தொடர்கள்

  • Jul- 2023 -
    20 July

    அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 16

    ஊர் சுற்றுவது எனக்குப் பிடிக்கும். பெரிய நகரங்களில் நமது சுயம் தொலைந்துவிடுகிறது. அதுவே பெரிய விடுதலை. புத்தகம், இசைக்கு பிறகு எனக்கு சுற்றுலா மிகவும் பிடிக்கும். பாஸ்டன் வந்த சமயம் கிடைக்கும் விடுமுறைகளில் எங்காவது ஊர் சுற்ற சென்றுவிடுவேன். ஜீப் வந்த…

    மேலும் வாசிக்க
  • 20 July

    அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 15

    சென்னையில் முதன்முதலாக உறவினர்கள் வீட்டைவிட்டு வெளியில் தங்கினேன். இத்தனை வருடங்களில் சென்னையை இவ்வளவு ரசித்ததில்லை. அராத்து அவர்களை முதன்முதலாகச் சந்தித்தேன். அவரைப் பற்றி எனக்கிருந்த அத்தனை பிம்பங்களையும் தகர்த்தெறிந்துவிட்டார். சாரு நிவேதிதா அதிகம் உச்சரித்ததாலே பலருக்கு அராத்தை பிடிக்காமல் போயிருக்கலாம். நானும்…

    மேலும் வாசிக்க
  • 20 July

    அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 14

    இரண்டு மாதம் விடுமுறை. அந்நிய நிலத்திலிருந்து சொந்த நிலத்துக்கு வந்துவிட்டேன். வந்ததன் முதற்காரணம்..குடும்பத்தில் தொடர்ந்து மூன்று மரணங்கள். பொதுவாக இப்படி விடுமுறைக்கு வரும் NRI-க்கள் அனைவரும் அனைத்தையும் முகச்சுளிப்புடன் அணுகுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் நியாயம் எனக்குப் புரிகிறது. எதற்கெடுத்தாலும் மேலைநாடுகளை…

    மேலும் வாசிக்க
  • 20 July

    அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 13

    கொஞ்ச நாளுக்கு முன்னால் இந்திய நண்பர்களுடன் சேர்ந்து இந்திய உணவகத்துக்குச் சென்றிருந்தேன். இந்திய உணவுக்கு நான் அடிமைதான் இருந்தாலும் வீட்டுக்கு அருகிலிருக்கும் தாய்லாந்து உணவகம் என் முதல் தேர்வாக இருக்கும் அல்லது ஜப்பானிய சுஷி உணவகம். அடிக்கடி சுஷி சாப்பிட மாட்டேன்.…

    மேலும் வாசிக்க
  • 20 July

    அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 12

    மேசஸூசட்ஸ் மாகாணத்தில் நார்மன் ராக்வெல்லை (Norman Rockwell) தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. பாஸ்டன்வாசிகள் இவரை அவ்வளவு கொண்டாடுவார்கள். நம்மவர்களுக்கும் ராக்வெல் மிகவும் பரிச்சயம் தான். கார்டூனிஸ்ட் மதன் நடிகர் கமலஹாசனை வரைந்த ஒரு ஓவியம் ராக்வெல்லின் ஓவியத்தை மாதிரியாகக் கொண்டது. ராக்வெல்…

    மேலும் வாசிக்க
  • 20 July

    அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 11

    ப்ளிமத் (Plymouth) நான் வசிக்கும் இடத்துக்கு அருகில் இருக்கிறது. அருகில் என்றால் காரில் சென்றால் அரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். இங்கிருந்துதான் அமெரிக்காவின் வரலாறு தொடங்கியது. மேஃப்ளார் (Mayflower) என்னும் கப்பலில் ஐரோப்பியர்கள் 1620 ஆம் ஆண்டு ப்ளிமத்தில் தரையிறங்கினார்கள். இதைப்…

    மேலும் வாசிக்க
  • 20 July

    அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 10

    நிலம் என்பது பூகோளம் சார்ந்தது மட்டுமல்ல. மனிதர்களும் அவர்களின் கலாசாரமும் நிலம் எனும் வெளியை பல்வேறு விதமாக படைத்தளிக்கிறார்கள். அப்படியாக நான் இப்போது வசிக்கும் ப்ரைன்ட்ரீ (Braintree) பற்றி தேடி வாசிக்க ஆரம்பித்தேன். இதையெல்லாம் உங்களுக்கு ஏன் சொல்ல வேண்டும் என்ற…

    மேலும் வாசிக்க
  • 20 July

    அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 9

    புதிய வருடம் தொடங்குகிறது. என்னுடைய முதல் நாவல் வெளியாகியுள்ளது. நண்பர்கள் வாசித்துக் கருத்துகளைப் பகிருங்கள். நாவலின் பெயர் ‘யூதாஸ்’. ஸீரோ டிக்ரி நடத்திய நாவல் போட்டிக்காக எழுதினேன். நெடும்பட்டியலில் தேர்வாகியது. நான் பெரிதும் விரும்பும் பாஸ்டன் நகரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல்.…

    மேலும் வாசிக்க
  • 20 July

    அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 8

    அர்ஹந்தினாவிலிருந்து வந்திருந்த நண்பன் மேடி பெர்த்தாவின் வீட்டில் தங்கியிருக்கிறான். சென்ற முறை பெர்த்தாவின் வீட்டுக்குச் சென்றிருந்த சமயம் வெகுநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். பெர்த்தா வெளிநாட்டு மாணவர்களைத் தன் வீட்டில் தங்க வைத்துக் கொள்வார்கள். மாணவர்கள் ஆங்கிலத்துடன் கலாசாரத்தையும் கற்றுக்கொள்ள இந்த ஏற்பாடு.…

    மேலும் வாசிக்க
  • 20 July

    அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 7

    கரவாஜியோ அத்தாலியில் லம்பார்டி பகுதியில் இருக்கும் ஒரு நகரம் கரவாஜியோ. மிலான் நகரில்1576 ல் பரவியக் கொள்ளை நோயிலிருந்து தப்பிக்க வந்த பல குடும்பங்களில் ஒன்றுதான் மிக்கேலாஞ்சலோ மேரிஸி த கரவாஜியோவினுடையது. கரவாஜியோவின் ஓவியங்கள் பரோக் (Baroque) பாணியிலானவை என்று வகைப்படுத்துகிறார்கள்.…

    மேலும் வாசிக்க
Back to top button