்பும் வயல்களை வேடிக்கை பார்க்க எழும்போது கால்களை…
மேலும் வாசிக்க -
31 July
கவிதை – ஜான்ஸிராணி
என் கிறங்கிய கண்களில் கோடி கோடி நட்சத்திரப்பரல்கள் தேகமெங்கும் பூத்துக்கிடக்கும் சூரிய சந்திரக்கிரணங்கள் உள்ள எரிமலைகள் மெல்ல உமிழும் காதற்காம லாவாக்கள் உறைந்து கிடந்த காலவெளியில் பிறந்தது நமக்கான ஒற்றைப் பிரபஞ்சம் நீ குனிந்தணைத்து எனை முத்தமிட்ட அந்த Big bang…
மேலும் வாசிக்க -
14 July
அனுராதா ஆனந்த் கவிதைகள்
சின்னுவை முத்தமிட்டவன். சின்னு இறந்து விட்டாள். ஐந்து மணி நேர போராட்டம் சொட்டு சொட்டாக உயிர் இறங்கி வடிந்து விட்டாள் இந்த நள்ளிரவில். தன் பாதங்களையும் முகத்தையும் எந்த வித்யாசமும் இல்லாமல் நக்கி குதூகலிக்கும் சின்னுவிற்கு செயற்க்கை சுவாசம் கொடுக்க முயற்சித்தான்.…
மேலும் வாசிக்க -
14 July
பீட்ரூட் நிறக் காதல்
அப்போதைய எனக்கு பீட்ரூட்டின் அடர் நிறத்திலோர் காதலிருந்தது பட்ட இடமெல்லாம் படரும் அனைத்தையும் நிறம் மாற்றும் அதை கவனித்திருக்கிறீர்களா? தோல் சீவும் போதோ நறுக்கும் போதோ பீட்ரூட்டிலிருந்து கசியும் அந்நிறம் அச்சுறுத்தும் கழுவி கழிவறையில் ஊற்றும் நீரின் நிறத்தை நான் கொன்று…
மேலும் வாசிக்க -
14 July
ஜன்னல் கம்பிகளூடாக வாழ்பவன்
எல்லாரையும் போலதான். இக்கணம் அறையின் தனிமைத் துயரில் யாராவது வந்தால் தேவலாம் போலிருக்கிறது. அப்படி வந்தால் அவரும் சலித்து மீண்டும் தனிமை வேண்டி போகமாட்டாரா என்றிருக்கும். இந்த தனியறையின் ஜன்னல் கம்பிகளின் இடையினூடாக எத்தனை எத்தனை பார்ப்பது? பக்கத்திலிருக்கிற சிறு தேவாலயத்தில்…
மேலும் வாசிக்க -
14 July
பசியற்ற கடல்
குட்டி மீனொன்று காத்திருக்கிறது தொட்டிக்குள் வேடிக்கை பார்க்கும் கண்கள் உணவுத்துகள்கள் நோக்கி நகருமென காற்று இறைக்கும் மனிதனின் வயிற்றுக்குள் நுழைந்து வெளியேறும் அதன் லாவகம் குட்டிக்கரணமடிக்கும் சிறுமியைப் போல வியப்பை அருந்துகிறது அதன் குறுகிய கண்களை தங்க நிறத்தில் மின்னும் செதில்களை…
மேலும் வாசிக்க -
14 July
அங்கிருந்து தான்
அங்கிருந்து தான் இரட்டைப் பிரகாரமுள்ள அழிக்கும் கடவுளுள்ள கிழக்குப் பார்த்த கோயிலின் கிழக்கே, கோயில் குளம் தாண்டின வேப்ப மரம் முன்னிற்கும் மேற்குப் பார்த்த ஓட்டு வீடே அவள் வீடு. அங்கிருந்து தான், இரவு முடிந்து விடிகாலை வரும் வரைக்கும் முந்தைய…
மேலும் வாசிக்க -
14 July
கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளை என்னை அவன் பீடத்தில் கிடத்தியிருக்கிறேன் அவனுடைய கத்தியை என் தூய இருதயம் கூர்தீட்டிக் கொண்டிருக்கிறது அவனுடைய மண்டியிடலுக்காகவும் கண்ணீருக்காகவும் காத்திருக்கிறது கழுத்திலிருந்து வெளிவரவிருக்கும் என் இரத்தம் என் கருவறைச் சூடத்தை அவன் தலையில் ஏற்றி வைக்கிறேன் மூலையில் நிற்கவைக்கப்பட்ட…
மேலும் வாசிக்க