தமிழ் கவிதைகள்

 • கவிதைகள்

  கவிதைகள் -அன்றிலன்

  கேள்வி அடையும் ஞானம் ஒரு கேள்வியோடு அது தேடும் பதில் ஊருக்குப் பயணப்படுகிறேன். அப்பதில் ஊரின் பாதை அவ்வளவு எளிதாய்க் கிடைக்கவில்லை. எதிர்ப்படும் யாவர் தரும் வழிகளின் வரைபடத்திலும் சமாதானம் அடையவில்லை. அனுமானத்தோடு ஆறேழு ஊர்களின் வழியே கடந்தாயிற்று பின்னொரு நாளில்…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- அருணா சுப்ரமணியன்

  வரம் துளையாகத் தான் வாய்ப்பதெனில் நீ ஏந்தியிருக்கும் மூங்கிலில் எனை துளைத்திடு…. உன்விரல் தொடும் துளைகளை விடவும் இதழ் குவியும் அத்துளையாகும் வரம் கொடு.. பிழையான பிறப்பில் பிழைப்பதை விட உன் சுவாசத்தின் ஸ்பரிசத்தில் இசையாகி பிழைத்திருக்கிறேன்.. ********** ஆதாரங்கள் ஓட்டப்…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- அனாமிகா

  பரிசுத்தம் நான் கைகளை கழுவிக்கொண்டேயிருக்கிறேன் அதிகபட்சம் இரண்டுமணி நேரமாக கைகளை கழுவிக்கொண்டிருக்கிறேன் நாளுக்கு பத்துப்பதினைந்து முறை கழுவுகிறேன் இதுவொரு நோய் சுத்தப்படுத்துதலில் இருக்கும் அதீதம் எனை அந்தரங்கமாய் ஆசுவாசப்படுத்துகிறது முகத்தில் தொடங்கி என் மர்ம உறுப்புவரை இப்படி தண்ணீரில் நனைப்பது விசேஷமாய்…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- க.ரகுநாதன்

  ஆறு இலக்க எண் உன் முகநூல் கணக்கு எதுவென்று தேடியதில்லை. இன்ஸ்டாவில் உன் ஐடி என்ன? மொபைல் எண்ணே இல்லை என்றான பின் வாட்ஸ் அப்புக்கு வாய்ப்பே இல்லை. ட்விட்டரிலோ எனக்கு கணக்கில்லை. டெலிகிராமில் இருப்பாயோ? ஆடி மகிழ்ந்து விடியோ போடும்…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- ப.மதியழகன்

  எதிரொலி கனவுலக கடவுளுக்கு நன்றி பூமியில் நான் இளைப்பாற முடிவதில்லை நினைவுச் சங்கிலி இல்லையென்றால் புவிவாழ்க்கையும் கனவு போலத்தான் விழித்ததும் கனவென்று தெரிந்தவுடன் இன்னும் கொஞ்ச நேரம் வாழ்ந்திருக்கலாமே என்று தோன்றுகிறது கனவுக்கடலிருந்து அன்றாடம் ரதிகள் எழுந்து வருகிறார்கள் கனவுக்கும் நனவுக்கும்…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- கா. சிவா

  வேண்டாம் எதிர்வரும்போது வெட்டிச்செல்லும் மின்பார்வை இல்லை, மணிக்கொருமுறை முகம்நோக்கி பதறுவதும் இல்லை, அவ்வப்போது திடுக்கிட வைக்கும் வெடுக்நடையும் இல்லை… அவள் அருகில்லா இப்பொழுதில்.. வெளியெங்கும் விரவியுள்ளது அவள் விழியின் ஒளி.. மனதெங்கும் நிறைந்துள்ளது அவளின் இதமான வாசம்.. முகிலென மிதக்க வைக்கிறது…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- நந்தாகுமாரன்

  இலை ரேகை ஜோசியம் தலையகல மஞ்சள் செம்பருத்தியின் யோனியில் கிடக்கிறது என் மனம் மகரந்தச் சேர்க்கையின் மயக்கத்தில் நீள அலகு வெண்கொக்கின் நடுவிழியில் கிடக்கிறது உன் பார்வை இன்னும் காமத்தைச் சொல்லாத தயக்கத்தில் உருளைவிழி புல்நுனித் தும்பியின் செவிநுனியில் நகர்கிறது கருப்பு…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- யாழ் எஸ் ராகவன்

  தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெருநகரம்கருப்பு துணி போர்த்திய நேரம் வானவில் உடுத்தியிருந்த முதியவளின் புன்னகை ஆயசம் நிறைந்தது பேரம் முடிந்த சம்போகத்தின் தடையாக தொங்கியபடி வெளிச்சம் கசிகிறது சோடியம் விளக்கு கூடுதலாக வருமானம் எதிர்பார்த்த ஆட்டோ ஓட்டுநர் சாவுகிராக்கி ஒருவனின் வாந்தியை…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- பூவிதழ் உமேஷ்

  அவரவர் முகம் சதுரத்தின் மீது ஒரு சிலுவை விழுந்ததும் உலகின் கருணை மிகுந்த செவ்வகங்கள் உருவாயின ஒன்றில் தேவன் ஒன்றில் சாத்தான் மற்ற இரண்டிலும் குழந்தைகள் என நின்றார்கள்- ஏதோ அளவெடுக்க வந்த கணக்கு ஆசிரியர் சிலுவையை அருகிலிருந்த வட்டத்தின் மீது…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- அமுதசாந்தி

  ஓயாது பேசிய இதழ்களுக்கு உரையாட மொழி தீர்ந்திற்று காரணமறியா நிராகரிப்பின் காயங்களுக்கு மருந்தில்லை உன் விருப்பம் எதுவாயினும் மறுதலித்து பழக்கமில்லை அவ்வாறே பிரிந்திட்டாலும் ஓங்கியடிக்கும் நினைவலையில் உடைந்து ஒதுங்குகிறது மனம் தொட்டுத் தீண்டிய கரங்கள் என்றாவது எனை நோக்கி நீளுமென்ற நப்பாசையில்…

  மேலும் வாசிக்க
Back to top button